காலிறுதியில் ஜாவா லேன், நியூ ஸ்டார்: ரினௌன் அணிக்கு முதல் வெற்றி

Vantage FFSL President’s Cup 2020

389

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஆட்டங்களின் முடிவுகளின்படி, A குழுவில் இருந்து ஜாவா லேன் விளையாட்டுக் கழகமும், B குழுவில் இருந்து நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகமும் அடுத்த சுற்றான காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 

குறித்த தினத்தில் இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகள்…. 

நியூ ஸ்டார் வி.க எதிர் நியூ யங்ஸ் வி.க 

திங்கட்கிழமை இரவு சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் சம அளவிலான பலத்தைக் காண்பித்தாலும், தமக்கு கிடைத்த வாய்ப்புக்களின் மூலம் நியூ ஸ்டார் கோல்களைப் புகுத்திக்கொண்டது. 

>>ரினௌன் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நியூ ஸ்டார்<<

முதல் பாதி நிறைவடைய 5 நிமிடங்கள் இருந்த நிலையில், மொஹமட் அனஸ் நியூ ஸ்டார் அணிக்கான முன்னிலை கோலைப் பெற்றார். 

மீண்டும் இரண்டாம் பாதியின் 80ஆவது நிமிடத்தில் அனஸ் தனது இரண்டாவது கோலைப் பெற, அடுத்த 9 நிமிடங்களில் முஸ்தாக் மூன்றாவது கோலையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

மறுமுனையில், நியூ யங்ஸ் அணி தமக்கான கோலுக்கான முழு முயற்சியில் ஈடுபட்டாலும் அவற்றுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. 

போட்டி நிறைவில், B குழுவில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையான முடிவுகளைப் பெற்ற நியூ ஸ்டார் அணி எந்தவித தோல்விகளும் இன்றி அடுத்த சுற்றான காலிறுதிக்கு தெரிவாகியது. 

இந்த குழு நிலைப் போட்டிகளில் நியூ ஸ்டார் அணி எதிரணிகளுக்கு எந்தவித கோல்களையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு நேரம்: நியூ ஸ்டார் வி.க 3(1) – 0(0) நியூ யங்ஸ் வி.க 

கோல் பெற்றவர்கள்  

நியூ ஸ்டார் வி.க – மொஹமட் அனஸ் 40’, 80’, மொஹமட் முஸ்தாக் 89’ 

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

நியூ ஸ்டார் வி.க – அன்டனி டிலக்ஷன் 55’, பாலகமகே சிவன்க 65’, தஸ்லீம் 72’, மொஹமட் பாசில் 75’ 

ரினௌன் வி.க எதிர் மாத்தறை சிடி கழகம்

குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இரவு இடம்பெற்ற B குழுவிற்கான அடுத்த ஆட்டம் ஆரம்பமாகி 4ஆவது நிமிடத்தில் 19 வயதின்கீழ் தேசிய அணி வீரர் மொஹமட் சாஜித் ரினௌன் அணிக்கான முன்னிலை கோலைப் பெற்றார்.  

Video – அதிரடி மாற்றங்களுக்கு காத்திருக்கும் BARCELONA !| FOOTBALL ULLAGAM

எனினும், இரண்டாம் பாதியில் 53ஆவது நிமிடத்தில் மாத்தறை சிடிக்காக ப்லக் ப்ரின்ஸ் முதல் கோலைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்தினார். 

மீண்டும், 19 வயதின்கீழ் தேசிய அணியின் மற்றொரு வீரரான ரசா ரூமி 74ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்று மீண்டும் அணியை முன்னிலைப்படுத்தினார். 

எனவே, போட்டி நிறைவில் தொடரில் தமது முதல் வெற்றியை ரினௌன் அணி பதிவு செய்தது. எனினும், இந்த இரண்டு அணிகளும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முழு நேரம்: ரினௌன் வி.க 2(1) – 1(0) மாத்தறை சிடி க

கோல் பெற்றவர்கள் 

ரினௌன் வி.க – மொஹமட் சாஜித் 04’, ரசா ரூமி 74’

மாத்தறை சிடி க – ப்லக் ப்ரின்ஸ் 53’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

ரினௌன் வி.க – மொஹமட் ரியால் 35’ 

மாத்தைறை சிடி க – ப்லக் ப்ரின்ஸ் 53’

புளூ ஸ்டார் வி.க எதிர் அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க

இந்த தொடரில் A குழுவில் இடம்பெற்ற போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்த நிலையில், கட்டாய வெற்றியொன்றுக்காக சுகததாச அரங்கில் அப் கண்ட்ரி அணியை எதிர்கொண்டது புளூ ஸ்டார் அணி. 

