விராஜ், அரோனின் அபார பந்துவீச்சினால் மொறட்டு கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

97

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு – 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் இன்று (19) நிறைவுக்கு வந்தன. இதில் மொறட்டு மகா வித்தியாலயம் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்திருந்ததுடன், வென்னப்புவ புனித ஜோசப் வாஸ்  எதிர் மாத்தறை புனித தோமியர் கல்லூரி மற்றும்  கொழும்பு தர்ஸ்டன் எதிர் திருத்துவக் கல்லூரி இடையிலான போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

மொறட்டு மகா வித்தியாலயம், மொறட்டுவை எதிர் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி  

கட்டுனேரிய புனித செபெஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மரபு ரீதியான இந்தப் போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பிரகாசித்த மொறட்டு மகா வித்தியாலயம் இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.  

பந்துவீச்சில் மிரட்டிய அந்தோனியார், றிச்மண்ட கல்லூரி அணிகள்

சிங்கர் நிறுவனத்தின் …

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மொறட்டு மகா வித்தியாலயத்துக்கு இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய நிஷான் மதுஷ்க பெற்ற 121 ஓட்டங்கள் மூலம் அவ்வணி முதல் இன்னிங்ஸுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து விளையாடிய மாரிஸ்டெல்லா கல்லூரி தமது முதல் இன்னிங்ஸுக்காக 25 ஓட்டங்களுக்குள் சுருண்டது.  

பந்துவீச்சில் விராஜ் கவிஷ்க 2 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை அந்தோனியார் கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து பலோ ஒன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியினர், எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

அபாரமாக பந்துவீசிய மொறட்டு மகா வித்தியாலய அணியின் அரோன் ஹன்சமால் 48 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

மொறட்டு மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 225/10 (52.1) – நிஷான் மதுக 121, நதித் நிஷேந்திர 39*, சாமர புஷ்பகுமார 22, ரவிந்து பெர்னாண்டோ 4/64, பிரமோத் பெர்னாண்டோ 2/22, பசிந்து உசெட்டி 2/67

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 25/10 (11.1) – நதித் நிஷேந்திர 3/21, விராஜ் கவிஷ்க 6/2

மாரிஸ்டெல்லா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 159/10 (57.3) – சத்துர அநுராத 37, கெவின் பெரேரா 37, அஷான் பெர்னாண்டோ 33, அரோன் ஹன்சமால் 7/48, ரஷான் கவிஷ்க 2/26

முடிவு மொறட்டு மகா வித்தியாலயம் இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி


புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த புனித ஜோசப் வாஸ் கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 106 ஓட்டங்களையே முதல் இன்னிங்ஸுக்காகப் பெற்றுக்கொண்டது.  

இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி

சுற்றுலா பங்களாதேஷ் 19…

பந்துவீச்சில் தோமியர் கல்லூரியின் ஹிரூஷ ஜீவஜித் 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் புனித தோமியர் அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 71 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய ஜோசப் வாஸ் கல்லூரி அணி சமோத் கனிஷ்கவின் அரைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

பந்துவீச்சில் கிஷாந்திக ஜயவீர 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 106/10 (43.3) – அவிந்து ஷெஹார 46, சமோத் கவிஷ்க 27, ஹிரூஷ ஜீவஜித் 5/23

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 177/10 (70) – கிஷாந்திக ஜயவீர 37, ஹரிந்து ஜயசேகர 31, சாமிக்க ரணசிங்க 30, அவிந்து ஷெஹார 4/48, ஷெஹான் அநுருத்த 2/08

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 173/10 (62.1) – சமோத் கனிஷ்க 57, அவிந்து ஷெஹார 31, தரூஷ பெர்னாண்டோ 24, டேஷான் பெர்னாண்டோ 21*, கிஷாந்திக ஜயவீர 5/65, கவிந்து ரித்மால் 2/42

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.  


தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு எதிர் திருத்துவக் கல்லூரி, கண்டி

திருத்துவக் கல்லூரியுடனான போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அபாரம் காட்டிய அயேஷ் ஹர்ஷன, தர்ஸ்டன் கல்லூரிக்கு அதிக கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரி அணி, யொஹான் லியனகேவின் அரைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது

அடுத்த ஆட்டத்திலாவது இலங்கைக்கு முதல் வெற்றியை சுவைக்கலாமா?

இலங்கை அணிக்கு எதிரான….

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிய திருத்துவக் கல்லூரி அணி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி, பலோ ஒன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட திருத்துவக் கல்லூரி அணியினர் 165 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

முதல் இன்னிங்ஸில் திருத்துவக் கல்லூரி அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அயேஷ் ஹர்ஷன, 2ஆவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அணிக்கு அதிக கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற தர்ஸ்டன் கல்லூரி அதற்கான புள்ளிகளை பெற்றுக் கெண்டது.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 319/10 (85) – யொஹான் லியனகே 85, அவிஷ்க கௌஷல்ய 42, ரனேஷ் சில்வா 40, நிமேஷ் பெரேரா 33, அயேஷ் ஹர்ஷன 31*, ரஷ்மிக ஹிரிபிட்டிய 28, கவிஷ்க சேனாதீர 4/91 அவிஷ்க சேனாதீர 2/31, கவிந்து டயஸ் 2/58

திருத்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 150/10 (56.1) – அஷான் லொகுகீட்டிய 41*, அப்கோ அமரசிங்க 37, சந்தரு டயஸ் 3/28, அயேஷ் ஹர்ஷன 3/42, யொஹான் லியனகே 2/12

திருத்துவக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 165/8 (56) – அபிஷேக் ஆனந்த குமார் 27, உமைர் பைசால் 21, சானுக்க குமாரசிங்க 21, தினிந்த சிறிவர்தன 36*, அயேஷ் ஹர்ஷன 5/54, யொஹான் லியனகே 2/30

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க