இங்கிலாந்து அணியில் வாய்ப்பினை இழந்த ஜேம்ஸ் அன்டர்சன்

16
(Photo by Nathan Stirk/Getty Images)

முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அன்டர்சன், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே சதத்தில் 4 வீரர்களை பின்தள்ளி இரண்டாமிடம் பிடித்த ஆஸி. வீரர்

T20I கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை….

37 வயது நிரம்பிய அன்டர்சன் கால்தசை உபாதை ஒன்றினை எதிர்கொண்டதனை அடுத்தே, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஆஷஸ் கிண்ண டெஸ்ட் தொடரில் ஆடும் சந்தர்ப்பத்தை இழந்திருக்கின்றார்.

இதேநேரம், ஆஷஸ் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் ஜேம்ஸ் அன்டர்சனின் இடத்தினை நிரப்ப இங்கிலாந்து அணி, 25 வயது நிரம்பிய வேகப்பந்து சகலதுறை வீரரான கிரைக் ஓவர்டேனுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது.

ஜேம்ஸ் அன்டர்சன் இந்த பருவகாலத்திற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடிய போதும், குறித்த போட்டியிலேயே கால் தசை உபாதையினை எதிர்கொண்ட காரணத்தினால் நான்கு ஓவர்களை மாத்திரமே வீசியிருந்தார்.

அதேநேரம், அன்டர்சனுக்கு பதிலாக இங்கிலாந்து அணியில் உள்வாங்கப்பட்டிருக்கும் கிரைக் ஓவர்டோன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருப்பதோடு மொத்தமாக 85 முதல்தரப் போட்டிகளில் பங்கேற்று 279 விக்கெட்டுக்களை கைப்பற்றி, 2,348 ஓட்டங்களையும் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க தொடருக்கான டி20 குழாமிலும் டோனிக்கு இடமில்லை

இந்திய மற்றும் தென்னாபிரிக்க….

ஜேம்ஸ் அன்டர்சனின் உபாதை ஒரு புறமிருக்க, பென் ஸ்டோக்ஸின் சாகச சதத்தோடு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி, குறித்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரினை 1-1 சமநிலை செய்துள்ளது.

மேலும், குறித்த வெற்றியுடன் ஆஷஸ் கிண்ணத்தை தக்கவைக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ள இங்கிலாந்து அணி,  ஒல்ட் ட்ரபோர்ட் நகரில் வைத்து அவுஸ்திரேலிய அணியினை ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் செப்டம்பர் மாதம் 04ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து டெஸ்ட் குழாம் 

ஜோ ரூட் (அணித்தலைவர்), ஜொப்ரா ஆர்ச்சர், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஸ்டூவார்ட் ப்ரோட், ரோரி பேன்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், ஜோ டென்லி, ஜேக் லீச், கிரைக் ஓவர்டன், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<