2 வருடங்களின் பிறகு மீண்டும் சர்வதேச கால்பந்தில் களமிறங்கும் இலங்கை

691

இலங்கையின் கால்பந்து விளையாட்டின் எதிர்காலத்துக்கென சிறந்ததொரு அணியைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டு அணியொன்றுடன் சொந்த மண்ணில் இளம் இலங்கை கால்பந்து அணி களமிறங்கவுள்ளது.

உலக கால்பந்து தரவரிசையில் 126ஆவது இடத்தில் உள்ள ஐரோப்பிய நாடான லிதுவேனிய அணியுடனான இந்த நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் இறுதிக் குழாம் அறிவிப்பு

இலங்கை தேசிய கால்பந்து அணி எதிர்வரும் காலங்களில் விளையாடவுள்ள சர்வதேசப் போட்டிகளுக்காக

நிதி நெருக்கடி, நிர்வாக சிக்கல்ககள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கடந்த ஆறு வருடங்களாக இலங்கையில் எந்தவொரு சர்வதேச கால்பந்தாட்டப் போட்டித் தொடர்களும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்துடனும், ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்துடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலானாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் நட்பு ரீதியிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள லிதுவேனிய கால்பந்து அணி முதற்தடவையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இதன்படி, ஆறு வருட இடைவெளியின் பிறகு இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்று நடைபெறவுள்ளதுடன், சுமார் இரண்டு வருட இடைவெளியில் (அதாவது 20 மாதங்கள்) இலங்கை கால்பந்து அணி,  சர்வதேச கால்பந்து போட்டியொன்றில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு பங்களாதேஷ், மாலைதீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளின் பங்குபற்றலுடன் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத்திற்கான 23 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்து போட்டித் தொடர் நாவலப்பிட்டியவில் நடைபெற்றிருந்தன, அத்துடன், இலங்கை அணி, இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒற்றுமைக் கிண்ண கால்பந்து தொடரில் பங்குபற்றியிருந்தது.

விறுவிறுப்பான காலிறுதியில் ரஷ்யாவை வீழ்த்திய குரோஷியா

முடிவை தீர்மானிக்கும் இவான் ரகிடிக்கின் (Ivan RAKITIC) ஸ்பொட் கிக் மூலம் ரஷ்யாவை பெனால்டி ஷூட் அவுட்

இந்த நிலையில், பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சுசுகி கிண்ணப் போட்டித் தொடருக்கு இலங்கை அணியை தயார்படுத்தும் நோக்கில் வடக்கு, கிழக்கு உட்பட நாடாளவிய ரீதியில் தெரிவுகள் நடத்தப்பட்டு, திறமையான வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கான உத்தேச அணிக்குள் உள்வாங்கப்பட்டனர்.

  • கிழக்கு மாகாணத்துக்கான தேசிய அணித் தேர்வு

இதனையடுத்து இலங்கை கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் பக்கீர் அலியின் மேற்பார்வையின் கீழ் பெத்தகான கால்பந்து பயிற்சி நிலையத்தில் கடந்த சில மாதங்களாக குறித்த வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. அதனைத் தொடர்ந்து இந்த வாரம், இறுதி 24 பேர் அடங்கிய குழாம் அறிவிக்கப்பட்டது. குறித்த வீரர்கள், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் பிரபல லிதுவேனிய அணியை இன்று சந்திக்கவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இலங்கை அபிவிருத்தி அணி எதிர்வரும் 11ஆம் திகதி இரண்டாவது போட்டியில் லிதுவேனிய அணியுடன் விளையாடவுள்ளது. இவ்விரண்டு போட்டிகளும் கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேநேரம், லிதுவேனிய கால்பந்து அணியில் அந்நாட்டு தேசிய அணியைச் சேர்ந்த ஒருசில வீரர்களும், தேசிய அணிக்காக விளையாடவுள்ள இரண்டாவது நிலை வீரர்களும் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, இவ்வருடத்தில் மாத்திரம் அந்த அணி ஆறு நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்று 4 இல் வெற்றியும், ஒரு போட்டியில் சமநிலையும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியிருந்தது.

இதில் ஜோர்ஜியா (4-0), எஸ்டோனியா (2-0), ஈரான் (1-0), மற்றும் போலந்து (4-0) ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்த லிதுவேனிய அணி, லத்வியாவுக்கு எதிரான போட்டியில் (1-1) சமநிலை அடைய, ஆர்மேனியா (0-1), அணிக்கெதிரான போட்டியில் தோல்வியையும் தழுவியது.

