இலங்கையின் கிரிக்கெட்டை கட்டியெழுப்ப ஐந்து வருடங்கள் செல்லும் – நாமல் ராஜபக்ஷ

718

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது கடந்த ஐந்து வருடங்களில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து இருப்பதாகவும், அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் செல்லும் எனவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்  

இலங்கையை FIFA தரப்படுத்தலில் 150இற்கு முன்னேற்றுவோம்: அமைச்சர் நாமல்

பாராளுமன்றத்தில் நேற்று (09) செவ்வாய்க்கிழமை, வாய்மூல வினாக்களுக்கான விடை நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரன, இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிகைகள் மற்றும் அதற்கான அண்மையில் நியமிக்கப்பட்ட அரவிந்த டி சில்வா தலைமையிலான தொழில்நுட்ப குழு தொடர்பில் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

”கடந்த ஐந்து வருடங்களில் இந்த நாட்டின் கிரிக்கெட் விளையாட்டு அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டில் தனிப்பட்ட குழுக்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது கிரிக்கெட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல, நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுக்களுக்கும் பொருந்தும்

எனவே, இதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு தான் அரவிந்த டி சில்வா தலைமையில் தொழில்நுட்ப குழுவொன்றை நியமித்துள்ளேன்

Video – ABU DHABI T10 லீக் இறுதிப் போட்டியில் அசத்திய இலங்கையர்கள்…! |Sports RoundUp – Epi 148

அதேபோல, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இனிவரும் காலங்களில் இருக்காது” எனவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   

இதுஇவ்வாறிருக்க, இலங்கையின் பாடசாலை விளையாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பேசிய அமைச்சர்

”பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்களை  பயிற்சிவிப்பதற்காக மேற்பார்வைை செய்வதும், அவர்களின் பொருளாதார தரத்தை உயர்த்துவதுவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் மிக முக்கிய பொறுப்பு இலங்கையின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனிடம் வழங்கப்பட்டுள்ளது.  

பாடசாலை கிரிக்கட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அரவிந்த டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

Video – Sri Lanka Cricket இன் வளர்ச்சிக்காக கைகோர்க்கும் முன்னாள் வீரர்கள்..!

அதேபோல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிருவாகக்குழுவொன்று இம்மாதம் இறுதிக்குள் நியமிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<