மன்ஜோதின் அபார சதத்தால் இளையோர் உலகக் கிண்ணம் இந்தியா வசம்

351

மன்ஜோத் கால்ராவின் அபார சதத்தின் மூலம் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய இளையோர் அணியை 8 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்திய இந்திய இளையோர் அணி 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தை நான்காவது முறையாகவும் கைப்பற்றியது.  

நியுசிலாந்தின் மௌன்ட் மௌனன்குய் நகரின் பே ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4,000க்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் இந்திய அணி எந்த நெருக்கடியும் இன்றி அவுஸ்திரேலியா நிர்ணயித்த வெற்றி இலக்கை எட்டியது.

உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி பிளேட் சம்பியன்

ஹசித்த போயகொடவின் மற்றொரு அபார சதத்தின் மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை இளையோர் அணி பிளேட் கேடயத்தை சுவீகரித்தது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அவுஸ்திரேலிய இளையோர் அணி, இந்திய அணி ஆரம்பத்தில் செய்த தவறுகளை பயன்படுத்தி ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மக்ஸ் பிரியன்டின் நான்கு பிடியெடுப்பு வாய்ப்புகளை இந்திய வீரர்கள் தவறவிட்டார்கள்.

எப்போதும் விக்கெட்டுக்கு பின்னர் சிறப்பாக செயற்படும் ஹார்விக் டேசாய் இதில் மூன்று வாய்ப்புகளை கோட்டைவிட்டார். அதேபோன்று இந்திய களத்தடுப்பாளர்கள் அனாவசியமாக பந்தை எறிந்து அவுஸ்திரேலிய வீரர்களுக்கு ஓட்டங்களை விட்டுக் கொடுக்கவும் செய்தனர்.  

இதனால் அவுஸ்திரேலிய அணி 5 ஓவர்களுக்கு 32 ஓட்டங்களை பெற்று ஸ்திரமான நிலையில் இருந்தபோது இஷான் பொரேல் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டை பதம்பார்த்தார். பிரியன்ட் வேகமாக பந்தை விளாச அபிசேக் ஷர்மா பிடியெடுத்தார். தொடர்ந்து மறுமுனையில் 28 ஓட்டங்களுடன் இருந்த ஜக் எட்வட்ஸையும் பொரேல் வெளியேற்றினார். அடுத்து வந்த சேஜசன் சங்காவும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்ரேலிய அணி 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜொனதன் மெர்லோ மற்றும் பரம் உப்பல் ஜோடி 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச்சேர்த்தனர். மத்திய ஓவர்களில் இந்த வீரர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இலகுவாக ஓட்டங்களை சேர்த்தனர். எனினும் 34 ஓட்டங்களை பெற்றிருந்த உப்பலை ஆட்டமிழக்கச் செய்தது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

ஆஸி. அணிக்காக நிதானமாக ஆடி ஓட்டங்கள் குவித்த மெர்லோ 60 பந்துகளில் அரைச்சதம் எட்டினார். அவுஸ்திரேலிய அணி 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்றிருந்தபோது வேகமாக துடுப்பெடுத்தாட முயன்ற மெர்லோ 102 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்று அட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய கடைசி வரிசை வீரர்களும் தமது விக்கெட்டை தாரைவார்க்க அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்கு சுருண்டது.  

ஒரு வருட போட்டித் தடைக்குப் பிறகு களமிறங்கும் மேற்கிந்திய தீவுகள் வீரர்

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரரான அன்ட்ரூ ரஸல் ஒரு வருட போட்டித் தடைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளார்.

இந்நிலையில் எட்ட முடியுமான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப வீரர்களான அணித்தலைவர் பிரித்வி ஷோவ் மற்றும் மன்ஜோத் கால்ரா இருவரும் நம்பிக்கை தந்தனர். இருவரும் 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொள்ள இந்திய அணியின் வெற்றி இலக்கு நெருங்கியது.

பிரித்வி ஷோவ் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் மனோஜ் கால்ரா தனது சிறப்பாட்டத்தைக் கைவிடவில்லை. 100 வீத ஓட்ட வேகத்தை தக்கவைத்துக் கொண்ட அவர் சுப்மான் கில்லுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.

கில் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் கால்ரா அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். ஹார்விக் டேசாயுடன் 3ஆவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 89 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட கால்ரா இந்திய அணிக்கு இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்தார்.

இந்திய இளையோர் அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 220 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. டேசாய் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை பெற்றார்.

இம்முறை உலகக் கிண்ணத்தின் ஆரம்ப போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 14 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட மன்ஜோத் கால்ராய் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அதே அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அபார சதம் பெற்றார். 102 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 8 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்த உலகக் கிண்ண போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் மேற்கிந்திய தீவுகளின் அலிக் அதென்சேவுக்கு (418) அடுத்து ஒரு சதம் மூன்று அரைச்சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் சுப்மான் கில் தொடர் நாயன் விருதை வென்றார்.

T-20 உலகக் கிண்ணத்தில் ஏற்படவுள்ள வரலாற்று திருப்புமுனை

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 7ஆவது இருபதுக்கு-20 (T-20) உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறும் திகதி, நகரங்கள் மற்றும் மைதானங்கள் தொடர்பான விபரங்களை ஐ.சி.சி. இன்று(30) உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சனிக்கிழமை (27) நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப்போட்டியின்வி…. முன்னதாக நடைபெற்ற 6 T-20 உலகக் கிண்ண போட்டிகளும் ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு தொடர்களும் ஒரே காலப்பகுதியில் நடைபெற்று வந்தன.

உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய இளையோர் அணிக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை பெரும் தொகை பணப்பரிசையும் அறிவித்துள்ளது. அணியின் பயிற்சியாளரான இந்திய அணி முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட்டுக்கு அந்நாட்டு நாணய மதிப்பில் 50 இலட்சம் ரூபாயும் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கு தலா 20 இலட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படவுள்ளது.    

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் இலங்கை இளையோர் அணி ஆரம்ப போட்டிகளில் சோபிக்காமல் பிரதான சுற்றில் இருந்து வெளியேறியபோதும், அவ்வணி பிளேட் கிண்ணத்திற்கான போட்டிகளில் அபாரமாக ஆடிய அந்த கேடயத்தை வென்று தொடரின் 9 ஆவது இடத்தை பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 219 (47.2) – ஜொனதன் மெல்ரோ 76, பரம் உப்பல் 34, ஜக் எட்வட்ஸ் 28, நதன் மக்ஸ்வீனி 23, இஷான் பொரேல் 2/30, அபிஷேக் ஷர்மா 2/30, ஷிவா சிங் 2/36, கம்லேஷ் நகர்கோட்டி 2/48    

இந்தியா – 220/2 (38.5) – மன்ஜோத் கால்ரா 101*, ஹார்விக் டெசாய் 47*, சுப்மான் கில் 31, பிரித்வி ஷோ 29,  

முடிவு இந்திய இளையோர் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி