சீனாவில் உருவாகி, இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த வைரஸினால் 200க்கும் அதிகமானவர்கள் கண்காணிப்பிற்காக வைத்தியசாலைகளில் அனுமதிகப்பட்டுள்ளதுடன், இதில் 80 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக உலகம் முழுவதும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில போட்டிகள் காலவரையறையின்றி இரத்து செய்யப்பட்டுவிட்டன

இலங்கையர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் அறிவுரை

முழு இலங்கையினையும் கொரோனா…..

கிட்டத்தட்ட அடுத்த ஓரிரு மாதங்களுக்கு எந்தவொரு சர்வதேச போட்டிகளும் கிடையாது என்ற நிலைமை உருவாகிவிட்டது.

இந்நிலையில் இலங்கையிலும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் பெரும்பாலான விளையாட்டு சங்கங்கள் கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்திற்கொண்டு தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

இதனால் கடந்த வாரமே, நாட்டில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டுகளும், பயிற்சி முகாம்களும் ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் உள்ள தேசிய ஒலிம்பிக் இல்லத்தின் தலைமை அலுவலகம் மூடப்பட்டது

இதனால் ஊழியர்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்தபடி பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகடந்த ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தல் வெற்றிகரமாக நடைபெற்றது

கிரிக்கெட்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மார்ச் 19ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவிருந்த இலங்கைஇங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பிற்போடப்பட்டது.

அத்துடன், இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைத்தலைவர் பதினொருவர் அணிகளுக்கிடையில் நடைபெற்றுவந்த நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியும் இடைநிறுத்தப்பட்டது

இதுதவிர, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தையும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது

இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில், இலங்கையின் பிரிவு A, B அணிகள் பங்குபெறுகின்ற ப்ரீமியர் லீக் முதல்தரக் கிரிக்கெட் தொடர்கள் இடைநிறுத்தப்பட்டன

இம்முறை பருவகாலத்துக்கான கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான ஆட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சுப்பர் 8 சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் இரத்து

கொரோனா வைரஸ் பீதியானது…….

அத்துடன், இலங்கையின் 13, 19 வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த பாடசாலை அணிகள் பங்குபெறும் பாடசாலை கிரிக்கெட் தொடர்களை இரத்துச் செய்ய பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், வருடாந்தம் நடைபெறுகின்ற பாடசாலைகளுக்  கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்களும் (பல போட்டிகள் நடந்து முடிந்தன) ஒத்திவைக்கப்பட்டன.

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவிருந்த எம்.சி.சி அணிக்கும், பிராந்திய சம்பியன் எசெக்ஸ் அணிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியையும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் இரத்து செய்தது

கால்பந்து

கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தலினால்வடகொரியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான 2022 கட்டார்உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் இரண்டாம் கட்டமோதல் உட்பட அனைத்து தகுதிகாண் போட்டிகளும்பிற்போடப்பட்டுள்ளன.  

இலங்கை அணி வடகொரியாவை பியொங்கியாங் விளையாட்டரங்கில் மார்ச் 26ஆம் திகதியும், தென்கொரியாவை கொழும்பில் மார்ச் 31ஆம் திகதியும், லெபனானை ஜூன் 20ஆம் திகதியும் எதிர்த்தாடவிருந்தது

இதுஇவ்வாறிருக்க, பெத்தகானவில் அமைந்துள்ள தேசிய கால்பந்து பயிற்சி மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தேசிய கால்பந்து அணியின் பயிற்சி முகாமை விளையாட்டுத்துறை அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக இடைநிறுத்தி அந்த வீரர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…..

இதேநேரம், இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பொஸ்னியாவைச் சேர்ந்த அமீர் அலெஜிக்கை தொடர்ந்து நாட்டில் தங்கவைப்பதற்கும் நடவடிக்கை எடுக்ககப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலைப்பந்தாட்டம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தென்கொரியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 12ஆவது ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.  

