வடக்கை அலங்கரிக்கும் அருட்கலாநிதி தாவீது அடிகளார் ஞாபகார்த்த டென்னிஸ் தொடர்

273

அருட்கலாநிதி தாவீது அடிகளார் நிறுவகமும் யாழ்ப்பாண டென்னிஸ் கழகமும் இணைந்து அருட்கலாநிதி தாவீது அடிகளாரின் ஞாபகார்த்தமாக வட மாகாண ரீதியிலான டென்னிஸ் சுற்றுத் தொடரினை முதலாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போட்டித் தொடர் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்றைய தினம் (06) அருட்கலாநிதி தாவீது அடிகளார் நிறுவக கட்டடத்தில் இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் யாழ் டென்னிஸ் கழக தலைவர் வண. திருமகான், போட்டிச் செயலாளர் திரு.ரவீந்திரகுமார், தாவீது அடிகளார் நிறுவகத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் லக்ஷ்மன் டேவிட் மற்றும் இந்நாள் தலைவர் துஷி டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Photo Album – Fr. David Memorial Tennis Tournament 2018

14 வயதின்கீழ், 18 வயதின்கீழ், திறந்த போட்டி மற்றும் 35 வயதிற்கு மேற்பட்டோர் எனும் வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாருக்குமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரில் மொத்தம் 11 பிரிவுகளாக போட்டிகள் இடம்பெறுகின்றன. விஷேடமாக கலப்பு இரட்டையர் பிரிவு முதலாவது முறையாக வடக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   

போட்டித்தொடரில் 117 போட்டியாளர்கள் பங்கெடுக்கின்றமை இதன் சிறப்பம்சமாகும். இம்மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரிகளின் டென்னிஸ் திடலில் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

தொடரின் இறுதிப் போட்டிகள் நாளைய தினம் (08) காலை முதல் இரு மைதானங்களிலும் இடம்பெறவுள்ள அதேவேளை, இறுதி நிகழ்வானது புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அருட்கலாநிதி தாவீது அடிகளார்

1907ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி தும்பளையில் பிறந்து, யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்விகற்று, அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் அதே மண்ணில் உயிர்நீத்தவர் அருட்கலாநிதி தாவீது அடிகளார் (வண. சிங்கராயர் தாவிது/ Fr. David).  

இறுதி நிமிட த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது பாடும்மீன்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு..

தமிழறிஞராக அறியப்பட்ட இவர், 1970ஆம் ஆண்டு முதல், 1981ஆம் ஆண்டுவரை, அதாவது தான் மரணிக்கும் வரை தமிழ் சொற்பியல் அகராதியின் 06 பாகங்களினை வெளியீடு செய்துள்ளார். குறிப்பாக இவர் 33 மொழிகளில் புலமைபெற்றிருந்தார்.  

இவரது ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு பெரும் பங்காற்றிய யாழ் நூலகம் 1981ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதியன்று எரியூட்டப்பட்ட செய்தியினை கேள்வியுற்ற அடிகளார் உறக்கத்திலேயே மறுநாள் அதிகாலை வேளையில் உயிர்நீர்த்தார்.   

தனது 73ஆவது வயதில் அடிகளார் காலமாகும் வரை நூலகத்திற்கு அருகில் அமைந்திருந்த யாழ்ப்பாணம் ஐக்கிய டென்னிஸ் கழகத்தில் (Jaffna United Tennis Club) டென்னிஸ் விளையாடுவதை வழமையாக வைத்திருந்தார். குறித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கோட்டை, சாவகச்சேரி மற்றும் காங்கேசந்துறை ஆகிய பகுதிகளிலும் பிரபலமான டென்னிஸ் கழகங்கள் காணப்பட்டதனை அறிய முடிகின்றது.

அப்போது பாடசாலை மட்டத்தில் டென்னிஸ் பிரபல்யம்பெற்று இருக்காத போதும் அரச அதிகாரிகளே குறித்த காலத்தில் இவ்விளையாட்டில் அதிக ஈடுபாட்டோடு இருந்துள்ளனர். இவரது சமூகப்பணி மற்றும் மொழியியல் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் தாவீது அடிகளார் நிறுவகம் இவ்வருடம் முதல் விளையாட்டுத்துறையையும் மேம்படுத்தும் முயற்சியினை ஆரம்பித்துள்ளது.  

தர்ஜினியின் சிறப்பட்டத்தால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி

தர்ஜினி சிவலிங்கத்தின் அபார ஆட்டத்துடன் இலங்கை…

நேற்று இடம்பெற்ற குறித்த ஊடக சந்தி ப்பில் யாழ்ப்பாணம் டென்னிஸ் கழக தலைவர் வண. திருமகான் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த போட்டித் தொடரானது நடப்பாண்டில், பாடசாலை மாணவர்களுக்கென நடத்தப்படும் தொடராகவும், திறந்த பிரிவினருக்கான முதலாவது தொடராகவும் அமைகின்றது. இப்போட்டியை வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்த எதிர்பார்க்கின்றோம், அத்தோடு எதிர்காலத்தில் தேசிய ரீதியானதாகவும் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கின்றோம். போட்டித்தொடரின் பங்காளர்களான தாவீது அடிகளார் நிறுவகத்திற்கும், பிரதான அனுசரணையாளர்களான சாந்தி மெடிக்கல்ஸ் மற்றும்  ஏனைய அனுசரணையாளர்களிற்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம் என்றார்.

டென்னிஸ் அபிவிருத்தி தொடர்பாக ஊடகவியலாளர்களினது கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்நாம் எமது கழகத்திற்கென தனியான ஆடுதளம் அமைப்பதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருகின்றோம். ஒக்டோபர் மாதம் இறுதியில் டென்னிஸ் விளையாட்டுசார் வல்லுநர்களைக்கொண்டு இரண்டு நாள் பயிற்சி முகாமினை பாடசாலை மாணவர்களிற்கென ஏற்பாடு செய்யவுள்ளோம்.” என்பதனையும் தெரியப்படுத்தினார்.

வட மாகாணத்தின் பிரம்மாண்டமான தொடரானஅருட்கலாநிதி தாவீது அடிகளார் ஞாபகார்த்த சுற்றுப்போட்டி”  இன் முழுமையான முடிவுகள் மற்றும் புகைப்படங்களைப் பெற Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.