இராணுவப்படை அணிக்காக சதம் விளாசி போராடிய தினேஷ் சந்திமால்

82

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கையின் பிரிவு A (Tier A) உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (16) ஐந்து போட்டிகள் நிறைவடைந்திருந்தன. 

இன்று நிறைவடைந்த போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர் தங்களது திறமைகளினை வெளிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், இலங்கை இராணுவப்படை அணிக்காக ஆடிவரும் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால் முக்கிய இடத்தினைப் பெற்றிருந்தார். 

சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக சதம் விளாசிய ஷெஹான் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கையின் பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள்…

அந்தவகையில், இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகத்திற்காக ஆடிவரும் சந்திமால் நீர்கொழும்பு கிரிக்கெட் கழக அணிக்கு எதிரான மோதலில், முதல்தரப் போட்டிகளில் தன்னுடைய 23ஆவது சதத்தை பூர்த்தி செய்து 163 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், துரதிஷ்டவசமாக சந்திமாலின் இராணுவப்படை அணியினர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திடம் 8 விக்கெட்டுக்களால் தோல்வியினை தழுவியிருந்தனர். 

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 2008ஆம் ஆண்டு, சர்வதேச அறிமுகத்தினைப் பெற்ற முன்வரிசை துடுப்பாட்டவீரரான மஹேல உடவத்தவும் சதம் விளாசியிருந்தார். NCC அணிக்காக ஆடிவரும் மஹேல உடவத்த தன்னுடைய 14ஆவது முதல்தரச்  சதத்தோடு சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிராக 117 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்திருந்தார். இதேநேரம், சிலாபம் மேரியன்ஸ் – NCC அணிகள் இடையிலான மோதல் சமநிலையில் முடிந்தது.

இவர்கள் தவிர, BRC அணிக்காக ஆடிவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான பானுக்க ராஜபக்ஷ அரைச்சதம் விளாசி 69 ஓட்டங்கள் பெற்றிருந்தார். பானுக்கவின் இந்த அரைச்சதத்தோடு, BRC அணி சோனகர் கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்தது. 

துடுப்பாட்டம் ஒருபுறமிருக்க பந்துவீச்சில், திறமையினை வெளிப்படுத்தியிருந்த SSC அணியின் சச்சித்திர சேனநாயக்க, கோல்ட்ஸ் அணிக்கு எதிரான மோதலில் இரண்டாவது தடவையாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பு 88 ஓட்டங்களால் வெற்றி பெற உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், இடதுகை சுழல்பந்துவீச்சாளரான சாமிக்க குணசேகர லஹிரு திரிமான்னவின் றாகம அணிக்கு எதிராக 8 விக்கெட்டுக்களை சாய்க்க, செரசன்ஸ் அணியினர் இன்னிங்ஸ் 110 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்து கொண்டனர்

போட்டிகளின் சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

சர்ரேய் மைதானம், மக்கோன

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 119 (53) லஹிரு திரிமான்ன 28, கசுன் ராஜித 8/31

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 373 (120.1) நவிந்து விதானகே 83, சித்தார கிம்ஹான் 74, கல்ஹார செனரத்ன 6/127, அமில அபொன்சோ 3/40

றாகம கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 144 (47.2) லஹிரு திரிமான்ன 45, இஷான் ஜயரத்ன 39, சாமிக்க எதிரிசிங்க 8/32

முடிவுசெரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 110 ஓட்டங்களால் வெற்றி

NCC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 

மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கட்டுநாயக்க

NCC (முதல் இன்னிங்ஸ்) – 312 (79) சஹான் ஆராச்சிகே 128, சாமிக்க குணசேகர 50, அசித்த பெர்னாந்து 5/47

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 304 (88.1) செஹான் ஜயசூரிய 120, புலின தரங்க 56, திலேஷ் குணரத்ன 5/52

NCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 314/8 (78.1) மஹேல உடவத்த 117*, நிமேஷ் விமுக்தி 4/86

முடிவுபோட்டி சமநிலையில் முடிவடைந்தது

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 

சோனகர் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 155 (42.1) ஹிமாஷ லியனகே 56, உபுல் இந்திரசிறி 3/73

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 484/9d (112.3) சாட் நஸீம் 139, அஞ்சலோ ஜயசிங்க 87, அஷேன் சில்வா 67, துஷான் விமுக்தி 2/83

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 398 (97.5) தினேஷ் சந்திமால் 163*, பெதும் டில்சான் 91, உபுல் இந்திரசிறி 3/155

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 74/2 (7.3) சாட் நஸீம் 40*

முடிவுநீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

SSC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு

SSC (முதல் இன்னிங்ஸ்) – 301 (76) சந்துன் வீரக்கொடி 55, பிரபாத் ஜயசூரிய 5/89

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 183 (58.1) ஹேஷான் தனுஷ்க 66, சச்சித்ர சேனநாயக்க 5/52, ஆகாஷ் செனரத்ன 3/24

SSC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 175 (56.5) சசித்ர சேனநாயக்க 33, டில்ருவான் பெரேரா 4/45, பிரபாத் ஜயசூரிய 4/55

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 205 (73.2) விஷாட் ரன்டிக்க 69, சச்சித்ர சேனநாயக்க 5/59

முடிவு – SSC அணி 88 ஓட்டங்களால் வெற்றி 

சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

BRC மைதானம், கொழும்பு

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 353 (77.3) சச்சித்ர சேரசிங்க 94, துவிந்து திலகரட்ன 3/103

BRC (முதல் இன்னிங்ஸ்) – 238 (64.5) ரமிந்த ஜயசூரிய 61, சசித்ர சேரசிங்க 5/80, அதீஷ திலஞ்சன 2/24

சோனகர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 137 (31.1) பப்சார வடுகே 74, தரிந்து கெளசால் 4/30

BRC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 253/8 (61) பானுக்க ராஜபக்ஷ 69, நிசால் ப்ரான்சிஸ்கோ 60, அயான சிறிவர்த்தன 3/72

முடிவு – BRC அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<