Home Tamil முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்திய மே.தீவுகள்

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்திய மே.தீவுகள்

Sri Lanka tour of West Indies 2021

258
West Indies vs Sri Lanka 2021
ICC

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, தொடரில் 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இந்த போட்டியில், T20I தொடரில் அறிமுகமாகியிருந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் ஒருநாள் போட்டி அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டனர்.

>> T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய சந்தகன்

அத்துடன் இலங்கை அணியில் அறிமுகமாகியிருந்தும் தொடர்ந்தும் வாய்ப்புகள் கிடைக்காமலிருந்த கமிந்து மெண்டிஸிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இலங்கை அணி

தனுஷ்க குணதிலக்க, திமுத் கருணாரத்ன (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், அஷேன் பண்டார, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப்

மேற்கிந்திய தீவுகள் அணி

ஷேய் ஹோப், எவின் லிவிஸ், டெரன் ப்ராவோ, நிக்கோலஸ் பூரன், ஜேசன் மொஹமட், கீரன் பொல்லார்ட், அகீல் ஹுசைன், ஜேசன் ஹோல்டர், பெபியன் எலன், அல்ஷாரி ஜோசப், ரொமாரியோ ஷெபர்ட்

அனுப மற்றும் இளம் வீரர்கள் உள்ளடக்கப்பட்டு களமிறங்கிய இலங்கை அணிக்கு, திமுத் கருணாரத்ன மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் மிக துள்ளியமான ஆரம்பத்தை பெற்றக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்காக இவர்கள் 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க களத்தடுப்பாளருக்கு இடையூறு விளைவித்தமைக்காக 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ச்சியாக அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அறிமுக வீரர் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தனர்

தொடர்ந்து தினேஷ் சந்திமால் ஏமாற்றமளித்து பெவிலியன் திரும்ப, ஏனைய வீரர்களும் அணிக்கு ஏமாற்றத்தை வழங்கினர். எனினும், இன்றைய தினம் அறிமுகமாகியிருந்த அஷேன் பண்டார தனியாளாக போராடி 60 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற, இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அத்துடன், அறிமுக ஒருநாள் போட்டியில் அரைச்சதம் பெற்ற 5வது இலங்கை வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார். மே.தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜேசன் மொஹமட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி எவின் லிவிஸ் மற்றும் ஷேய் ஹோப்பின் மிகச்சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்துடன், 47 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

>> தொடரும் துரதிஷ்டங்களால் வாய்ப்புகளை இழக்கும் வருண் சக்கரவர்த்தி?

ஷேய் ஹோப் தன்னுடைய 10வது ஒருநாள் சதத்தை இன்று பதிவுசெய்து, 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், எவின் லிவிஸ் 90 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர்களுக்கு அடுத்தப்படியாக டெரன் ப்ராவோ ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது போட்டி நாளைய தினம் (12) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Sri Lanka
232/10 (49)

West Indies
236/2 (47)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka obstructing the field b 55 61 7 0 90.16
Dimuth Karunarathne c & b Kieron Pollard 52 61 4 0 85.25
Pathum Nissanka run out () 8 16 1 0 50.00
Angelo Mathews run out () 5 7 0 0 71.43
Dinesh Chandimal c Hayden Walsh b Fabian Allen 12 24 0 0 50.00
Ashen Bandara c Akeal Hosein b Jason Holder 50 60 4 0 83.33
Kamindu Mendis c Jason Holder b Jason Mohammed 9 21 0 0 42.86
Wanindu Hasaranga c Jason Holder b Jason Mohammed 3 5 0 0 60.00
Dushmantha Chameera c Shai Hope b Jason Holder 8 15 1 0 53.33
Lakshan Sandakan b 16 20 2 0 80.00
Nuwan Pradeep c Romario Shepherd b Alzarri Joseph 1 4 0 0 25.00


Extras 13 (b 0 , lb 5 , nb 0, w 8, pen 0)
Total 232/10 (49 Overs, RR: 4.73)
Bowling O M R W Econ
Alzarri Joseph 10 0 49 1 4.90
Jason Holder 10 1 39 2 3.90
Akeal Hosein 8 0 44 0 5.50
Romario Shepherd 5 0 30 0 6.00
Jason Holder 4 1 12 2 3.00
Kieron Pollard 5 0 15 1 3.00
Fabian Allen 7 0 38 1 5.43


Batsmen R B 4s 6s SR
Evin Lewis b Dushmantha Chameera 65 90 4 2 72.22
Shai Hope b Dushmantha Chameera 110 133 12 1 82.71
Darren Bravo, not out 37 47 0 0 78.72
Jason Mohammed not out 13 15 0 0 86.67


Extras 11 (b 0 , lb 3 , nb 3, w 5, pen 0)
Total 236/2 (47 Overs, RR: 5.02)
Bowling O M R W Econ
Nuwan Pradeep 8 1 46 0 5.75
Dushmantha Chameera 10 0 50 2 5.00
Kamindu Mendis 3 0 21 0 7.00
Wanindu Hasaranga 10 1 26 0 2.60
Danushka Gunathilaka 5 0 25 0 5.00
Lakshan Sandakan 10 0 57 0 5.70
Ashen Bandara 1 0 8 0 8.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<