மே.தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவரானார் கிராக் பிராத்வெயிட்

Sri Lanka tour of West Indies 2021

141

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக கிரைக் பிராத்வெயிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இருபதுக்கு-20 தொடரை 2க்கு 1 என் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்பொது நடைபெற்று வருகின்றது.

இந்தத் தொடர் நிறைவடைந்த பிறகு இரு அணிகளும் மோதும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்திய மே.தீவுகள்

இதனிடையே, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக கிரைக் பிராத்வெயிட் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது

மேற்கிந்திய தீவுகள் A அணியின் தலைவராக பல வருடங்களாக செயற்பட்டு வந்த கிராக் பிராத்வெயிட், அண்மையில் நிறைவடைந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்தார்

அத்துடன், முன்னணி வீரர்கள் இல்லாமல் பங்களாதேஷ்  அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றி சாதனையும் படைத்தது.

இதற்கு முன்னதாக 7 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக கிராக் பிராத்வெயிட் செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Video – தோல்வியிலும் சாதித்துக் காட்டிய இலங்கை வீரர்கள்..!|Sports RoundUp – Epi 152

28 வயதான கிராக் பிராத்வெயிட், 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 சதங்களுடன் 3876 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

முன்னதாக, கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் அணித் தலைவரான ஜேசன் ஹோல்டர் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் கிராக் பிராத்வெயிட் தலைவராக நியமிக்கப்பட்டார்.

டெஸ்ட் போட்டிகளில் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள 29 வயதான ஜேசன் ஹோல்டர், 2015ஆம் ஆண்டு தினேஸ் ரம்தினுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குணதிலக்கவின் ஆட்டமிழப்பு!

அன்று முதல் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தலைவராக செயற்பட்டு 11 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அத்துடன், ஜேசன் ஹோல்டர் தலைமையில் 21 போட்டிகள் தோல்வியிலும், 5 போட்டிகள் சமநிலையிலும் முடிவடைந்துள்ளன

இறுதியாக அவர் தலைமை தாங்கிய 5 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, ஒரு டெஸ்ட் வீரராக ஜேசன் ஹோல்டர் இன்னும் பல வருடங்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பங்களிப்புச் செய்ய வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் இயக்குநர் ஜிம்மி ஆடம்ஸ் கூறியுள்ளார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<