ஜப்னா கிங்ஸ் அணியில் இருந்து விலகும் வனிந்து ஹஸரங்க

2059
Wanindu releases from Jaffna Kings

வனிந்து ஹஸரங்க லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மூன்றாவது பருவகாலத்தில் புதிய அணி ஒன்றுக்கு ஆடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> இரண்டாவது டெஸ்டிலிருந்து நீக்கப்படும் அஸ்டன் ஏகார்!

LPL தொடரின் கடந்த இரண்டு பருவங்களிலும் யாழ்ப்பாணத்தினை பிரதிநிதித்துவம் செய்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கிங்ஸ் அணிகளுக்காக ஆடியிருந்த வனிந்து ஹஸரங்க, இந்த ஆண்டு புதிய அணிகளில் ஒன்றுக்கு ஆடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி வனிந்து ஹஸரங்கவின் LPL தொடரின் புதிய அணியாக கண்டி வோரியர்ஸ் அணி இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மறுமுனையில் காலி கிளேடியேட்டர்ஸ் அணியினை பிரதிநிதித்துவம் செய்த அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ, புதிய LPL தொடரில் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றார் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை LPL தொடரின் மூன்றாவது பருவகாலத்திற்கான போட்டிகள் ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம், ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பந்தோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<