அடுத்த நான்கு ஆண்டுகளுக்குமான (2019-2023) சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி. இன்) ஒருநாள் தொடர்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.  

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்த ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் அணிகளைத்  தெரிவு செய்யவே ஐ.சி.சி. இனால் இந்த ஒருநாள் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. 

தென்னாபிரிக்க கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முதன்முறையாக பியூரன் ஹென்ரிக்ஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின்…..

ஐ.சி.சி. இன் ஒருநாள் தொடர்களின் முதல் போட்டி ஓமான் மற்றும் பபுவா நியூ கினியா அணிகள் இடையிலான போட்டியோடு கடந்த 2019ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் ஆரம்பித்திருந்தது. 

எனினும், உலகக் கிண்ணப் பயணப் பாதையாக அமையும் ஐ.சி.சி. இன் ஒருநாள் தொடர்களில் கிரிக்கெட் ஜாம்பவன் அணிகள் இன்னும் விளையாட ஆரம்பிக்கவில்லை. இவ்வாறான நிலையில், நாம் ஐ.சி.சி. இன் ஒருநாள் தொடர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம். 

எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடும் அணிகளை தெரிவு செய்ய ஐ.சி.சி. ஆனது தமது ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் மூலம் மொத்தமாக 32 நாடுகளுக்கு 3 வேறுவிதமான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை ஒழுங்கு செய்திருக்கின்றது. அவை கீழ் வருமாறு.

  1. ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக் 
  2. ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண லீக் – 2 
  3. ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சவால் லீக்

ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக்

ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக் என அழைக்கப்படுவது ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவ அணிகள் பங்குபெறும் இருதரப்பு ஒருநாள் தொடர்களை குறிக்கின்றது. இந்த சுபர் லீக் தொடரில் மொத்தமாக இரண்டு வருட காலப்பகுதிக்குள் (2020-2022) மொத்தமாக 156 ஒருநாள் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன.

அணிகள் 13 (12 முழு அங்கத்துவ நாடுகள் + நெதர்லாந்து)
தொடரின் வகை இருதரப்பு ஒருநாள் தொடர்கள் (52)
ஒரு தொடரில் இருக்கும் போட்டிகள் 3
ஒவ்வொரு அணிக்கும் இருக்கும் தொடர்கள் 8
விளையாடப்படும் போட்டிகளின் தகுதி ஒருநாள் சர்வதேச போட்டிகள்

இந்த ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக் தொடர், 2020ஆம் ஆண்டின் மே மாதம் ஆரம்பமாகவுள்ளதோடு, 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நிறைவுக்கு வருகின்றது. இந்த சுபர் லீக் கிரிக்கெட் தொடர் மூலம் இதில் பங்கெடுக்கும் அணிகளுக்கு ஒரு வருட காலம் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பதோடு, வேறு கிரிக்கெட் தொடர்களையும் தங்களது விருப்பத்திற்கு அமைய ஒழுங்கு செய்து கொள்ள முடியும். 

அப்துர் ரசாக்கிற்கு அழைப்பு விடுத்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின்……

இந்த சுபர் லீக் தொடருக்கான புள்ளிகள் வழங்குதல், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பை ஒத்த விதத்தில் அல்லாமல் வழமையான முறையில் அமைகின்றது. ஏனெனில், சுபர் லீக் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் அனைத்தும் ஒரே எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடவிருக்கின்ற காரணத்திலாகும்.

