இந்திய டி20 குழாமிலிருந்து வெளியேறும் ஷிகர் தவான்

91

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட குழாத்திலிருந்து உபாதை காரணமாக அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் வெளியேறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடியது. குறித்த தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று முன்தினம் (19) நடைபெற்றது. இப்போட்டியின் போது இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் உபாதைக்குள்ளனார். 

மீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா

சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து…..

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் 5 ஆவது ஓவரில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை களத்தடுப்பில் ஈடுபட்ட ஷிகர்ன்தவான் தடுக்க முயன்ற போது அவரது இடது தோள்பட்டை பலமாக அடிபட்டது. அதனை தொடர்ந்து அவர் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சஹால் களத்தடுப்பில் ஈடுபட்டார். 

தொடர்ந்து இந்திய அணி துடுப்பெடுத்தாடும் போது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் இந்திய அணியின் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டும் துடுப்பெடுத்தாட வரவில்லை. அதனை தொடர்ந்து போட்டி நிறைவடைந்ததும் ஷிகர் தவானுக்கு எக்ஸ்ரே (x-ray) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே தவானுக்கு இடது தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டமை தெரிய வந்தது. 

இந்நிலையில் தற்போது உபாதைக்கு முகங்கொடுத்துள்ள ஷிகர் தவான் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென பரிசோதனையின் பின்னர் வைத்தியர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே நியூசிலாந்து தொடருக்கான டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றிருந்த ஷிகர் தவான் குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

குறித்த டி20 சர்வதேச தொடரில் பங்கேற்பதற்கான இந்திய குழாம் நேற்று (20) நியூசிலாந்து நோக்கி பயணமான நிலையில், பயணித்த இந்திய குழாமில் சிகார் தவான் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஷிகர் தவானுக்கு பதில் வீரராக யார் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதுவரையில் வெளியிடவில்லை. 

டோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த கோஹ்லி

ரோஹித் சர்மாவின் அபார சதம், விராத்……

ஆனால் முற்கூட்டியே நியூசிலாந்து A அணியுடனான தொடருக்காக இந்திய A அணியில் இளம் வீரர்களான பிரித்திவ் ஷாவ், சுப்மன் கில், மயங்க் அகர்வால் மற்றும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சஞ்சு சம்சன் ஆகியோர் நியூசிலாந்து மண்ணில் இருக்கும் நிலையில் இவர்கள் நால்வரில் ஒருவர் இந்திய குழாமில் இணைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டி வரும் வெள்ளிக்கிழமை (24) ஓக்லாந்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<