FFSL தலைவர் கிண்ணத்தில் கொவிட்-19 விதி மீறல்கள்

278

அரசாங்கம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு அமுல்படுத்திய கொவிட்-19 தொற்றுக்கு எதிரான பல விதிகள் மற்றும் வழிகாட்டல்கள் FFSL தலைவர் கிண்ண தொடரில் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி ஆரம்பமான இந்தத் தொடர் வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் குழு நிலைப் போட்டிகள் கடந்த 19ஆம் திகதி நிறைவடைந்தது. இந்தக் காலப்பிரிவில் ஏற்பாட்டாளர்கள், கழகங்கள், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிறிய அளவில் அல்லது குறிப்பிடத்தக்க வகையில் கொவிட்-19 விதிகள் மற்றும் வழகாட்டல்களை மீறியுள்ளனர். 

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் (FFSL) நடத்தப்படும் இந்தத் தொடரின் போட்டிகள் குதிரைப்பந்தயத் திடல் அரங்கு மற்றும் சுகததாச அரங்கில் நடைபெற்று வருகின்றன. எனினும் அரங்கிற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண காலிறுதிப் போட்டி விபரம்

எவ்வாறாயினும் இரு மைதானங்களிலும் போட்டிகளின்போது பெரும் எண்ணிக்கையான ரசிகர்கள் இருப்பதை காணமுடிந்துள்ளது. குறிப்பாக குதிரைப்பந்தயத் திடலில் சௌன்டர்ஸ் ஆடிய போட்டிகள் மற்றும் சுகததாச அரங்கில் செரண்டிப் அணி ஆடிய போட்டிகளில் இதனைக் காண முடிந்தது. அதிலும் அரங்கு மூடியிருக்கும் நிலையில் சுகததாச அரங்கிற்குள் ரசிகர்கள் எவ்வாறு நுழைந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது.

அரங்கில் ரசிகர்களுக்காக முறையான உடல் வெப்பம் சோதிப்பது மற்றும் கைகளை கிருமிநீக்கி முறையில் சுத்தப்படுத்துவது என்பன அமுல்படுத்தப்படாது இருந்ததோடு அதனை மீறி பார்வையிட வந்த ரசிகர்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பேணாமலும் இருந்தனர். சில வீரர்கள் கூட ரசிகர்களுடன் இருந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை காண முடிந்தது.  

இந்தத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கான குலுக்கல் முறை நடத்தப்பட்ட நிகழ்வில் பேசிய இலங்கை கால்பந்து சம்மேளனத் தலைவர் அனுர டி சில்வா கூறியதாவது,

கொழும்பு கழகத்தை வீழ்த்தி முன்னிலை பெற்றது புளூ ஈகள்ஸ்: SLTB முதல் வெற்றி

“ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று நாம் கூறியபோதும் கழகங்களின் கோரிக்கையின்படி சிலருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாம் சமூக இடைவெளியை பேணுவதில்லை மற்றும் முகக்கவசம் அணிவதில்லை என்று எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இறுதியில் இது எம்முடைய பொறுப்பாகும்.       

காலிறுதிப் போட்டிக்கான கட்டத்தில் மைதானத்தின் பிரதான அரங்கிற்குள் நுழைவதற்கு நாம் ஒரு கழகத்திற்கு 25 மேலதிக அனுமதிச் சீட்டுகளை வழங்குவோம். முகக்கவசம் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 25க்கும் அதிகமான பார்வையாளர்கள் இருந்தால் திறந்த இருக்கை வரிசைக்கு அனுப்புவோம். ரசிகர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்து சுகாதார பரிசோதகர் ஒருவர் வந்து சோதித்தால் நாமே அதற்கு பொறுப்பேற்க வேண்டி இருக்கும். அவர்களால் போட்டியை ரத்துச் செய்யக் கூட முடியும்” என்று தெரிவித்தார்.  

சீ ஹோக்கிற்கு அதிர்ச்சி கொடுத்த ரட்னம்: காலிறுதியில் பொலிஸ், டிபெண்டர்ஸ்

விளையாட்டுத் துறை அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கௌன்சில்) விளையாட்டு மருத்துவ மற்றும் மருத்துவ மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவன விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவரான (திருமதி) தமிந்த அத்தனாயக்கவை ThePapare.com தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது,

“அரங்கில் 20 வீதமானவர்களே அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் அல்லது அரச நிறுவனம் அல்லது கடை ஒன்றுக்குள் நீங்கள் நுழையும்போது பின்பற்றுவது போல் சுகாதார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுகள வழங்கிய முறையான விதிகள் மற்றும் வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உடல் வெப்ப சோதனை மற்றும் கைகளை கிருமிநீக்கி கொண்டு சுத்தப்படுத்துவதுடன் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.   

இருக்கை வரிசை சமூக இடைவெளி வழிகாட்டலுக்கு அமைய இருக்க வேண்டும். ரசிகர்களின் பதிவு மற்றும் ஒவ்வொருவரும் அமர்ந்திருப்பது பற்றி ஏற்பாட்டாளர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். அது நோய்த் தொற்றுப் பற்றிய தடயங்களை கண்டுபிடிக்க உதவும். எந்த வரிசை, எந்த இருக்கை இலக்கம், எந்த வாயிலில் இருந்து நுழைந்தார்கள் என்பது போன்ற விடயங்கள் இதில் அடங்கும் என்று கூறினார். 

காலிறுதியில் ஜாவா லேன், நியூ ஸ்டார்: ரினௌன் அணிக்கு முதல் வெற்றி

கடந்த 6-7 மாதங்களில் உலகெங்கும் நிகழந்திருக்கும் மாற்றங்களைப் பார்க்கும்போது, சில நாடுகள் இன்னும் இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எமது அன்றாட வாழ்வை முன்னெடுப்பது மட்டுமன்றி படிப்படியாக விளையாட்டுகளிலும் ஈடுபட முடிந்திருப்பது பற்றி இலங்கையர்களாகிய நாம் அதிர்ஷ்டம் பெற்றிருப்பதோடு அது பற்றி அவதானத்துடன் இருக்க வேண்டும். எதிர்கால சம்பவங்களை தடுப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்வது மற்றும் முறையான நடத்தையை பேணுவது எமது பொறுப்பாகும். 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<