மஹேல பயிற்றுவிப்பில் சம்பியன் பட்டம் வென்ற சௌத்தர்ன் பிரேவ்

262
Birmingham Phoenix vs Southern Brave

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB), முதல் முறையாக ஒழுங்கு செய்த அணிக்கு 100 பந்துகள் கொண்ட ”தி ஹன்ரட்” கிரிக்கெட் தொடரின் ஆடவர் சம்பியன்களாக சௌத்தர்ன் பிரேவ் அணி மகுடம் சூடியிருக்கின்றது. 

அதன்படி, அங்குரார்ப்பண ”தி ஹன்ரட்” கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சௌத்தர்ன் பிரேவ் அணி 5 விக்கெட்டுக்களால் பர்மிங்கம் பீனிக்ஸ் அணி வீழ்த்தியே சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது. 

>> RCB அணியில் வனிந்து ஹஸரங்கவுடன் இணையும் சமீர

ஜூலை மாத இறுதியில் இருந்து நடைபெற்று வரும் இந்த ஹன்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரர் மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பிலான சௌத்தர்ன் பிரேவ் அணி தொடரின் எலிமினேட்டர்  போட்டியில் ட்ரென்ட் ரொக்கேட்ஸ் அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தெரிவானது. 

தொடர்ந்து சனிக்கிழமை (21) தொடரின் இறுதிப் போட்டி பர்மிங்கம் பீனிக்ஸ் மற்றும் சௌத்தர்ன் பிரேவ் அணிகள் இடையில், லன்டண் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பர்மிங்கம் பீனிக்ஸ் அணியின் தலைவர் மொயீன் அலி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, சௌத்தர்ன் பிரேவ் அணிக்கு வழங்கியிருந்தார். 

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய சௌத்தர்ன் பிரேவ் அணியினர் 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். 

சௌத்தர்ன் பிரேவ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரராக களமிறங்கிய போல் ஸ்டேர்லிங், வெறும் 36 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ் விட்லி 19 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 44 ஓட்டங்களை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பர்மிங்கம் பீனிக்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அடம் மில்னே 20 பந்துகளை வீசி 2 விக்கெட்டுக்களை கைப்பற்ற, இம்ரான் தாஹிர், பென்னி ஹொவல் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>> இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 18 வீரர்கள்!

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 169 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய சௌத்தர்ன் பிரேவ் அணி 100 பந்துகளுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது. 

பர்மிங்கம் பீனிக்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் லியாம் லிவிங்ஸ்டோன் 19 பந்துகளுக்கு 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த போதும் அவரது துடுப்பாட்டம் வீணானது. 

மறுமுனையில் ஜோர்ஜ் கார்டன், கிரைக் ஒவர்டன், டைமால் மில்ஸ் மற்றும் ஜேக் லின்டொட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் ஆட்டநாயகனாக போல் ஸ்டெர்லிங் தெரிவாக, தொடர் நாயகனாக லியாம் லிவிங்ஸ்டொன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

போட்டியின் சுருக்கம்

செளத்தர்ன் பிரேவ் – 168/5 (100) போல் ஸ்டேர்லிங் 61(36), ரோஸ் விட்லி 44(19)*, அடம் மில்னே 8/2(20)

பர்மிங்கம் பீனிக்ஸ் – 136/5 (100) லியாம் லிவிங்ஸ்டொன் 46(19), மொயீன் அலி 36(30), டைமால் மில்ஸ் 13/1(20)

முடிவு – செளத்தர்ன் பிரேவ் அணி 32 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<