உள்ளூர் போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நடராஜன்

121

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (BCCI) வேண்டுகோளுக்கு இணங்க, இளம் வேகப் பந்துவீச்சாளரான தங்கராசு நடராஜனை உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் இருந்து விடுவிக்க தீர்மானம் எடுத்திருப்பதாக தமிழ்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்திருக்கின்றது.

>> பங்களாதேஷில் T20I தொடரில் விளையாடவுள்ள ஆஸி., நியூசிலாந்து

அதன்படி, இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடர்களில் ஒன்றான, விஜய் ஹசாரே கிண்ணத்திற்கான தமிழ்நாட்டு அணியில் இடம்பிடித்த நடராஜன் தற்போது அத்தொடரில் இருந்து விலகியிருக்கின்றார்.

தற்போது இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மார்ச் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஆடுகின்றது.  5 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் என இருக்கின்ற இந்த மட்டுப்படுத்தப்பட்ட தொடர்களில் நடராஜனை விளையாட வைக்கும் நோக்குடனேயே அவருக்கு உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

“இதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கும் தகவல், எங்களுக்கு எழுத்து மூலமான அறிவிப்புக்கள் எதுவும் வாரது போயினும், தேசிய அணியின் முகாமைத்துவம் அவரினை (நடராஜனை) பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகடமியில் (NCA) தயார்படுத்தல்களை மேற்கொள்ள வைக்க விரும்புகின்றது. எமது செயலாளர் அதற்கான வேலைகளை பார்க்கின்றார். தமிழ்நாட்டு கிரிக்கெட் சபை (TNCA) உம் நல்ல முடிவு ஒன்றினை எடுக்கும்.” என தமிழ்நாட்டு கிரிக்கெட் சபையின் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். 

>> இலங்கையின் கிரிக்கெட்டை கட்டியெழுப்ப ஐந்து வருடங்கள் செல்லும் – நாமல் ராஜபக்ஷ

கடைசியாக இந்திய அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது சர்வதேச அறிமுகம் பெற்ற நடராஜன் ஒரு டெஸ்ட், ஒரு ஒருநாள் போட்டி, 3 T20 போட்டிகளில் ஆடி அனைவரது கவனத்தினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<