போட்டியின் போது இருமிக்கொண்டிருந்தது ஏன்..?: டோனி விளக்கம்

220
CSK

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தின் முடிவில் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஹெட்ரிக் தோல்வியைச் சந்தித்தது.

இந்தப் போட்டியில் டோனி, கடைசி வரை தனியாளாக நின்று போராடினாலும், போட்டியின் பிற்பகுதியில் களைப்பு மற்றும் மூச்சு விட  கடுமையாக திணறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்தச் சம்பவம் தற்போது கிரிக்கெட் விமர்சகர்கள், ஆர்வலர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.  

ஐ.பி.எல் வரலாற்று சாதனையை முறியடித்த எம்.எஸ் டோனி

இந்த போட்டியில் சென்னை அணி 7 ஓட்டங்களால் பெற்ற தோல்வியை விட, இந்த போட்டியின் போது தோனி மிகவும் சோர்வாகவும், இருமிக் கொண்டே இருந்ததும் தான் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது

அதிலும் குறிப்பாக, பெரும்பாலும் பந்துக்கு ஒரு ஓட்டம் என்ற விகிதமே இல்லாதவராக உள்ள டோனி, கடைசியில் 36 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்தும் அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. 

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது மிகவும் சோர்வாக காணப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை எம்.எஸ் டோனி தெரிவித்துள்ளார். இது குறித்து டோனி கூறியதாவது,

“மத்திய ஓவர்களில் என்னால் சிறப்பாக விளையாட முடியவிலை. இங்கு அதிகமான வெப்பம் நிலவி வருவதால் என்னால் சில நேரங்களில் மூச்சு கூட விடமுடியவில்லை.  

தொண்டை வரண்டு கொண்டே இருந்தது. இருந்தபோதிலும் நான் நலமாகவே உள்ளேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு நாங்கள் தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளோம்

இதுபோன்ற அறிகுறிகள் வந்தால் போட்டிக்கு இடையே ஓய்வு எடுக்கலாம். இதனால்தான் துடுப்பெடுத்தாட சிரமமாக இருந்தது. அத்துடன், இந்தப் போட்டியில் நாங்கள் நிறைய விடயங்களை சரியாகவே செய்தோம். இருந்த போதிலும் தோல்வியடைந்துள்ளோம்.  

பிடியெடுப்புகளை தவறவிடாமலும், நோபோல் வீசாமலும் இருக்க வேண்டும்.

Video-Dhoni இன் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்ன? | Cricket Galatta Epi 39

ஆனால் இந்தப் போட்டியிலும் நாங்கள் அந்த தவறை செய்துள்ளோம். 16 ஓவர்களுக்கு பிறகு இரண்டு ஓவர்கள் எங்களுக்கு மோசமாக அமைந்தன. தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்.

நாங்கள் இன்னும் ஓய்வாக இருக்கிறோம். அதனால் செய்த தவறுகளையே மீண்டும் செய்கிறோம் என்று நினைக்கிறேன். துடுப்பாட்ட வீரர்களின் பலம் என்னவென்பதை உணர்ந்து பந்துவீச வேண்டும். அதாவது, நம்மை நன்றாக அடித்தால்தான் அவர் ஓட்டங்களை எடுக்க முடியும் என்பதை சிந்தித்து பந்தை வீச வேண்டும்

போட்டியின் 16 ஆவது ஓவருக்குப் பிறகு செய்த தவறையே செய்தோம். ஒட்டுமொத்தமாக இன்னும் ஆட்டத்திறன் மேம்பட வேண்டும்” என தெரிவித்தார்

இதுஇவ்வாறிருக்க, சென்னை அணி தமது 5ஆவது லீக் போட்டியில் கிங்ஸ்லவன் பஞ்சாப்பை நாளை (4) டுபாயில் சந்திக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் அதே தினத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<