ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் T20 உலகக் கிண்ணத்திற்கு தெரிவு

259

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மூலம் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள், 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரிற்கு தகுதி பெற்றிருக்கின்றன.

WATCH – அவுஸ்திரேலியா தொடரைவிட பாகிஸ்தான் தொடர் சவாலானதா?

அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டின் இறுதியில் 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவிருக்கின்றது. மொத்தம் 16 அணிகள் பங்குபெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் 14 அணிகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தொடரில் ஆடும் எஞ்சிய இரண்டு அணிகளையும் தெரிவு செய்வதற்காக, T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் ஜிம்பாப்வேயில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் வெள்ளிக்கிழமை (15) நிறைவடைந்திருக்கும் நிலையில், தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் T20 உலகக் கிண்ணத்திற்கான தமது வாய்ப்புக்களை உறுதி செய்திருக்கின்றன.

இதில் T20 உலகக் கிண்ணத்தின் தகுதிகாண் தொடருக்காக நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் ஜிம்பாப்வே பபுவா நியூ கினியாவை வீழ்த்தியிருக்க, T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் நடப்புச் சம்பியனாக உள்ள நெதர்லாந்து அணி ஐக்கிய அமெரிக்காவினை தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WATCH – அவுஸ்திரேலியா தொடரைவிட பாகிஸ்தான் தொடர் சவாலானதா?

இதேநேரம் T20 உலகக் தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியானது நாளை (17) நடைபெறவிருக்கின்றது. இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் குழு B இல் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் ஆகிய அணிகளுடன் போட்டியிட, இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணி நமீபியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளுடன் குழு A இல் போட்டியிடவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<