ThePapare Tamil weekly sports roundup – Episode 35

பெரேராக்களின் இணைப்பாட்டத்தினால் மேற்கிந்திய மண்ணில் வரலாறு படைத்த இலங்கை அணி, ஒரே நாளில்

அதேபோல, நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்வதேசப் போட்டியொன்றில் களமிறங்கவுள்ள இலங்கை கால்பந்து தேசிய அணியில் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதிலும் குறிப்பாக முன்னாள் அணித் தலைவர் மொஹமட் ரிப்னாஸ், சுஜான் பெரேரா, சுபாஷ் மதுஷான், பசால் மொஹமட், சமீர சஜித் குமார, அசிகுர் ரஹ்மான், சரித்த பண்டார ரத்னாயக்க ஆகியோர் இலங்கை அணிக்காக ஏற்கனவே விளையாடிய அனுபவமிக்க வீரர்களாவர்.  

இதில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் மதுஷான் இலங்கை அணியை முதற்தடவையாக வழிநடத்தவுள்ளார். அவர் முன்னதாக பங்களாதேஷ், மலேசியா மற்றும் காம்போஜியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டித் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடிய அனுபவத்தைக் கொண்ட வீரராகவும் திகழ்கிறார்.

இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை கால்பந்து அணி, லிதுவேனிய அணிக்கெதிராக இன்று நடைபெறவுள்ள நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் எந்தவொரு நெருக்கடியும் இன்றி சிறப்பாக முகங்கொடுக்க தயாராக இருப்பதாக இலங்கை கால்பந்து அணியின் தலைவர் சுபாஷ் மதுஷான் தெரிவித்தார்.

அத்துடன், ”இலங்கை அணியில் பெரும்பாலான இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளமை எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டிகளுக்கு முகங்கொடுப்பதற்கு மிகப் பெரிய பலமாக அமையும். அதேபோல, ஐரோப்பிய நாடான லிதுவேனிய அணியுடன் போட்டியிடவுள்ளோம் என நாங்கள் பயப்படவில்லை. எமது அணியில் பெரும்பாலானோர் இளம் வீரர்கள். அவர்களுக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் இந்தப் போட்டிக்கு சிறந்த முறையில் ஆயத்தமாகியுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு கால்பந்து விளையாட்டு குறித்து பக்கீர் அலி

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் நோக்கில்

இவர்கள் தவிர பாடசாலை மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய இரண்டு வீரர்களும் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். அசேல மதுஷான் (மருதானை புனித ஜோசப் கல்லூரி), சபீர் ரசூனியா (பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி) ஆகிய இரண்டு வீரர்களுடன், வட மாகாணத்தைச் சேர்ந்த ஜுட் சுபன், மரியதாஸ் நிதர்சன் மற்றும் மன்னாரைச் சேர்ந்த டக்ஷன் பியூஸ்லெஸ் ஆகியோரும், கிழக்கு மாகணத்தைச் சேர்ந்த மொஹமட் முஜஸ்தாக்கும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் சிறந்ததொரு அணியொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் இளம் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் றூமி பக்கீர் அலி தெரிவித்தார்.

பயிற்றுவிப்பாளர் றூமி பக்கீர் அலி

லிதுவேனிய அணியுடன் வெற்றிபெற முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், சிரேஷ்ட வீரர்களுடன் இந்த வீரர்கள் விளையாடுவதால் நல்ல அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கடந்த காலங்களைவிட சிறந்த கால்பந்து ஆற்றலை இப்போட்டியில் எமது வீரர்கள் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம், மாலைதீவுகளில் முதல்தரப் போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை அணியின் அனுபவமிக்க கோல்காப்பாளர் சுஜான் பெரேராவும் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் விசேட அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

இன்றைய போட்டியில் மாத்திரம் விளையாடவுள்ள சுஜான் பெரேரா, மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சாப் கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்காக மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார் என இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, லிதுவேனிய அணியுடனான இரண்டாவது போட்டி நிறைவடைந்த உடனே (11ஆம் திகதி இரவு) இலங்கை அணி ஜப்பான், தென்கொரிய ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விசேட பயிற்சிகளிலும், அங்குள்ள ஒருசில கழகங்களுடன் சில பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

அதன்பிறகு, சுசுகி கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்க பங்களாதேஷ் செல்லும் இலங்கை அணி, இவ்வருடம் நிறைவடைவதற்கு முன் மலேசியா, சிங்கப்பூர், மாலைதீவுகள் ஆகிய அணிகளுடனான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இலங்கை மற்றும் லிதுவேனிய அணிகளுக்கிடையிலான போட்டியை கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் மைதானத்துக்கு வருகை தந்து பார்வையிடுமாறும், இளம் இலங்கை வீரர்களுக்கு பலத்த உற்சாகத்தை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துங்கள் எனவும் இலங்கை கால்பந்து சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க