T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல்

68
Women’s World Cup Qualifier

சர்வதேச கிரிக்கெட் வாரியமும் (ஐ.சி.சி.) கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இணைந்திருக்கின்றது. 

ஆம், சர்வதேச கிரிக்கெட் வாரியமானது தமக்கு கிடைத்த சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய  ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெறவிருந்த அனைத்து தகுதிகாண் கிரிக்கெட் தொடர்களையும் பிற்போட்டிருக்கின்றது.  

கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடுகளுக்கு இடையில் தற்போது போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதேநேரம், பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இவற்றையும் கருத்திற் கொண்டே சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடைபெறவிருந்த அனைத்து தகுதிகாண் கிரிக்கெட் தொடர்களினையும் பிற்போட்டிருக்கின்றது.  

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும், தற்போது மிகப் பெரிய..

அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூலம் ஜூன் 30 இற்கு முதல் பிற்போடப்பட்டிருக்கும் தகுதிகாண் கிரிக்கெட் தொடர்கள் கீழ் வருமாறு. 

(இந்த கிரிக்கெட் தொடர்கள் 2020ஆம் ஆண்டு ஆடவர் T20 உலகக் கிண்ணம், 2023ஆம் ஆண்டு ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஆகியவற்றுக்கான தகுதிகாண் போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது). 

  • ஆடவர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் A – ஆசியப் பிராந்தியம் – குவைட் – ஏப்ரல் 16 தொடக்கம் ஏப்ரல் 21 வரை
  • ஆடவர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் – ஆப்ரிக்க பிராந்தியம் – குவைட் – ஏப்ரல் 27 தொடக்கம் மே 3 வரை 
  • ஐ.சி.சி. ஆடவர் உலகக் கிண்ண லீக் 2 தொடர் – நமிபியா – ஏப்ரல் 20 தொடக்கம் 27 வரை
  • ஆடவர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் A – ஐரோப்பிய பிராந்தியம் – ஸ்பெயின் – மே 16 தொடக்கம் மே 22 வரை
  • ஐ.சி.சி. ஆடவர் உலகக் கிண்ண லீக் 2 தொடர் – பபுவா நியூ கினியா – ஜூன் 9 தொடக்கம் ஜூன் 16 வரை
  • ஆடவர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் C – ஐரோப்பிய பிராந்தியம் – பெல்ஜியம் – ஜூன் 10 தொடக்கம் ஜூன் 16 வரை
  • ஆடவர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் B – ஆசியப் பிராந்தியம் – மலேசியா – ஜூன் 26 தொடக்கம் ஜூலை 02 வரை
  • ஆடவர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் B – ஐரோப்பியப பிராந்தியம் – மலேசியா – ஜூன் 24 தொடக்கம் ஜூன் 30 வரை

ThePapare.com வினா விடை – இலங்கை கிரிக்கெட்டின் துடுப்பாட்டம்

விளையாட்டு தொடர்பிலான உங்கள் அறிவை பரிசோதிப்பதற்கும், புதிய விடயங்களை..

அதேநேரம், ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர், இடம்பெறவிருக்கும் ஐ.சி.சி. இன் தகுதிகாண் கிரிக்கெட் தொடர்களும் தற்போது ஐ.சி.சி. இன் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றினை நடத்துவதா? இல்லையா? என்ற கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதன் காரணமாக, ஜூலை 03ஆம் திகதி தொடக்கம் ஜூலை 17ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் தொடரும் இடம்பெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<