சீ ஹோக்கிற்கு அதிர்ச்சி கொடுத்த ரட்னம்: காலிறுதியில் பொலிஸ், டிபெண்டர்ஸ்

440

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண தொடரில் D குழுவிற்காக செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் பொலிஸ் மற்றும் ரட்னம் அணிகள் வெற்றி பெற்ற அதேவேளை, C குழுவிற்கான ஆட்டங்களில் டிபெண்டர்ஸ், சோண்டர்ஸ் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன. 

குறித்த தினம் இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகள்….

செரண்டிப் கா.க எதிர் பொலிஸ் வி.க

தொடரில் குழு Dயில் ஒரு வெற்றி, ஒரு சமநிலை என 4 புள்ளிகளுடன் இருந்த செரண்டிப் வீரர்கள் ஒரு வெற்றியுடன் இருந்து பொலிஸ் அணியை தீர்க்கமான ஆட்டத்தில் எதிர்கொண்டனர். 

வெற்றிநடை போடும் ரெட் ஸ்டார்ஸ்: டிபெண்டர்ஸை சமன் செய்த சோண்டர்ஸ்

சுகததாச அரங்கில் இரவு ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் செரண்டிப் வீரர்கள் மிக வேகமான ஆட்டத்தின்மூலம் எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்தனர். 

எனினும், இவற்றுக்கு பதில் கொடுத்த பொலிஸ் வீரர் ரிப்கான், தனது வேகத்தின் மூலம் 33ஆவது நிமிடத்தில் கோலுக்கு வெளியில் வலது பக்கத்தில் இருந்து பந்தை கம்பத்தின் ஒரு திசையினூடாக கோலாக்கினார். 

முதல் பாதியில் முன்னிலை பெற்ற பொலிஸ் அணிக்கு 62ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக்கினால் சதுர குனரத்ன கோல் கணக்ககை இரட்டிப்பாக்கினார். 

அதன் பின்னர் முதல் கோலுக்காக போராடிய செரண்டிப் வீரர்களுக்கு மதுஷான் 76ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

எஞ்சிய நிமிடங்களில் எந்த கோல்களும் பெறப்படாத நிலையில், போட்டியில் 2 – 1 என வெற்றி பெற்ற பொலிஸ் விளையாட்டுக் கழகம் குழு Dயில் முதலிடம் பெற்று வன்டேஜ் FFSL தலைவர் கிண்ணத்தின் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியது. செரண்டிப் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது.  

முழு நேரம்: செரண்டிப் கா.க 1(0) – 2(1) பொலிஸ் வி.க

கோல் பெற்றவர்கள் 

செரண்டிப் கா.க மதுஷான் 71
பொலிஸ் வி.க – ரிப்கான் மொஹமட் 33’, சதுர  குனரத்ன 62’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

செரண்டிப் கா.க மொஹமட் இஜாஸ் 54 
பொலிஸ் வி.க – ரிப்கான் மொஹமட் 57’, ஷிஷான் ப்ரபுத்த 69

சீ ஹோக் கா.க எதிர் ரட்னம் வி.க

குழு Dயில் ஒரு வெற்றி ஒரு சமநிலையுடன் 4 புள்ளிகளுடன் இருந்த சீ ஹோக் அணி குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இரவு இடம்பெற்ற போட்டியில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய ரட்னம் அணியை எதிர்கொண்டது.

Video – அதிரடி மாற்றங்களுக்கு காத்திருக்கும் BARCELONA !| FOOTBALL ULLAGAM

ஆட்டம் ஆரம்பித்த 10 ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்குள் இருந்து நாகுர் மீரா சீ ஹோக் அணிக்கான முதல் கோலைப் பெற, அடுத்த 6ஆவது நிமிடத்தில் சசன்க டில்கார மத்திய களத்தில் இருந்து பந்தை வேகமாக கோலுக்குள் செலுத்தி முதல் பாதியில் ஆட்டத்தை சமப்படுத்தினார். 

மீண்டும் 56ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்குள் இருந்து பந்தைப் பெற்ற சசன்க தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார். 

அடுத்த 2 நிமிடங்களுக்குள் கிறிஸ்து ராஜ் மத்திய களத்தில் இருந்து கோல் காப்பாளருக்கு மேலால் பந்தை செலுத்தி ரட்னம் அணிக்கான அடுத்த கோலையும் பெற்று, சீ ஹோக் வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

மீண்டும் 85ஆவது நிமிடத்தில் உயர்த்தி உள்ளனுப்பப்பட்ட பந்தை சான்தன் பாய்ந்து ஹெடர் செய்து ரட்னம் அணிக்கான நான்காவது கோலையும் பெற்றார். 

