பழைய கிரிக்கெட் வீடியோக்களை ரசிகர்களுக்கு பரிசாக அளிக்கும் ஐ.சி.சி

59

சர்வதேச அளவில் அதிபயங்கரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஒலிம்பிக் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டுள்ளன. 

எனவே, வீட்டுகளுக்குள் முடங்கி உள்ள கிரிக்கெட் ரசிகர்களை சந்தோஷப்படுத்த .சி.சி அதிரடி முடிவு எடுத்துள்ளது.

T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல்

சர்வதேச கிரிக்கெட் வாரியமும் (ஐ.சி.சி.) கொரோனா வைரஸிற்கு …………

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவை தங்களிடம் உள்ள சுமார் 45 வருடங்கள் பழமையான கிரிக்கெட் போட்டிகளின் வீடியோக்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதைப் பரிசாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

.சி.சியிடம் 1975 உலகக் கிண்ண போட்டித் தொடர் முதல் பல்வேறு முக்கிய கிரிக்கெட் தொடர்களின் வீடியோக்கள் உள்ளன

இதில் இந்தியாபாகிஸ்தான் அணிகள் விளையாடிய கிரிக்கெட் போட்டிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர், .சி.சியின் சம்பியன்ஸ் கிண்ண தொடர், மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள், 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் ஆகியவற்றின் வீடியோக்களும் அடங்கும்

எனவே, இந்த கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் .சி.சியின் இணையத்தளம் வாயிலாக கண்டு களிக்கலாம்

எனவே தற்போதுள்ள இளம் சமுதாயத்தினர் தாங்கள் இதுவரை பார்த்திராத பல அரிய போட்டிகளை  கண்டுகளிப்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது.

ThePapare.com வினா விடை – இலங்கை கிரிக்கெட்டின் துடுப்பாட்டம்

விளையாட்டு தொடர்பிலான உங்கள் அறிவை பரிசோதிப்பதற்கும், …….

இதுதொடர்பில் .சி.சியின் நிறைவேற்று அதிகாரி மனு சவ்னி கருத்து வெளியிடுகையில், கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டுக்களும் முடங்கி இருப்பதால், ரசிகர்களுடன் இணைந்து இருக்க வேண்டிய தேவை உள்ளது. அதனால், சிறந்த முடிவாக பழைய கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். எனவே, ரசிகர்களுக்கு மீண்டும் பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்க்க முடியும்” என தெரிவித்துள்ளார்

இந்த நிலையில், ”கொரோனா வைரஸ் காரணமாக இரத்து செய்யப்பட்ட போட்டித் தொடர்களுக்குப் பதிலாக அந்தந்த அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பழைய வீடியோக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

அதுமாத்திரமின்றி, .சி.சியின் இணையத்தளம் வாயிலாக எமது ரசிகர்களுக்கு இந்தப் போட்டிகளை கண்டுகளிக்கலாம். மேலும், கடந்த 4 தசாப்தங்களில் எந்தெந்தப் போட்டிகளை பார்ப்பதற்கு தவறவிடப்பட்டது என்பது தொடர்பில் எமது பேஸ்புக் தளத்தில் அவர்களுக்கு வாக்களிக்க முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதன்படி, 1975, 1979, 1983ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் முழுமையான அல்லது விசேட தருணங்களை உள்ளடக்கிய போட்டிகள் எதிர்வரும் வாரங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்

ஐ.சி.சி. இன். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குமான ஒருநாள் தொடர்கள் – ஒரு பார்வை

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ………….

அத்துடன், 2004, 2006, 2009 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரின் சிறப்பு காட்சிகள் மற்றும் 2007 முதல் 2014 வரை நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன

மேலும் 2009 முதல் 2013 வரை நடைபெற்ற மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் மற்றும் மகளிருக்கான டி20 போட்டிகளின் சிறப்பு தருணங்களை உள்ளடக்கிய வீடியோக்களும் இதில் அடங்கும்

இதுஇவ்வாறிருக்க, 2019இல் நடைபெற்ற .சி.சியின் உலகக் கிண்ணப் போட்டிகளின் திரையில் பின்னால் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் உள்ளிட்ட போட்டிகளின் முக்கிய தருணங்களை உள்ளடக்கிய வீடியோக்களையும் ரசிகர்களுக்கு ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<