விளையாடும் அணிகள்

ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக் தொடரில் ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவ நாடுகள் 12 உம் அதற்கு மேலதிகமாக நெதர்லாந்தும் பங்கெடுக்கின்றன. நெதர்லாந்து கிரிக்கெட் அணி, 2015-2017ஆம் ஆண்டுகளுக்கான ஐ.சி.சி. உலக கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த சுபர் லீக் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொள்கின்றது, 

ஆப்கானிஸ்தான் அவுஸ்திரேலியா பங்களாதேஷ் இங்கிலாந்து
இந்தியா அயர்லாந்து நியூசிலாந்து பாகிஸ்தான்
தென்னாபிரிக்கா இலங்கை மேற்கிந்திய தீவுகள் ஜிம்பாப்வே
நெதர்லாந்து

போட்டி அட்டவணை

சுபர் லீக் தொடரில் பங்கெடுக்கும் அணி ஒன்று, தொடரில் பங்கெடுக்கின்ற 12 அணிகளில் 8 இணை தெரிவு செய்து 8 ஒருநாள் தொடர்களில் விளையாட வேண்டும். அணிகள் தெரிவு, தொடரில் பங்கெடுக்கும் இரு நாடுகளின் பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும். இதில் நான்கு தொடர்கள் குறிப்பிட்ட அணியொன்றின் நாட்டிலும், மற்றைய நான்கு தொடர்கள் வெளிநாட்டிலும் நடைபெறவிருக்கின்றன.  

இலங்கை அணியுடன் ஒருநாள் தொடர்களில் பங்கெடுக்கும் நாடுகள்

  • தென்னாபிரிக்கா (இலங்கை) (ஜூன் 2020)
  • இந்தியா (இலங்கை) (ஜூன் 2020)
  • ஜிம்பாப்வே (இலங்கை) (ஒக்டோபர் 2020)
  • நியூசிலாந்து (நியூசிலாந்து) (பெப்ரவரி 2021)
  • மேற்கிந்திய தீவுகள் (மேற்கிந்திய தீவுகள்) (பெப்ரவரி 2021)
  • இங்கிலாந்து (இங்கிலாந்து) (ஜூன் 2021)
  • ஆப்கானிஸ்தான் (இலங்கை) (ஜூலை 2021)

* தொடரின் திகதிகளில் மாற்றம் ஏற்பட முடியும்.

* ( ) இனுல் உள்ளவை தொடர் இடம்பெறவுள்ள நாடுகள்

இந்த தொடர்கள் தவிர, இலங்கை அணியானது சுபர் லீக் நடைபெறும் காலப்பகுதியில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் ஆடவுள்ளதோடு தென்னாபிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் விளையாடவிருக்கின்றது. இதேநேரம், இலங்கை அணி 2022ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளாக இடம்பெறும் ஆசியக் கிண்ணத் தொடரிலும் விளையாடவிருக்கின்றது.

உலகக் கிண்ணத் தகுதி  

சுபர் லீக் தொடரில், இந்தியாவுடன் சேர்த்து, புள்ளிகள் அட்டவணையில் முதல் 8 இடங்களைப் பெறும் அணிகள் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக தகுதி பெறும். 

கொரோனாவிற்கு எதிராக போராட இலங்கை கிரிக்கெட் சபை நிதி உதவி

இலங்கையின் மிகப் பெரிய சுகாதாரப்……

இதேநேரம், இந்த தொடரின் மூலம் உலகக் கிண்ணத்திற்கு தெரிவாகாத 5 அணிகளும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் மூலம் 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு மேலதிக தேவையாக இருக்கும் இரண்டு அணிகளாக மாறிக் கொள்ள முடியும்.

ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண லீக் – 2

ஐ.சி.சி. முழு அங்கத்துவத்தினைப் பெறாத ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தகுதி கொண்ட 7 அணிகள் விளையாடும் ஒருநாள் தொடராக ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண லீக் – 2 அமைகின்றது. இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் முன்னர், ஐ.சி.சி. உலக கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப் என அழைக்கப்பட்டிருந்தது. 

