பாக். வீரர் மொஹமட் ஹபீஸுக்கு இங்கிலாந்தில் பந்துவீச தடை

136

விதிமுறைக்கு மாறாக பந்துவீசிய புகாரில் பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரரான மொஹமட் ஹபீஸுக்கு இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான 39 வயதுடைய மொஹமட் ஹபீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும், அவர் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

நஷீம் ஷாவின் அபார பந்துவீச்சுடன் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான..

மொஹமட் ஹபீஸ் விதிமுறைகளுக்கு மாறாக பந்து வீசுவதாக கடந்த 2005 முதல் குற்றம் சாட்டப்பட்டு, .சி.சி பரிசோதனைகளுக்கு பின்பு மீண்டும் பந்துவீச அனுமதி பெறுவது வாடிக்கையாக உள்ளது.  

இந்த நிலையில், ஏபி டி வில்லியர்ஸுக்குப் பதிலாக இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் கழகத்துக்காக தற்போது விளையாடி வருகின்ற மொஹமட் ஹபீஸ், சமர்செட் அணிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி டான்டன்னில் நடைபெற்ற போட்டியில் முறையற்ற பந்துவீச்சு புகாருக்கு உள்ளானார். 

இந்தப் புகாரை அடுத்து லோபோரா பல்கலைகழகத்தின் பரிசோதனைக்கு உள்ளான ஹபீஸ், விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது நிரூபணமாகி, தற்போது இங்கிலாந்தின் உள்ளூர் கழகமட்டப் போட்டிகளில் பந்துவீச அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுு.

இந்த நிலையில், குறித்த பரிசோதனை முடிவை ஏற்பதாக தெரிவித்துள்ள மொஹமட் ஹபீஸ், மறுபடியும் .சி.சி பரிசோதனைக்கு உட்பட்டு தன்னை நிரூபிப்பேன் என்றும் மீண்டும் இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் பந்துவீசுவேன் என்றும் குறிப்பிட்டள்ளார். 

பந்து வீச்சுத் தடையை எதிர்கொண்டிருந்த இவர் இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் பந்துவீச அனுமதிக்கப்பட்டார். எனினும், அதே வருடம் நவம்பரில் நியூசிலாந்து அணிக்கெதிராக அபுதாபியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஹபீஸ் பந்துவீசியிருந்ததுடன், அவரது பந்துவீச்சுப் பாணி முறையற்றதாக உள்ளது என போட்டியின் பிறகு ரொஸ் டெய்லர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் சிரேஷ் வீரர்களின் ஒருவரான மொஹமட் ஹபீஸ், இதுவரை 55 டெஸ்ட், 218 ஒருநாள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  

இம்முறை மிட்ல்செக்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 115 ஓட்டங்களைக் குவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<