இதன்படி, ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரை இலக்காகக் கொண்டு நடைபெற்று வந்த பயிற்சி முகாம்கள் அனைத்தையும் எதிர்வரும் ஒரு மாதத்துக்கு இரத்து செய்வதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரை முன்னிட்டு கடந்த 2 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்துபயிற்சிகளை எடுத்து வந்த அனைத்து வீராங்கனைகளையும் உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…..

கரப்பந்தாட்டம்

மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் மார்ச் மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருந்த ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்க இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் சுப்பர் லீக் சுற்றின் இறுதிப் போட்டி (ஆடவர், மகளிர்) மற்றும் அறிமுக அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி (ஆடவர், மகளிர்) என நான்கு போட்டிகள் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனா பீதியினால் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கொழும்பு மற்றும் ஹெய்யன்துடுவேயில் முன்னெடுக்கப்பட்டு வந்த நான்குதே சிய கரப்பந்தாட்ட அணிகளுக்கான தேர்வுகளை உடனடியாக இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இந்த அணிகள் நான்கும் எதிர்வரும் ஜூன் மாதம் ஈரானில் நடைபெறவிருந்த 20 வயதுக்குட்பட்ட ஆசிய கரப்பந்தாட்டத் தொடர், கஸகஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய சம்மேளன கிண்ண கரப்பந்தாட்டத் தொடர், ஆகஸ்ட் மாதம் ஹொங்கொங்கில் நடைபெறவிருந்த மகளிருக்கான ஆசிய சம்மேளன கிண்ண கரப்பந்தாட்டத் தொடர் மற்றும் ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் நடைபெறவிருந்த ஆசிய கடற்கரை கரப்பந்தாட்டத் தொடர்களுக்காக இலங்கை அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுவந்தன.  

றக்பி

கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடத்துக்கான டயலொக் றக்பி லீக் தொடரின் மூன்றாம் கட்டமான சுப்பர் சுற்றை கைவிடுவதற்கு இலங்கை றக்பி சம்மேளனம் நடவடிக்கைஎடுத்தது

இதன்படி, இரண்டு சுற்றுக்களின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட கண்டி விளையாட்டுக் கழகம் இம்முறை டயலொக் றக்பி லீக் தொடரின் சம்பியனாக அறிவிக்கப்பட்டது.  

எட்டு கழகங்கள் இரண்டு சுற்றுக்களில் ஆடிய டயலொக் றக்பி லீக் சுற்றுப் போட்டியில் கண்டி கழகம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு தொடர்ச்சியாக 6ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றமை சிறப்பம்சமாகும்.  

இதுஇவ்வாறிருக்க, ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறவிருந்த டயலொக் க்ளிபர்ட் கிண்ண நொக்அவுட் போட்டிகள் கொரோனா வைரஸின் நிலைமையைக் கருத்திற்கொண்டு பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் என இலங்கை றக்பி சம்மேளனம் அறிவித்துள்ளது.

கொரோனா பிடியில் ஒலிம்பிக்: அதிரடி தீர்மானத்துக்கு தயாராகும் ஜப்பான்

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ்……

இதேநேரம், கடந்த இரண் டு வாரங்களாக நடைபெற்று வந்த பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட டயலொக் கிண்ண றக்பி போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு இலங்கை பாடசாலைகள் றக்பி சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மெய்வல்லுனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் மாதங்களில் நடைபெறவிருந்த மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் மற்றும் தற்போது முன்னெடுத்து வருகின்ற பயிற்சி முகாம்களை இரத்து செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிக்கான தெரிவுப் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன

அத்துடன், ஆசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனையை தற்காலிமாக ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், புதுடெல்லியில் ஏப்ரல் 10ஆம் திகதி முதல்13ஆம் திகதி வரை நடைபெறவிருந்த இந்திய மெய்வல்லுனர் சம்மேளன வெற்றிக் கிண்ண போட்டிகளில் இலங்கை அணி கலந்துகொள்ளாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும்விளையாட்டு செய்திகளைப் படிக்க<<