எனவே, ஆட்டம் முடிவில் 4 – 1 என வெற்றி பெற்ற ரட்னம் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. எனினும், இந்த இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகவில்லை. 

முழு நேரம்: சீ ஹோக் கா.க 4(1) – 1(1) ரட்னம் வி.க

கோல் பெற்றவர்கள்

சீ ஹோக் கா.க நாகுர் மீரா 10
ரட்னம் வி.க சசன்க டில்கார 16, 56, கிறிஸ்து ராஜ் 58, ரஜ்குமார் சான்தன் 86

டிபெண்டர்ஸ் கா.க எதிர் ரெட் ஸ்டார்ஸ் கா.க

தொடரில் C குழுவில் அங்கம் வகிக்கும் பலம் கொண்ட இவ்விரு அணிகளும் சுகததாச அரங்கில் மோதிய இந்த மோதல் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. 

இரண்டாவது வெற்றியை சுவைத்த புளூ ஈகல்ஸ் மற்றும் கொழும்பு அணிகள்

ஏற்கனவே, 2 வெற்றிகளுடன் குழுவில் முன்னிலையில் இருந்த ரெட் ஸ்டார்ஸ் அணியை கட்டாயம் வீழ்த்த வேண்டிய நிலையில் டிபெண்டர்ஸ் அணி களம் கண்டது. 

ரெட் ஸ்டார்ஸ் அணியின் கோல் எல்லையில் வைத்து அவ்வணி வீரர் எதிரணியின் தலைவர் ரொஷானை முறையற்ற விதத்தில் வீழ்த்த டிபெண்டர்ஸ் அணிக்கு போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை ஜேசுராஜ் பேர்னாட் கோலாக்கினார். 

இதுவே, போட்டியில் பெறப்பட்ட ஒரே கோலாக இருந்தது. இதனால் C குழுவில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள டிபெண்டர்ஸ் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ரெட் ஸ்டார் தொடர்ந்தும் 6 புள்ளிகளுடன் உள்ள அதேவேளை குறித்த குழுவில் இருந்து இரண்டாவது அணியாக அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 

முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா.க 1(1) 0(0) ரெட் ஸ்டார்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள் 

டிபெண்டர்ஸ் கா.க – ஜேசுராஜ் பேர்னாட் (P)40’ 

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

டிபெண்டர்ஸ் கா.க – அசிகுர் ரஹ்மான் 23’, R. ஜயசேகர
ரெட் ஸ்டார்ஸ் கா.க ஜானக சமிந்த 90’

சோண்டர்ஸ் வி.க எதிர் சுபர் சன் வி.க

C குழுவுக்கான மற்றைய போட்டியில் ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையான முடிவைப் பெற்றிருந்த சோண்டர்ஸ் அணி குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் தொடரில் எந்த வெற்றியையும் பெறாத சுபர் சன் அணியை எதிர்கொண்டது. 

காலிறுதியில் ஜாவா லேன், நியூ ஸ்டார்: ரினௌன் அணிக்கு முதல் வெற்றி

முதல் பாதியில் ஆக்ரோசமான ஆட்டத்தைக் காண்பித்த சோண்டர்ஸ் வீரர்கள் எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக் கொடுக்காமல் தமக்கு 6 கோல்களைப் பெற்றனர். 

எனினும், இரண்டாம் பாதியில் சோண்டர்ஸ் வீரர்கள் மேலும் 3 கோல்களை மாத்திரம் பெற்றனர். 50 ஆவது நிமிடத்தின் பின்னர் தமது ஆட்டத்தில் வேகத்தை காண்பித்த சுபர் சன் வீரர்கள் இறுதி 40 நிமிடங்களில் 5 கோல்களைப் பெற்றனர். 

எனினும், போட்டி இறுதியில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 9 – 5 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் இந்த இரண்டு அணிகளும் வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முழு நேரம்: சோண்டர்ஸ் வி.க 9(6) – 5(0) சுபர் சன் வி.க

கோல் பெற்றவர்கள் 

சோண்டர்ஸ் வி.க டிலான் கௌஷல்ய 4’&63’, மொஹமட் குர்ஷிட் 21’,40’&69’, சுந்தராஜ் நிரேஷ் 25’&(P)73’, கிறிஷான்த அபேசேகர 30’ சனோஜ் சமீர 41’

சுபர் சன் வி.க மொஹமட் ரிப்கான் 50’, பிரனவனன் சாருஜன் 70’, மொஹமட் சசன் 847’ 8’ & 90+2’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

சோண்டர்ஸ் வி.க – இனந்ரஜீவ உதார 19’, ஹெட்டியாரச்சி 90+2’ 
சுபர் சன் வி.க – பிரனவனன் சாருஜன் 36’ மொஹமட் பாஹிம் 80’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<