மகளிர் T20I உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

90

ஐசிசி மகளிர் T20I கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை மகளிர் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை  இன்று (27) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  

மகளிருக்கான T20I உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதிவரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கான குழாம்களை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

தங்கப் பதக்கத்தை தவறவிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட்…

அதன்படி, இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள இலங்கை குழாமின் தலைவியாக சமரி அதபத்து நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உப தலைவியாக ஹர்சிதா மாதவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனைகளான சஷிகலா சிறிவர்தன, நிலக்ஷி டி சில்வா, சுகந்திகா குமாரி, டிலானி மனோதரா அனுஷ்கா சஞ்சீவனி மற்றும் உதேசிகா பிரபோதனி ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ஹன்ஷிமா கருணாரத்ன, அமா காஞ்சனா, கவிஷா டில்ஹாரி, ஆசினி குலசூரிய, ஹாசினி பெரேரா, சத்யா சந்தீபனி மற்றும் உமேஷா திமாஷினி ஆகியோர் அணிக்குள் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட இலங்கை குழாத்துடன், மேலதிக வீராங்கனைகளாக ஐவர் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். இதில், சச்சினி நிசன்சலா, பிரசாதி வீரகொடி, ஓசதி ரணசிங்க, தாரிகா செவ்வந்தி மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு அபார வெற்றிகள்

தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) T20 கிரிக்கெட் தொடரில் இன்று (4) நடைபெற்ற…

ஐசிசி T20I மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம்

சமரி அதபத்து (தலைவி), ஹர்சிதா மாதவி, சஷிகலா சிறிவர்தன, நிலக்ஷி டி சில்வா, சுகந்திகா குமாரி, டிலானி மனோதரா அனுஷ்கா சஞ்சீவினி, உதேசிகா பிரபோதனி, ஹன்ஷிமா கருணாரத்ன, அமா காஞ்சனா, கவிஷா டில்ஹாரி, ஆசினி குலசூரிய , ஹாசினி பெரேரா, சத்யா சந்தீபனி, உமேஷா திமாஷினி

மேலதிக வீராங்னைகள்

சச்சினி நிசன்சலா, பிரசாதி வீரகொடி, ஓசதி ரணசிங்க, தாரிகா செவ்வந்தி, இனோகா ரணவீர

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க