டெஸ்ட் சதங்களில் பவாத் அலாம் புதிய சாதனை

125

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்த பாகிஸ்தான் வீரர் பவாத் அலாம், டெஸ்ட் அரங்கில் அதி விரைவாக 5 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அந்நாட்டு அணியுடன் நான்கு T20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது

T20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி திரில் வெற்றிபெற்றது.

எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் சீக்குகே பிரசன்ன

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 20ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

அதன்படி, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது

அந்த அணியின் பவாத் அலாம் அதிகபட்சமாக 124 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததுடன், பல முக்கிய சாதனைகளையும் படைத்தார்

35 வயதான இடதுகை துடுபப்பாட்ட வீரர் பவாத் அலாம், 22 இன்னிங்ஸ்களில் விரைவாக 5 சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.

தென்னாபிரிக்க தொடருக்கான 30 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் சார்பில் விரைவாக 5 சதங்கள் பெற்றுக்கொண்டவர்கள் வரிசையில் யூனிஸ்கான் (28 இன்னிங்ஸ்) முதலிடத்தில் இருந்தார். நேற்று பவாத் அலாம் 22ஆவது இன்னிங்சில் 5ஆவது சதத்தை பூர்த்தி செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2009இல் இலங்கை அணிக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த பவாத் அலாம், சுமார் 11 ஆண்டுகள் கழித்து 2020இல் நியூசிலாந்து அணிக்கெதிராக இரண்டாவது சதத்தைப் பெற்றுக்கொண்டார்

அதன்பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த அவர், தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் சதமடித்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்

மஹேல பயிற்றுவிப்பில் சம்பியன் பட்டம் வென்ற சௌத்தர்ன் பிரேவ்

இதுஇவ்வாறிருக்க, ஆசிய வீரர்களில் அதி விரைவாக 5 டெஸ்ட் சதங்கள் பெற்றுக் கொண்ட வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இந்தியாவின் புஜாரா காணப்பட்டார். 24 இன்னிங்ஸ்களில் புஜாரா விரைவாக 5 சதங்கள் பெற்றுக்கொண்டார். இதனையும் தற்போது பவாத் அலாம் முறியடித்துள்ளார்

இந்தப் பட்டியலில் சவுரவ் கங்குலி (25 இன்னிஸ்) மூன்றாவது இடத்தையும், சுனில் கவாஸ்கர் (25 இன்னிங்ஸ்) நான்காவது இடத்திலும் உள்ளனர்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…