ரொஷான் அதிரடி நீக்கம்; புதிய அமைச்சராக ஹரின் நியமனம்

Political Interference in Sri Lanka Cricket

114
Political Interference in Sri Lanka Cricket

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க இன்று (27) பிற்பகல் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பிலான கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சருக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டள்ளதுடன், தன்னை பதவி நீக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடிதம் அனுப்பியுள்ளமையை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, ரொஷான் ரணசிங்க இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார். அதில் தான் கொலை செய்யப்படலாம் என குறிப்பிட்டதுடன், ஜனாதிபதி மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைக்கு இம்முறை தீர்வு காண முடியாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வைத்து தீர்வு கிடைக்கும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியால் இன்று (27) மாலை வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, 2018 முதல் 2019 வரையான காலப்பகுதியில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<