டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி அதிரடி முன்னேற்றம்

86

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க மண்ணில் வைத்து கைப்பற்றிய இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மண்ணுக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுகிறது. 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்து வசம்

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான ………

முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் (27) நிறைவுக்கு வந்தது. முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இரண்டாம் மற்றும் மூன்றாம் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றிருந்தது.   

இந்நிலையில் குறித்த தொடரின் நான்காவதும் இறுதியுமான போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (24) ஜஹனஸ்பேர்க்கில் ஆரம்பமானது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 191 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்து அணி தரவரிசையில் ஐந்திலிருந்து  மூன்றாமிடத்திற்கு அதிரடியாக முன்னேறியுள்ளது.  

குறித்த டெஸ்ட் தொடர் ஆரம்பமாகுவற்கு முன்னர் இங்கிலாந்து அணி 101 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்பட்ட அதேநேரம் தென்னாபிரிக்க அணி 102 தரவரிசை புள்ளிகளுடன் நான்காமிடத்தில் காணப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியதன் மூலம் இரண்டு நிலைகள் உயர்ந்து தென்னாபிரிக்க அணியை பின்தள்ளி 105 தரவரிசை புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

மகளிர் T20I உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஐசிசி மகளிர் T20I கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை மகளிர் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (27) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது…..

இதேவேளை, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவிய தென்னாபிரிக்க அணி 98 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து அணியின் உயர்வு காரணமாக மூன்றாமிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி தற்போது நான்காமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

மேலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையின் படி இங்கிலாந்து அணி 5 வெற்றிகள், 3 தோல்விகள் மற்றும் ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவுடன் மொத்தமாக 146 புள்ளிகளுடன் மூன்றாவது நிலையில் காணப்படுகின்றது.  

குறித்த தரவரிசையில் தென்னாபிரிக்க அணி ஒரு வெற்றி, 6 தோல்விகளுடன் மொத்தமாக 30 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் நேற்று நிறைவுக்கு வந்த இறுதி டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துவீச்சு பிரதியை பதிவு செய்ததன் காரணமாக இதிலிருந்து 6 புள்ளிகளை இழந்து தற்போது 24 புள்ளிகளுடன் ஏழாமிடத்தில் காணப்படுகின்றது. 

ஐ.சி.சி டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை. 

  1. இந்தியா – 120 புள்ளிகள்
  2. அவுஸ்திரேலியா – 108 புள்ளிகள்
  3. இங்கிலாந்து – 105 புள்ளிகள்
  4. நியூசிலாந்து – 105 புள்ளிகள்
  5. தென்னாபிரிக்கா – 98 புள்ளிகள்
  6. இலங்கை – 92 புள்ளிகள்
  7. பாகிஸ்தான் – 85 புள்ளிகள்
  8. மேற்கிந்திய தீவுகள் – 81 புள்ளிகள்
  9. பங்களாதேஷ் – 60 தரவரிசை புள்ளிகள்
  10. ஆப்கானிஸ்தான் – 49 புள்ளிகள்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<