டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை தக்கவைக்க ஐ.சி.சி. குழு பரிந்துரை

255
ICC

பந்தை சேதப்படுத்துவதற்கு கடும் தண்டனை வழங்க பரிந்துரைத்திருக்கும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ICC) கிரிக்கெட் குழு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நாணய சுழற்சியை நீக்குவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் நாணய சுழற்சியை கைவிடுவதற்கு ஐ.சி.சி தீர்மானம்

141 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கடைப்பிடித்து வந்த பாரம்பரியமிக்க நாணய …

மும்பையில் செவ்வாய்க்கிழமை (29) முடிவடைந்த கிரிக்கெட் குழுவின் இரண்டு நாள் கூட்டத்திலேயே இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தலைமையிலான .சி.சி. கிரிக்கெட் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, போட்டி மத்தியஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ரஞ்சன் மடுகல்ல ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

2019 ஜூலையில் ஆரம்பமாகவிருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளில் நாணய சுழற்சி சம்பிரதாயம் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளப்படும். அதேபோன்று, இதன் தொடர் வெற்றிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுவதில்லை என்பதோடு சமநிலையாகும் போட்டிகளில் அணிகள், இருக்கும் புள்ளிகளில் மூன்றில் ஒன்றை பெறும். பந்தை சேதப்படுத்துவது மற்றும் தனிப்பட்ட தவறான நடத்தைகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

கிரிக்கெட் குழுவின் இந்த பரிந்துரைகள் .சி.சி. சபையால் இறுதியாக உறுதி செய்யப்பட்டு ஜுன் மாதத்தில் நிறைவேற்றுக் குழுவிடம் கொண்டு செல்லப்படவுள்ளது.  

நாணய சுழற்சி தொடரும்

ஆடுகளத்தின் மாற்றங்கள் குறித்து .சி.சி. அண்மைக் காலத்தில் தீவிர அவதானம் செலுத்துவதோடு, போட்டியின் சமநிலையை பேண நாணய சுழற்சியை அகற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காலி டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லை – மொஹான் டி சில்வா

இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுடனான டெஸ்ட் …

இது தொடர்பில் .சி.சி. செவ்வாயன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘நாணய சுழற்சியின் முடிவை வருகை அணிக்கு நேரடியாக வழங்குவது குறித்து (கிரிக்கெட் குழுவில்) ஆலோசிக்கப்பட்டது. ஆனால், நாணய சுழற்சி டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த அங்கம் என்றும் அது போட்டியின் ஒரு அம்பசம் என்றும் புரிந்துகொள்ளப்பட்டதுஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியற்ற ஆடுகளங்களை தயாரிப்பதை தடுக்க சிறந்த வழியாக, குறித்த போட்டி கைவிடப்பட்டு எதிரணிக்கு புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் என்று .சி.சி. ஆவணம் பரிந்துரைத்துள்ளது. எனினும், இந்த அதிரடி நடவடிக்கையை கிரிக்கெட் குழு ஆதரிக்கிறதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.  

போட்டிகளுக்கே புள்ளி, தொடருக்கல்ல

டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி, தோல்வி அல்லது சமநிலைக்கு வழங்கப்படும் புள்ளிகள் தொடர்பில் கிரிக்கெட் குழு முடிவெடுக்கவில்லை. ஆனால், சமநிலையாகும் போட்டிக்கு வெற்றிக்கான புள்ளியில் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

அனைத்து போட்டிகளும் கணக்கில் கொள்ளப்படுவதற்கு எளிமையான முறை கையாளப்பட வேண்டும்என்று .சி.சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ‘தொடர் ஒன்றுக்கு அன்றி ஒவ்வொரு போட்டிகளுக்குமே புள்ளிகள் வழங்கப்பட வேண்டும். என்றும் குழு பரிந்துரைக்கிறது. இதன் ஓர் அங்கமாக சமநிலைவெற்றி விகிதம் 0.33:1 எனக் கொண்டு சமநிலையாகும் போட்டிக்கு ஒவ்வொறு அணிக்கும் இருக்கும் புள்ளிகளில் மூன்றில் ஒன்று வழங்கப்படும்என குறிப்பிடப்பட்டுள்ளது.  

Photo Album : 8th Battle of the Everest – Limited Overs Encounter (Batticaloa Hindu College vs Periya Kallar Central College)

Photos 8th Battle of the Everest – Limited Overs Encounter (Batticaloa Hindu …

பந்தை சேதப்படுத்தினால் கடும் தண்டனை

அண்மைய அவுஸ்திரேலிய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்த எல்லைகள் கடுமையாக மீறப்பட்டன. இந்த தொடரில் போட்டியின் உணர்வை மாத்திரமன்றி நடத்தை விதிகளும் மீறப்பட்ட நிலையில் .சி.சி. தலைகுணிவையே சந்தித்தது.

மோசமான நடத்தை காரணமாக டேவிட் வோர்னர், குவின்டன் டி கொக் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன. பந்தை சேதப்படுத்தி கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கெமரூன் பான்க்ரொப்ட் மூவருக்கும் .சி.சி. மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை போட்டித் தடைகள் விதித்தன.  

இந்த நிகழ்வுகளை அவதானித்த கிரிக்கெட் குழு, பந்தை சேதப்படுத்துவது மற்றும் தனிப்பட்ட மோசமான நடத்தைகள் தொடர்பில் தடைகள் மற்றும் அபராதங்களை கடுமையாக்குவதற்கு ஆதரவளித்துள்ளது. அதேபோன்று, குற்றம் அல்லது தண்டனை அளவை உயர்த்துவது அல்லது குறைப்பது பற்றி போட்டி மத்தியஸ்தருக்கு அதிகாரம் வழங்குவதற்கும் கிரிக்கெட் குழு பரிந்துரைத்துள்ளது.

போட்டியில் தனிப்பட்ட மோசமான நடத்தைகள் மற்றும் பந்தை சேதப்படுத்துவது தீவிர குற்றங்கள் என்று இந்த குழு கருதுகிறது. அவர்களின் நடத்தைக்கு அமைய அவை கையாளப்பட வேண்டும்என்று .சி.சி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ‘இதில் போட்டி அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கவும் தொடர்ந்து அவர்களின் முடிவுகளுக்கு துணை நிற்கவும் வலுவான ஆதரவை வழங்குகிறதுஎன்றும் அதில் கூறப்பட்டுள்ளது.       

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…