புதிய பந்துவீச்சுப் பாணியை நான் மிகவும் விரும்புகிறேன் – அகில தனன்ஜய

1764
Akila Dhananjaya

எனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் எனது பந்துவீச்சுப் பாணியில் மிகப் பெரிய மாற்றமொன்றை நான் செய்யவில்லை என இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஞய தெரிவித்தார். 

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (14) காலியில் ஆரம்பமாகியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை எடுத்தது.

மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட்…

தனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் தடவையாக இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடிய இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய, 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தார்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு புதிய பந்துவீச்சுப் பாணியுடனான மீள்வருகை குறித்து அகில தனன்ஜய கருத்து வெளியிடுகையில்,

”எனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையில் எனது பந்துவீச்சுப் பாணியில் மிகப் பெரிய மாற்றமொன்றை செய்யவில்லை. இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பியல் விஜேதுங்கவுடன் இணைந்து நிறைய பயிற்சிகளைப் பெற்றேன். எனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொள்ள அவர் நிறைய உதவி செய்தார். நான் எப்போதும் பந்துவீசுகின்ற முறையை வீடியோ எடுத்து பியல் விஜேதுங்கவுக்கு அனுப்பி அதில் உள்ள குறைபாடுகளை கேட்பேன். அதில் குறைகள் இருந்தால் திருத்திக் கொள்வேன்.

எனவே பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்ட பிறகு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றியது மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது” என தெரிவித்தார்.

இதேநேரம், ஆடுகளத்தின் தன்மை குறித்து எழுப்பிய கேள்விக்கு அகில தனன்ஜய கருத்து தெரிவிக்கையில், “முதல் இரண்டு மணித்தியாலங்களில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியது. எனினும், வெயில் வரத் தொடங்கியது முதல் பந்தை சுழலச் செய்வது சற்று கடினமாக இருந்தது. ஆனாலும், சுழல் பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைப்பினை வழங்கியது” என்றார்.

இதனிடையே புதிய பந்துவீச்சுப் பாணியுடன் விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவது இலகுவாக உள்ளதாக என எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

“ஆம். நான் தற்போது பழைய பந்துவீச்சுப் பாணியை மறந்துவிட்டேன். அதேபோல, புதிய பந்துவீச்சுப் பாணியில் மிகப் பெரிய மாற்றமொன்று ஏற்பட்டுள்ளதாக நான் உணரவில்லை. எனக்கு தேவையான அனைத்து பந்துகளையும் நான் உபயோகித்து வருகிறேன். எனவே தற்போதுள்ள பந்துவீச்சுப் பாணியை நான் மிகவும் விரும்புகிறேன். இதற்கு முன் கையை மேலெழுப்பித் தான் பந்துவீசினேன். தற்போது நான் நெஞ்சுக்கு அருகில் கையை வைத்துக் கொண்டு தான் பந்து வீசுகிறேன். அதுமாத்திரம் தான் நான் செய்த ஓரேயொரு மாற்றம்.

புதிய ஜேர்ஸியுடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி..

அதேபோல, விக்கெட் எடுப்பதற்கு நான் எப்போதும் லெக் ஸ்பின் மற்றும் கூக்ளி பந்துகளைத் தான் வீசுவேன். மறுபுறத்தில் ஓப் ஸ்பின் பந்துகளைத் தான் நான் வீசுவேன்” என குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ரங்கன ஹேரத் மற்றும் டில்ருவன் பெரேரா ஆகிய இருவரும் அணியில் இல்லாததால். லசித் எம்புல்தெனியவுடன் இணைந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்ற எவ்வாறான திட்டமொன்றை முன்னெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு அகில தனன்ஜய பதிலளிக்கையில், ”உண்மையில் எமக்கு தெரிந்தவற்றை செய்வதற்கு தான் நாங்கள் திட்டமிட்டோம். அதேபோல, ரங்கன ஹேரத் மற்றும் டில்ருவன் பெரேரா ஆகிய இருவரது இடத்தையும் யாராலும் நிரப்புவதற்கு முடியாது. எமக்கு நாங்களே தான் பயிற்சியாளர்கள். ரங்கன ஹேரத், டில்ருலன் பெரேரா மற்றும் பயிற்சியாளர் பியல் விஜேதுங்க ஆகியோர் அணியில் இருந்தால் இன்னும் சில ஆலோசனைகளைப் பெற்றிருக்கலாம். உண்மையில் அவ்வாறான சூழல் இந்தத் தொடரில் எமக்கு கிடைக்கவில்லை.

எனவே லசித் எம்புல்தெனியவுடன் அடிக்கடி பேசிக் கொண்டு பந்துவீசினேன். நிறைய நல்ல விடயங்களைத் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அது எமக்கு சிறந்த பிரதிபலனையும் கொடுத்திருந்தது” என அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<