போயகொடவின் மீள்வருகையினால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்த திரித்துவக் கல்லூரி

196

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 5 போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தன. இதன்படி கொழும்பு நாலந்த கல்லூரி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், மொரட்டு மஹா வித்தியாலயம் 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் திரித்துவக் கல்லூரி, கண்டி

ஆனந்த கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் ஆனந்த கல்லூரி தம்முடைய முதல் இன்னிங்சில் 260 ஓட்டங்களை சேர்த்திருந்தது. பின்னர் திரித்துவக் கல்லூரி தம்முடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 174 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது. ஆனந்த கல்லூரியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அசேல் சிகேரா 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி அணியினர் லஹிரு ஹிரன்யவின் (108) சதத்தின் உதவியால் 6 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

சகலதுறையிலும் பிரகாசித்த மஹிந்த கல்லூரிக்கு மற்றுமொரு இன்னிங்ஸ் வெற்றி

இதனையடுத்து 297 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய திரித்துவக் கல்லூரி வீரர்கள் 160 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது. இதில் ஹசித போயகொட 103 ஓட்டங்களையும், புபுது பண்டார 50 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.

இம்முறை இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளில் 2 சதங்களுடன் துடுப்பாட்டத்தில் அசத்திய ஹசித, இப்பருவகாலத்துக்கான முதல் சதத்தையும் பதிவுசெய்தார்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 260 (75) – துஷான் ஹெட்டிகே 114, ஷமல் ஹிருஷன் 66, விமுக்தி நெதுமால் 4/79, திசரு தில்ஷான் 3/22, கவிஷ்க சேனாதீர 3/80

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 174 (52.1) – ட்ரவோன் பேர்ஸிவல் 48, புபுது பண்டார 40, அசேல் சிகேரா 6/51, ஷமல் ஹிருஷன் 3/21

ஆனந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 211/6d (48.4) – லஹிரு ஹிரன்ய 108*, ஷமல் ஹிருஷன் 49, விமுக்தி நெதுமால் 3/99

திரித்துவக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 160/0 (22) – ஹசித போயகொட 103*, புபுது பண்டார 50*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

நாலந்த கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நாலந்த கல்லூரி வீரர்கள் 8 விக்கெட்டுக்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டனர். அவ்வணிக்காக லக்‌ஷித ரசஞ்சன 100 ஓட்டங்களையும், அவிஷ்க பெரேரா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்தனர்.

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய கண்டி தர்மராஜ கல்லூரி வீரர்களுக்கு 90 ஓட்டங்களளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதன்படி, பலோவ் ஒன் (follow on) முறையில் இரண்டாம் இன்னிங்சில் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட தர்மராஜ அணியினர் 182 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 29 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.

துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் அசத்திய நாலந்த அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் லக்‌ஷித ரசஞ்சன 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 301/8d (69.3) – லக்‌ஷித ரசஞ்சன 100, அவிஷ்க பெரேரா 54, சுஹங்க விஜேவர்தன 45, விராஜ் எஹலபொல 2/45, யசித சமரரத்ன 2/52

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 90 (36) – துலாஜ் பண்டார 20, சமிந்த விஜேசிங்ஹ 4/28

தர்மராஜ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 182 (36) – பவந்த உடன்கமுவ 46, கசுன் குணவர்தன 31, லக்‌ஷித ரசஞ்சன 4/33, சமிந்த விஜேசிங்ஹ 2/27

முடிவு  – நாலந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 29 ஓட்டங்களால் வெற்றி


பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா எதிர் மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை

பண்டாரகம பொது மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் மொரட்டு மஹா வித்தியாலய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இலங்கை வீரர்களிடம் தடுமாற்றம் காணும் பங்களாதேஷ்

நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த பண்டாரநாயக்க கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 98 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் மொரட்டுவ அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பண்டாரநாயக்க அணி சார்பாக அரோஷ மதுஷான் 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து 80 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பண்டாரநாயக்க கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 7 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மொரட்டுவ கல்லூரி அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 98 (27.1) – ஹச்சின்த திமல் 27, அரோஷ மதுஷான் 27, ரஷான் பெர்னாந்து 3/18, நதித் மிஷேந்திர 3/28, ஜீவந்த பெர்னாந்து 2/07, நிராஜ் கவிஷ்க 2/12

மொரட்டு மஹா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 178 (45) – நிஷான் பெர்னாந்து 62, ஷெஹத சொய்சா 34, அரோஷ மதுஷான் 8/48, ஜனிந்து ஜயவர்தன 2/40

பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 87 (27.1) – ஹச்சின்த திமல் 20,  நதித் மிஷேந்திர 3/21, ரஷான் பெர்னாந்து 3/21, ஜீவந்த பெர்னாந்து 2/08, ஜனித பெர்னாந்து 2/20

மொரட்டு மஹா வித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 10/2 (1.5)

முடிவு – மொரட்டு மஹா வித்தியாலயம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி


புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை

தாஷிக் பெரேரா மற்றும் தருஷ பெர்னாந்துவின் அரைச்சதங்களின் உதவியுடன் புனித பெனடிக்ட் கல்லூரிக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்தது.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 135 (44.5) – கவீஷ ஜயதிலக 54, நிசல்க துலாஜ் 23, பிரவீன் ஜயவிக்ரம 5/44, நுவனிந்து பெர்னாந்து 2/20

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 305/9d (61.3) – தாஷிக் பெரேரா 80*, தருஷ பெர்னாந்து 64, கிஹான் சேனாநாயக்க 42, நிஷித அபிலாஷ் 34, கவீஷ ஜயலதிக 3/63, இமேஷ் பெர்னாந்து 2/48, மஹீஷ் தீக்ஷன 2/89

புனித பெனடிக்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 240/8 (78) – ஷெஹான் பெர்னாந்து 79, சனில்க நிர்மால் 55, பிரவீன் ஜயவிக்ரம 3/70, பிரவீன் குரே 2/42

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


வெஸ்லி கல்லூரி, கொழும்பு எதிர் தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி அணியினர், முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர். இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய தர்மபால கல்லூரி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மன்ஜோதின் அபார சதத்தால் இளையோர் உலகக் கிண்ணம் இந்தியா வசம்

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி அணியினர், 185 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 300/9d (75.3) – மொவின் சுபசிங்க 71, சகுந்த லியனகே 55*, ஷெனால் தங்கல்ல 44, சசிக டி சில்வா 4/76, அவிஷ்க ஹசரிந்த 2/41

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 218 (71.2) – அமில தயாநக 38, குசாந்த பீரிஸ் 36, துலாஜ் எகொடகே 35, ஷெனால் தங்கல்ல 3/44, சகுந்த லியனகே 3/46

வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 185/9 (41) – ஷெனால் தங்கல்ல 51, தேனுக பெரேரா 41, சமிந்து சமரசிங்க 7/65

முடிவு –  போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.