150 விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவதே எனது இலக்கு – சுரங்க லக்மால்

1352

ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வருவதற்கு பல கஷ்டங்களையும், இன்னல்களையும் சந்திக்க நேரிட்டதாகத் தெரிவித்த இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால், மிக விரைவில் 150 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார். 

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (15) நிறைவுக்கு வந்தது.

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட டிக்வெல்ல, லக்மால்

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட்……

தமது முதல் இன்னிங்ஸை இன்று தொடர்ந்த  நியூசிலாந்து அணி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுக்களை மளமளவென பறிகொடுத்தது.

இறுதியில் நியூசிலாந்து அணி, 83.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை எடுத்தது. வேகப் பந்துவீச்சில் மிரட்டிய லக்மால், 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ஓட்டங்களை எடுத்தது. நிரோஷன் டிக்வெல்ல 39 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாள் ஆடுகளம் குறித்து எழுப்பிய கேள்விக்கு சுரங்க லக்மால் கருத்து தெரிவிக்கையில், “உண்மையில் நேற்றை விட இன்று ஆடுகளத்தில் பந்து சுழல்வதை விட சற்று பௌண்ஸர் காணப்பட்டது. முதல் நாளில் ஆடுகளம் சற்று ஈரலிப்புடன் காணப்பட்டது. மறுபுறத்தில் நான் நேர்த்தியாக பந்துவீசுவும் இல்லை. 

எனினும், இன்று சற்று வெப்பநிலை இருந்ததால் ஆடுகளம் சற்று உலர்ந்து காணப்பட்டது. இதனால் அதிகளவு பௌண்சர்களை காணமுடிந்தது. எனவே அதற்காக வேறு திட்டத்துடன் களமிறங்கினேன். இறுதியில் நல்லதொரு பிரதிபலனைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

எது எவ்வாறாயினும், காலி ஆடுகளம் என்பதால் போட்டியின் 3 ஆவது மற்றும் 4 ஆம் நாள் ஆட்டங்களின் போது இன்னும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும்” என தெரிவித்தார். 

இதேநேரம், அண்மைக்காலமாக துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து வருகின்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு சுரங்க லக்மால் பதிலளிக்கையில்,

புதிய பந்துவீச்சுப் பாணியை நான் மிகவும் விரும்புகிறேன் – அகில தனன்ஜய

எனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு மீண்டும்….

“நிறைய பேர் எனக்கு துடுப்பாடக்கூடிய திறமை உண்டு என கூறுகின்றனர். எனினும், கடந்த ஒன்றரை வருடங்களாக ஒவ்வொரு போட்டித் தொடருக்கும் பின்னர் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் துடுப்பாட்ட பயிற்சியாளரின் உதவியுடன் வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். துடுப்பாடுகின்ற திறமை என்னிடம் உண்டு. அணிக்குத் தேவையான நேரத்தில் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க நிச்சயம் துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்ததன் காரணமாகவே இதில் அதிகம் கவனம் செலுத்தினேன்” என்றார்.

இந்த நிலையில், நாளை மூன்றாம் நாள் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “நாளை புதியதொரு நாள். பெரும்பாலும் அவர்கள் புதிய பந்தை எடுப்பார்கள். நிச்சயம் காலையில் அவர்கள் வேகப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி எஞ்சிய விக்கெட்டுக்களைக் கைப்பற்ற முயற்சி செய்வார்கள். எனவே முதல் 10 ஓவர்களில் நிதானத்துடன் விளையாடுவது தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும்” என தெரிவித்தார். 

இதேநேரம், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொண்டீர்கள் என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், 

“நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என நானும், டிக்வெல்லவும் கதைத்துக் கொண்டோம். அதேபோல, இலகுவான பந்துகளை மாத்திரம் வேகமாக அடித்தாடி ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என நிரோஷன் டிக்வெல்லவும், நானும் அடிக்கடி பேசினோம். 

உண்மையில் அவர் நிறைய அறிவுரைகளை எனக்கு வழங்கியிருந்தார். ஒருகட்டத்தில் விக்கெட்டை பறிகொடுக்காமல் நான் என்னால் முடியுமான அளவு ஓட்டங்களைக் குவிப்பேன் எனவும், அவருக்கு முடியுமான அளவு ஓட்டங்களைக் குவிக்கும் படியும் நான் சொன்னேன். 

எது எவ்வாறாயினும், நாளை காலை சற்று நிதானத்துடன் விளையாடி நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை முந்துவதற்கு முயற்சி செய்வோம்” என தெரிவித்தார்.

இறுதியாக 150 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுக்கின்ற நம்பிக்கை உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சுரங்க லக்மால் பதிலளிக்கையில், 

கொல்கத்தா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ப்ரெண்டன் மெக்கலம் நியமனம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும்…..

உண்மையில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் இந்த நிலைக்கு நான் வந்தேன். எனவே மிக விரைவில் 150 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சமிந்த வாஸுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வேகப் பந்துவீச்சாளராக 2 ஆவது இடத்தில் உள்ளேன். எனவே 150 டெஸ்ட் விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டுவதென்பது மிகவும் சவாலானது. அந்த இலக்கை எப்படியாவது அடைவதற்கு முயற்சி செய்வேன்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<