நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினத்தை கொழும்பில் கொண்டாடிய தென்னாபிரிக்க அணி

179

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி வீரர்கள், தங்களது முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலாவின் 100ஆவது பிறந்த தினத்தை கொழும்பு சுந்தத்திர சதுக்கதத்தில் நேற்று (18) கொண்டாடியுள்ளனர்.

மூன்று நாட்களுக்குள்ளேயே தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியினை முடித்த இலங்கை

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள்..

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த போட்டித் தொடருக்காக இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க அணி, காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து, கொழும்பை வந்தடைந்துள்ளனர். நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக கொழும்புக்கு வருகைத்தந்துள்ள தென்னாபிரிக்க அணியினர் நேற்று நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக கொழும்பு சுந்தத்திர சதுக்கத்துக்கு வருகை தந்தனர்.

தென்னாபிரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரான நெல்சன் மண்டேலா, நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவர். அத்துடன் நிறவெறிக்கு எதிராக அகிம்சை மற்றும் ஆயுதம் என இரண்டு வழிகளிலும் பேராடிய இவர், உலக மக்களால் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார்.  கடந்த 2015ஆம் ஆண்டு தனது 95 வயதில் மண்டேலா உயிரிழந்த போதிலும், அவரின் பிறந்த தினம் மக்களால் வருடாந்தம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையும் ஏபி டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற..

இந்நிலையில் தென்னாபிரிக்க அணி வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதால், இம்முறை நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினத்தை கொழும்பில் கொண்டாடினர். இந்த நிகழ்வில் தென்னாபிரிக்க அணி வீரர்களுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்க  உயர்ஸ்தானிகர் ரோபினா மார்க்ஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டார்.

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை (20) கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<