கொரோனாவின் கோலுடன் போர்த்துக்கலில் கால்பந்து போட்டிகள் ஆரம்பம்

135
Jesus Corona

கொரோனா வைரஸ் முடக்க நிலைக்கு பின்னர் ஐரோப்பாவின் இரண்டாவது கால்பந்து லீக் தொடராக போர்த்துக்கல் ப்ரீமியர் லீக் போட்டிகள் புதன்கிழமை (03) ஆரம்பமாயின. இதன் முதல் போட்டியில் கொரோனா என்ற பெயர் கொண்ட வீரர் கோல் பெற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு அது செல்சி கழகத்தின் ஆர்வத்தையும் தூண்டியது.

இதில் போர்த்துக்கல் ப்ரீமிரா லீகாவில் முதலிடத்தில் இருக்கும் போர்டோ கழகம் பமலிகோவிடம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.   

>> பார்சிலோனாவில் கொரோனா தொற்றிய வீரர்கள் பற்றி அம்பலம்

வெறிச்சோடிய அரங்கில் போட்டி நடைபெற்றபோதும் போர்டோ ரசிகர்கள் அரங்கிற்கு வெளியில் கூடி இருந்தனர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னரே போர்த்துக்கல் ப்ரீமியர் லீக் போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.  

போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் பமலிகோ கழகம் முதல் கோலை பெற்ற நிலையில் போர்டோ சார்பில் 74 ஆவது நிமிடத்தில் ஜேசுஸ் மனுவேல் கொரோனா பதில் கோல் திருப்பினார். எனினும் மூன்று நிமிடங்கள் கழித்து பமலிகோ வெற்றி கோலை போட்டது

கொரோனா என்பது தற்போது உலக அரங்கில் வரவேற்கத்தக்க பெயர் இல்லை என்றபோது, அதனை முதற் பெயராகக் கொண்ட மெக்சிகோ நாட்டு வீரரான ஜேசுஸ் கொரோனா வரவேற்கப்படும் வீரராக மாறி வருகிறார்

27 வயதான கொரோனாவை செல்சி கழகத்துடன் அண்மைய வாரங்களில் இணைத்து பேசப்படுகிறது. செல்சி கழக முகாமையாளர் பிரான்க் லம்பர்ட் அவரது முகவருடன் அண்மைய வாரத்தில் பேசி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது

கொரோனாவின் ஆரம்ப கோல் கால்பந்து உலகுக்கு ஒரு அதிர்ஷ்ட சமிக்ஞையாகக் கூட இருக்கலாம் என்று சில ரிசகர்கள் நம்புகின்றனர். முடக்க நிலைக்கு பின்னர் போர்டோவின் முதல் கோலை ஜேசுஸ் கோரோனா புகுத்தியதை நம்ப முடியவில்லை.” என்று சமூக ஊடகத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். ஜேசுஸ் கொரோனா, உண்மையில் அதனை உங்களால் எழுத முடியவில்லை என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

ஜேசுஸ் கொரோனா போர்டோ மற்றும் மெக்சிகோ தேசிய அணிக்காக மத்திய களத்தில் ஆடி வருகிறார். 2010 ஆம் ஆண்டு மொடெரி கால்பந்து கழகத்திற்காக தமது தொழில்முறை கால்பந்து போட்டியை ஆரம்பித்த அவர் அந்தக் கழகத்திற்காக மூன்று ஆண்டுகள் ஆடிய நிலையில் நெதர்லாந்தின் ட்வென்டே அணிக்காக ஆடுவதற்கு வெளிநாடு சென்றார். 2015 ஆம் ஆண்டே அவர் போர்டோ கழகத்துடன் இணைந்தார்

போர்டோ கழகத்திற்காக இதுவரை 143 போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 20 கோல்களை பெற்றுள்ளார். அதேபோன்று மெக்சிகோ தேசிய அணிக்காக 42 போட்டிகளில் 7 கோல்களை புகுத்தியுள்ளார்.

>> ப்ரீமியர் லீக் கழகங்களில் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

கோரோனா தொடர்பில் செல்சி கழகம் தம்மை நாடியதாக அவரது முகவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு தருணத்தில் அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவரது தேர்வு எந்தளவில் உள்ளது என்பது பற்றி என்னால் கூற முடியாது. அது பற்றி வதந்திகளே உள்ளன

இது பற்றிய முன்னேற்றங்கள் மற்றும் லீக் போட்டிகள் ஆரம்பிப்பது பற்றி நாம் காத்திருக்க வேண்டி உள்ளது. பரிமாற்றங்கள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளன. அவரது ஒப்பந்தம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளனஎன்று ஜெசுஸ் கொரோனாவின் முகவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐரோப்பாவின் பிரதான லீக் போட்டியாக கொரோனா முடக்கத்திற்கு பின்னர் கடந்த மே நடுப்பகுதியில் புன்டஸ்லிகா தொடர் ஆரம்பமானது. இந்நிலையில் ஸ்பெயின் லா லிகா, இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் இத்தாலி சீரி A தொடர்கள் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ளன

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<