ஐ.சி.சி. விதிமுறைகளுக்கு அமைய இந்தியாவின் சம்பியன்ஸ் கிண்ண ஜேர்சி

Champions Trophy 2025

32
Champions Trophy 2025

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) விதிமுறைகளுக்கு அமைய சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஜேர்சி அமையும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதி செய்துள்ளது.

>>இலங்கை – ஆஸி. டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

அடுத்த மாதம் ஆரம்பமாகும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமத்தினை பாகிஸ்தான் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா பங்கெடுக்க மறுப்புத் தெரிவித்திருந்ததது. இதனையடுத்து இந்தியா சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஆடும் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டிருந்தன.

விடயங்கள் இவ்வாறு காணப்பட்டிருக்க பாகிஸ்தானின் பெயர் தாங்கிய சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலட்சினையை (Logo) இந்தியா தமது ஜேர்சியில் பதிவிடாது என தகவல்கள் வெளியாகின. இந்த விடயம் பூதாகரமானதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தாம் ஐ.சி.சி. இன் விதிமுறைகளுக்கு அமைய தமது ஜேர்சியில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலட்சினையை பதிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியின் ஜேர்சியில் பாகிஸ்தானின் பெயர் தாங்கிய சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலட்சினை காணப்பட இனிமேல் தடை இருக்காது என நம்பப்படுகின்றது.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போட்டிகள் பெப்ரவரி 19 தொடக்கம் மார்ச் 09 வரை நடைபெறவுள்ள நிலையில், தொடரின் ஆரம்ப நிகழ்வுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹிட் சர்மா பாகிஸ்தான் செல்வதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகின்றது.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<