அணிகள் 7
தொடர் வடிவம் முக்கோண ஒருநாள் தொடர்
ஒரு தொடர் கொண்டிருக்கும் போட்டிகள் 6
ஒரு அணிக்கு ஒரு தொடரில் கிடைக்கும் போட்டிகள் 4
ஒரு அணி விளையாடும் தொடர்கள் 9
போட்டிகளின் தகுதி ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்

பங்கெடுக்கும் அணிகள்

நேபாளம் ஸ்கொட்லாந்து ஐக்கிய அரபு இராச்சியம்
நமிபியா ஓமான் பபுவா நியூ கினியா
அமெரிக்கா

உலகக் கிண்ணத் தகுதி

இந்த தொடரில் விளையாடும் அணிகள் எதுவும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக நேரடித் தகுதியினைப் பெறாது. இந்த தொடரில் இருந்து புள்ளிகள் அட்டவணையில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் விளையாடும் தகுதியினைப் பெறும். 

அதேநேரம், உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கு தகுதி பெறாத நான்கு அணிகளும், உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கு முன்னர், நடைபெறவுள்ள பிளே ஒப் கிரிக்கெட் தொடரில் விளையாடி உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கு தகுதி பெற முடியும்.

ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சவால் லீக்

ஐ.சி.சி. இன் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 21 தொடக்கம் 32 வரையிலான நிலையில் உள்ள அணிகள் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சவால் லீக் தொடரில் விளையாடவிருக்கின்றன. 

கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் ஆரம்பித்த இந்த தொடரில் 12 நாடுகள் பங்கேற்பதோடு, அந்நாடுகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இந்த ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சவால் லீக் தொடரின் மோதல்கள் இடம்பெறுகின்றன.   

இந்த கிரிக்கெட் தொடர் முன்னர், இடம்பெற்ற உலக கிரிக்கெட் லீக் தொடர்களின் தற்போதைய வடிவமாகும். 

அணிகள் 12
தொடர் வடிவம்   இரண்டு குழுக்களுக்கும் ஆறு அணிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் (3)
ஒரு தொடர் கொண்டிருக்கும் போட்டிகள்  15
ஒரு அணிக்கு ஒரு தொடரில் கிடைக்கும் போட்டிகள்  5
ஒரு அணி விளையாடும் தொடர்கள் 3
போட்டிகளின் தகுதி லிஸ்ட் ஏ போட்டிகள் (90)

பங்குபெறும் அணிகள்

குழு A  குழு B
கனடா ஹொங்கொங்
சிங்கப்பூர் கென்யா
டென்மார்க் உகாண்டா
மலேசியா ஜேர்சி
வனுடு பெர்மூடா
கட்டார் இத்தாலி

உமர் அக்மல் மீது சூதாட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்……

உலகக் கிண்ணத் தகுதி

ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண லீக் – 2 போன்று இந்த தொடரில் விளையாடும் அணிகளும் 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக நேரடித் தகுதியினைப் பெறாது. எனினும், தொடரில் விளையாடும் இரண்டு குழுக்களிலும் இருந்து (புள்ளிகள் அடிப்படையில்) முதல் இடத்தினைப் பெறும் அணி, 2022ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளுக்கு முன்னர் இடம்பெறும் பிளேஒப் கிரிக்கெட் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொள்ளும். 

வேறு விடயங்கள்

2023ஆம் ஆண்டுக்கு உலகக் கிண்ணத்திற்குப் பின்னர், அடுத்து வருகின்ற நான்கு ஆண்டுகளுக்குமான (2023-2027) ஐ.சி.சி. இன் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கெடுக்கும் அணிகளின் தரநிலைகள் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் மூலம் தீர்மானிக்கப்படும். 

அதாவது,  நடைபெறவிருக்கும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக் தொடரில் 13ஆம் இடத்தினைப் பெறும் அணி,  2023-2027 காலப்பகுதியில் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண லீக் – 2 தொடரில் விளையாட, 2019-2023 காலப்பகுதிக்குரிய ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண லீக் – 2 தொடரில் சிறந்த பதிவினைக் காட்டிய அணியானது 2023-2027 காலப்பகுதிக்குரிய ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக் தொடரில் 13ஆவது அணியாக விளையாடவிருக்கின்றது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<