கொரோனாவை கேலி செய்த அலிக்கு போட்டித் தடை

168

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூகதளத்தில் பதிவொன்றை வெளியிட்டதற்காக டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் கால்பந்து அணியின் மத்தியகள வீரர் டேல் அலிக்கு இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது.

கொரோனாவின் கோலுடன் போர்த்துக்கலில் கால்பந்து போட்டிகள் ஆரம்பம்

கடந்த பெப்ரவரியில் அவர் ஸ்னப்சாட்டில் வெளியிட்ட வீடியோவில், கொரோனா வைரஸ் பற்றி நையாண்டி செய்ததோடு அதனை ஆசிய மனிதனுடன் ஒப்பிட்டு கேலி செய்திருந்தார்.   

இதனால் இங்கிலாந்து தேசிய கால்பந்து அணி வீரரான டேல் அலிக்கு ஒரு போட்டித் தடை, 50,000 பௌண்ட் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதோடு கற்கை ஒன்றை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

இதனால் கொவிட்-19 முடக்க நிலைக்கு பின்னர் ஆரம்பமாகும் இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் டொட்டன்ஹாம் அணி வரும் ஜூன் 19 ஆம் திகதி தனது சொந்த மைதானத்தில் ஆடும் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

“எனது நடத்தையால் ஏற்பட்ட எந்த ஒரு பாதிப்புக்காகவும் நான் மன்னிப்புக்கோர விரும்புவதோடு, கால்பந்து சம்மேளனத்தின் முடிவுக்கு பொறுப்பேற்கிறேன் என்று அலி குறிப்பிட்டுள்ளார்.

“வைரஸ் பற்றி கேலி செய்தது தவறான முடிவும். நாம் அதனால் ஒருபோதும் நம்ப முடியாத அளவுக்கு அதிகம் பாதிப்பை சந்தித்தோம்.

எனது நடவடிக்கை இனவாதம் இல்லை என்று உறுதி செய்ததற்காக நான் கால்பந்து சம்மேளனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். ஏனென்றால் எந்த வகையான இனவாதத்தையும் நான் வெறுக்கிறேன். எமது பேச்சு மற்றும் செயல்களை மற்றவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை அவதானித்தே பயன்டுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

கொரோனா வைரஸ் தொற்றினால் பிரிட்டனில் 41,000 பேர் உயிரிழந்ததோடு, இதனால் உலகெங்கும் 416,000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.   

கால்பந்து சம்மேளனம் வெளியிட்ட அறிவிப்பில்: ”உடன் அமுலுக்கு வரும் வகையில் டேல் அலிக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்படுவதோடு 50,000 பௌண்ட் அபராதமும் விதிக்கப்படுகிறது. FA விதி E3 இனை மீறியதை அடுத்து கற்கை ஒன்றை தொடர்வது அவசியமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<