ஐசிசி ஒருநாள் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமனம்

ICC Awards  

38
ICC Awards  

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐசிசி) அறிவிக்கப்பட்ட 2024 ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கை வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி, ஐசிசி இனால் அறிவிக்கப்பட்ட 2024 ஒருநாள் கிரிக்கெட் அணியில் சரித் அசலங்க தவிர, வனிந்து ஹஸரங்க, பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் 3ஆம் இலக்க வீரராக பெதும் நிஸ்ஸங்கவும், 4ஆம் இலக்க வீரராக குசல் மெண்டிஸும், 5ஆம் இலக்க வீரராக சரித் அசலங்கவும், 8ஆம் இலக்க வீரராக வனிந்து ஹஸரங்கவும் இடம்பெறுகின்றனர்.

இருப்பினும், இந்த அணியில் எந்த இந்திய வீரர்களும் இடம்பெறவில்லை, அதேபோல, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய பலம் வாய்ந்த அணிகளின் வீரர்களும் இடம்பெறவில்லை.

இதனிடையே, ஐசிசி இனால் அறிவிக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான 11 பேர் கொண்ட ஒருநாள் அணியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலா 3 வீரர்கள், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஒரு வீரரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சர்வதேச கிரிக்கெட் பேரiவியினால் அறிவிக்கப்பட்ட 2024 மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஐசிசி 2024ஆம் ஆண்டின் ஆண்கள் ஒருநாள் அணி விபரம்

1. சயீம் அய்யூப் (பாகிஸ்தான்) – 9 போட்டிகள், 515 ஓட்டங்கள், 113 அதிகபட்ச ஓட்டங்கள், 64.37 துடுப்பாட்ட சராசரி, 105.53 ஸ்ட்ரைக் ரேட், 3 சதங்கள், 1 அரைச் சதம்

  1. ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) – 11 போட்டிகள், 531 ஓட்டங்கள், 121 அதிகபட்ச ஓட்டங்கள், 48.2 சராசரி, 89.7 ஸ்ட்ரைக் ரேட், 3 சதங்கள், 2 அரைச் சதங்கள்
  2. பெதும் நிஸ்ஸங்க (இலங்கை) – 12 போட்டிகள், 694 ஓட்டங்கள், 210 அதிகபட்ச ஓட்டங்கள், 63.1 துடுப்பாட்ட சராசரி, 106.4 ஸ்ட்ரைக் ரேட், 3 சதங்கள், 2 அரைச் சதங்கள்
  3. குசல் மெண்டிஸ் (விக்கெட் காப்பாளர்) (இலங்கை) – 17 போட்டிகள், 742 ஓட்டங்கள், 143 அதிகபட்ச ஓட்டங்கள், 53.0 துடுப்பாட்ட சராசரி, 90.6 ஸ்ட்ரைக் ரேட், ஒரு சதம், 6 அரைச் சதங்கள்
  4. சரித் அசலங்க (இலங்கை) – 16 போட்டிகள், 605 ஓட்டங்கள், 101 அதிகபட்ச ஓட்டங்கள், 50.2 துடுப்பாட்ட சராசரி, 97.1 ஸ்ட்ரைக் ரேட், ஒரு சதம், 4 அரைச் சதங்கள்
  5. ஷெர்பாபன் ரூதர்ஃபோர்ட் (மேற்கிந்தியத் தீவுகள்) – 9 போட்டிகள், 425 ஓட்டங்கள், 113 அதிகபட்ச ஓட்டங்கள், 106.2 துடுப்பாட்ட சராசரி, 120.1 ஸ்ட்ரைக் ரேட், ஒரு சதம், 4 அரைச் சதங்கள்
  6. அஸ்மதுல்லா உமர்சாய் (ஆப்கானிஸ்தான்) – 12 போட்டிகள், 417 ஓட்டங்கள், 149 அதிகபட்ச ஓட்டங்கள், 52.1 துடுப்பாட்ட சராசரி, 105.6 ஸ்ட்ரைக் ரேட், ஒரு சதம், 3 அரைச் சதங்கள், 17 விக்கெட்டுகள், 4/18 சிறந்த பந்துவீச்சு
  7. வனிந்து ஹஸரங்க (இலங்கை) – 10 போட்டிகள், 26 விக்கெட்டுகள், 15.6 பந்துவீச்சு சராசரி, 7/19 சிறந்த பந்துவீச்சு
  8. ஷஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) – 6 போட்டிகள், 15 விக்கெட்டுகள், 17.6 பந்துவீச்சு சராசரி, 4/47 சிறந்த பந்துவீச்சு
  9. ஹாரிஸ் ரவூப் (பாகிஸ்தான்) – 8 போட்டிகள், 13 விக்கெட்டுகள், 22.4 பந்துவீச்சு சராசரி, 5/29 சிறந்த பந்துவீச்சு
  10. ஏ.எம் கசான்ஃபார் (ஆப்கானிஸ்தான்) – 11 போட்டிகள், 21 விக்கெட்டுகள், 13.57 சராசரி, 6/26 சிறந்த பந்துவீச்சு

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<