இரண்டாவது வெற்றியை சுவைத்த புளூ ஈகல்ஸ் மற்றும் கொழும்பு அணிகள்

லக்மால் மூலம் ஆட்டத்தின் முதல் கோலைப் பெற்ற அப் கண்ட்ரி அணிக்கு மீண்டும் கிடைத்த பெனால்டி உதையை புளூ ஸ்டார் கோல் காப்பாளர் கவீஷ் தடுத்தார். இதன்போது மீண்டும் வந்த பந்தை அவ்வணி வீரர்கள் கோலாக்கினாலும், அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.  

தொடர்ந்து முதல் பாதியில் இறுதி நிமிடத்தில் செனால் சந்தேஷ் புளூ ஸ்டார் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். 

இரண்டாம் பாதியில் சந்ரரத்ன மற்றும் இப்ராஹிம் ஆகியோர் அப் கண்ட்ரி அணிக்கான அடுத்தடுத்த கோல்களைப் பெற, நஜ்மான் புளூ ஸ்டார் அணிக்கான இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார். 

எனினும், அடுத்த கோல்களுக்கான முயற்சிகளை புளூ ஸ்டார் வீரர்கள் தொடர்ந்து மேற்கொள்ள அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எனவே, 3 – 2 என வெற்றி பெற்ற அப் கண்ட்ரி லயன்ஸ் அணி தொடரில் முதல் வெற்றியைப் பெற, இரண்டாவது தோல்வியை சந்தித்த புளூ ஸ்டார் அணியும் தொடரில் இருந்து வெளியேறியது.  

முழு நேரம்: புளூ ஸ்டார் வி.க 2(1) – 3(1) அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க

கோல் பெற்றவர்கள்  

புளூ ஸ்டார் வி.க – செனால் சந்தேஷ் 45+4’, மொஹமட் நஜ்மான் 71’

அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க – MWN லக்மால் 30’, சந்ரரத்ன 56’, இப்ரஹிம் ஜிமொ 67’ 

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

புளூ ஸ்டார் வி.க – கவீஷ் பெர்னாண்டோ 42’, செனால் சந்தேஷ் 43’, வினோத் குமார் 51’, லஹிரு தாரக 88’ 

வெற்றிநடை போடும் ரெட் ஸ்டார்ஸ்: டிபெண்டர்ஸை சமன் செய்த சோண்டர்ஸ்

ஜாவா லேன் வி.க எதிர் மொரகஸ்முல்ல வி.க 

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெற்ற A குழுவுக்கான அடுத்த மோதலில் கட்டாய வெற்றிக்காக இரண்டு அணிகளும் மோதின. எனினும், ஆட்டம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஜாவா லேன் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 

முதல் பாதியில் ரிஸ்கான் பைசர் மூலம் முன்னிலை கோலைப் பெற்ற அவ்வணி, இரண்டாம் பாதியில் நவீன் ஜுட், அலீம், மாலக பெரேரா, மதுரங்க சில்வா ஆகியோர் மூலம் மேலதிகமாக 4 கோல்களைப் பெற்று இலகு வெற்றியைப் பெற்றது. 

இந்த வெற்றியுடன் 2 வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையான முடிவுடன் 7 புள்ளிகளைப் பெற்ற ஜாவா லேன் அணி A குழுவில் இருந்து வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு செல்லும் முதல் அணியாக தம்மைப் பதிவு செய்துகொண்டது. 

 முழு நேரம்: ஜாவா லேன் வி.க 5(1) – 0(0) மொரகஸ்முல்ல வி.க 

கோல் பெற்றவர்கள்  

ஜாவா லேன் வி.க – ரிஸ்கான் பைசர் 36’, நவீன் ஜுட் 49’, மொஹமட் அலீம் 62’, மாலக பெரேரா 65’, மதுரங்க சில்வா 73’ 

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

ஜாவா லேன் வி.க – மொஹமட் அலீம் 86’ 

மொரகஸ்முல்ல வி.க –   சிரங்க பியவன்ச 20’, ரொஷான் பியவன்ச 52’, H.N தனன்ஞய 69’, NKI பிரியன்கர 86’ 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<