பொக்பா பெனால்டியை தவறவிட, வெற்றி வாய்ப்பை இழந்த யுனைடட்

33
football
© Paul Ellis/AFP/Getty Images

போல் பொக்பா இரண்டாவது பாதியில் பெனால்டி ஒன்றை தவறவிட்ட நிலையில் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக் போட்டியை மன்செஸ்டர் யுனைடட் அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையுடன் நிறைவுசெய்து கொண்டது. 

பார்சிலோனாவில் இருந்து பயேர்ன் செல்கிறார் கோட்டின்ஹோ

பார்சிலோனா மத்தியகள வீரர் பிலிப்பே கோட்டின்ஹோ இந்தப் பருவத்திற்காக …..

செல்சி அணியை 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இம்முறை இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கை அபார வெற்றி ஒன்றுடன் ஆரம்பித்த மன்செஸ்டர் யுனைடட் அணி  வொல்வர்ஹம்டனில் இலங்கை நேரப்படி இன்று (20) அதிகாலை நடைபெற்ற போட்டியில் வோல்வ்ஸ் அணியை எதிர்கொண்டது. 

போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய யுனைடட் அணியால் 27 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற முடிந்தது. மார்கஸ் ரஷ்போர்ட் பந்தை அன்தோனியோ மார்ஷியலிடம் தட்டிவிட அவர் அதனை கோலாக மாற்றினார். மார்ஷியல், யுனைடட் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் பெறும் 50 ஆவது கோலாக இது இருந்தது.   

முதல் பாதி: மன்செஸ்டர் யுனைடட் 1 – 0 வோல்வ்ஸ்

தனது சொந்த மைதானத்தில் கடந்த பருவத்தில் யுனைடட் அணியை லீக் மற்றும் எப்.ஏ. கிண்ணத்தில் தோற்கடித்த வோல்வ்ஸ் இந்தப் போட்டியிலும் செயற்பட ஆரம்பித்தது. இரண்டாவது பாதியில் பதில் வீரராக வந்த அடம் டரோரேவினால் அந்த அணி உற்சாகம் அடைந்தது.  

ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் கோணர் பக்கமாக இருந்து பரிமாற்றப்பட்ட பந்து பெனால்டி பெட்டிக்கு வெளியே தனியே இருந்த ருபேன் நெவஸிற்கு கிடைத்தபோது அவர் கோல் காப்பாளருக்கு பிடிக்க முடியாமல் உயர்வாக வோல்வ்ஸ் அணிக்காக பதில் கோல் திருப்பினார்.   

இந்நிலையில் 67ஆவது நிமிடத்தி பெனால்டி பெட்டிக்குள் வொல்வ்ஸ் அணித்தலைவர் கோனோர் கோடியின் காலில் தடுக்கிய பொக்பாவுக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும் அவர் உதைத்த அந்த பெனால்டியை வோல்வ்ஸ் கோல்காப்பாளர் ருயி பட்ரிசியோ அபாரமாக தடுத்தார். 

கடந்த ப்ரீமியர் லீக் தொடக்கம் பொக்பா தவறவிட்ட நான்காவது பெனால்டி இதுவாகும். இந்நிலையில் பெனால்டி உதைக்கு மாற்றொரு வீரரை யுனைடட் அணி பயன்படுத்தாதது குறித்த கேள்வி அதிகரித்துள்ளது. 

இந்த முடிவுடன் யுனைடட் அணி இரண்டு போட்டிகளில் நான்கு புள்ளிகளை பெற்றிருப்பதோடு தனது இரண்டு போட்டிகளையும் சமன் செய்து முதல் வெற்றியை எதிர்பார்த்திருக்கும் வோல்வ்ஸ் இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.  

முழு நேரம்: மன்செஸ்டர் யுனைடட் 1 – 1 வோல்வஸ்

கோல் பெற்றவர்கள்

மான்செஸ்டர் யுனைடட் – அன்தோனியோ மார்ஷியல் 27′

வோல்வஸ் – ருபேன் நெவஸ் 55′  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<