இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் லசித் மாலிங்க

Australia tour of Sri Lanka 2022

959

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வீரர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 7ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

>> இலங்கை – ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நிறைவுப்பெற்ற பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன.

இவ்வாறான நிலையில் இறுதியாக நடைபெற்றுமுடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடரில் அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டிருந்த லசித் மாலிங்க, மீண்டும் இலங்கையில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக செயற்படவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

லசித் மாலிங்க இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக ஏற்கனவே செயற்பட்டிருந்தமை மாத்திரமின்றி, இறுதியாக நடைபெற்றுமுடிந்த IPL தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். அதேநேரம், இந்த அணியானது இறுதிப்போட்டிவரை முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

எனவே, லசித் மாலிங்கவின் வருகையானது இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின், குறிப்பாக நுவான் துஷார மற்றும் மதீஷ பதிரண ஆகிய மாலிங்க பாணியில் பந்துவீசும் வீரர்களுக்கு மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<