இலங்கையர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் அறிவுரை

85

முழு இலங்கையினையும் கொரோனா வைரஸ் பீதி ஆட்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கமும், இலங்கையின் சுகாதாரத்துறையும் இந்த வைரஸ் பரவுவதனை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. 

கொரோனா அச்சம் : தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் ரொஷான் மஹாநாம

பாகிஸ்தானில் இருந்து………

அதன்படி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இலங்கையில் இன்றிலிருந்து (20) அடுத்த இரண்டு நாட்களுக்கும் அமுலாகுமாறு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பணிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், வைத்திய அதிகாரிகளும் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்களை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றனர். 

விடயங்கள் இவ்வாறு இருக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும், தற்போதைய  வீரர்களும் நாட்டு மக்களை மிகவும் அவதானமாகவும், விழிப்புடனும் இருக்குமாறு தங்களது சமூக வலைதள கணக்குகள் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். 

இதில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன, அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் வைத்தியர்களின் அறிவுரைக்கு அமைவாக பொது மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பணிவன்புடன் கேட்டிருக்கின்றனர்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான சனத் ஜயசூரிய மக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்திருந்ததோடு, மக்கள் நோய்த் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள போதுமான ஒத்துழைப்பு வழங்குமாறு குறிப்பிட்டிருந்தார். 

;

அதேநேரம் இலங்கை அணியின் மற்றுமொரு அதிரடி துடுப்பாட்டவீரரான திசர பெரேரா, பொதுமக்களை வெளியில் சென்று நடமாடுவதையும், கூட்டம் கூடுவதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறு சிறு வீடியோ காணொளி ஒன்றின் மூலம் குறிப்பிட்டிருந்தார்.

இவர்கள் தவிர திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் ஆகியோர் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தினை உணர்த்தியிருந்தனர். 

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 65 பேர் நோயாளிகளாக இனங்காணப்பட்டிருப்பதோடு, நோயாளிகளாக சந்தேகிக்கப்படும் 218 பேர் வரையில் தனிப்படுத்தல் முகாம்களில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<