அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு புதிய வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர்

32
Adam Griffith

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சுப்பயிற்சியாளராக அடம் கிரிப்(f)பித் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

>>இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை U19 மகளிர் அணி தோல்வி<<

அவுஸ்திரேலியாவின் முன்னாள் முதல்தரக் கிரிக்கெட் வீரரான அடம் கிரிப்(f)பித் தன்னுடைய தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையின் பின்னர் பயிற்சியாளராக செயற்பட்டு வரும் நிலையில் அவருக்கு புதிய பொறுப்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது 

அடம் கிரிப்(f)பித் கடந்த காலங்களில் மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் பேர்த் ஸ்கோச்சர் அணிகளுக்கு உதவி பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினை கொண்டிருப்பதோடு, 2024ஆம் ஆண்டு IPL தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் உதவி பயிற்சியாளராக செயற்பட்டிருக்கின்றார் 

அதேவேளை புதிய பொறுப்பினை ஏற்றிருக்கும் அடம் கிரிப்(f)பித் பிரிஸ்பேனில் அமைந்திருக்கும் தேசிய கிரிக்கெட் நிலையத்தில் இருந்து தனது சேவைகளை ஆரம்பம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<