எமது பின்னடைவுக்கு முரண்பாடுகளே காரணம் – ஜேசன் ஹோல்டர்

254
©Getty image

இம்முறை உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பின்னடைவுக்கு அணியில் காணப்பட்ட முரண்பாடுகளே காரணம் என தெரிவித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், ஒருசில போட்டிகளில் நெருக்கமான தோல்விகளை சந்திக்க நேரிட்டாலும், இறுதி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

ஆப்கானுக்கு எதிரான வெற்றியுடன் உலகக்கிண்ணத்தை நிறைவு செய்த மேற்கிந்திய தீவுகள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 42ஆவது…….

உலகக் கிண்ண லீக் சுற்றில் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட ஆப்கானிஸ்தான்மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் நேற்று (04) மோதின

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நீண்ட நேரம் ஆட்டம் காட்டினாலும், துடுப்பாட்டத்தில் மீணடும் ஏமாற்றத்தை சந்தித்து தோல்வி அடைந்தது

இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் அபாரமாக இருந்தது. உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அந்த அணி விளையாடியதைக் காணமுடிந்தது. எனவே, அந்த அணி ஆறுதல் வெற்றியுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பின்னடைவுக்கு அணி வீரர்களுக்கிடையில் இருந்த முரண்பாடுகள் தான் காரணம் என ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். போட்டியின் பிறகு அவர் அளித்த பேட்டியில்

”ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உலகக் கிண்ணத்தில் சில நெருக்கமான தோல்விகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். எனவே போட்டித் தொடரை வெற்றியுடன் முடிப்பது மிகவும் நல்லது

19 வயதின்கீழ் வீரர்களுக்கான மாகாண ஒருநாள் தொடர் இம்மாதம் ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 19 வயதின் கீழ்ப்பட்ட…

இன்றைய போட்டியில் எமது துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எவின் லூவிஸ் (58), ஷாய் ஹோப் (77) ஆகிய இருவரும் சிறந்ததொரு இணைப்பாட்டத்தைப் பெற்றுக் கொடுத்தனர். இறுதியாக நானும், நிக்கோலஸ் பூரானும் இன்னிங்ஸை நிறைவு செய்தோம்

300 ஓட்டங்கள் என்பது இந்த ஆடுகளத்தில் சற்று சவாலான இலக்கு என நான் கருதினேன். ஆப்கானிஸ்தான் அணியிலும் ரஹ்மத் ஷா மற்றும் இக்ரம் அலிகில் ஆகியோருக்கு இடையில் ஒரு சிறந்த இணைப்பாட்டம் இருந்தது. ஆனால் நாங்கள் வலுவாக விளையாடி இறுதியில் வெற்றி பெற்றோம்” என தெரிவித்தார்

மேலும், இம்முறை உலகக் கிண்ணத்தில் திட்டமிட்டபடி விடயங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனதாக ஹோல்டர் ஒப்புக்கொண்டார்.

”முரண்பாடுகள் தான் எங்களின் பின்னடைவுக்கு காரணம் என நான் நினைக்கிறேன். எங்களது களத்தடுப்பை மேம்படுத்த வேண்டி இருக்கிறது, இந்த தொடர் முழுவதும் துடுப்பாட்டம் சீரற்றதாக இருந்தது, முதலில் நாங்கள் அந்த பகுதியில் முன்னேற வேண்டும். இருப்பினும், பந்து வீச்சாளர்கள் ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” 

இதேநேரம், தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தொடர்பில் ஹோல்டர் பேசுகையில்,  

”மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் சிறந்த தூதர் ஆவார். அவரது எதிர்காலத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சனிக்கிழமையன்று தனது கடைசி ஒருநாள் போட்டியில் பணிபுரியும் .சி.சி நடுவரான இயன் குல்ட்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்”. 

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 72 ஓட்டங்களைப் பெற்று ஆட்டநாயகன் விருது வென்ற ஷாய் ஹோப் போட்டியின் பிறகு கருத்து வெளியிடுகையில்,   

”நாங்கள் இருக்க விரும்பிய இடம் இதுவல்ல (அட்டவணையில் உள்ள நிலையைப் பொறுத்தவரை), ஆனால் இது ஒரு கற்றல் அனுபவமாகும், இந்தத் தொடரில் இருந்து நாம் நிறைய விடயங்களை படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனினும் வெற்றியுடன் இந்தத் தொடரை முடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, எனவே, அடுத்த தொடருக்கும் எனக்கு இந்த ஆட்டத்தை என்னால் தொடர முடியும்“ என தெரிவித்தார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<