ஸ்மித் அழுவதை கண்டு ஆஸி பயிற்றுவிப்பாளர் லீமனும் கண்ணீர் மல்க இராஜினாமா

971
Image Courtesy - AFP

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக போட்டித் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டதைக் கண்டு அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமனும் தனது பதவியை கண்ணீர் மல்க இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஸ்மித், வோர்னர் மீதான தடை அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் – சங்கக்கார

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு..

”ஸ்டீவன் (ஸ்மித்) மற்றும் கெமரூன் பான்க்ரொப்டின் வேதனையை பார்த்தபின் நான் இந்த முடிவை எடுப்பதே நியாயமாக இருக்கும்” என்று தென்னாபிரிக்காவில் வைத்து லீமன் குறிப்பிட்டார். முன்னதாக அவுஸ்திரேலியா திரும்பிய ஸ்மித் மற்றும் பான்க்ரொப்ட் தமது செயலுக்காக உணர்ச்சிபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

இதன்படி 48 வயதான டெரன் லீமன் ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெறும் தென்னாபிரிக்க அணியுடனான நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியை அடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை லீமனை விடுவித்திருந்ததோடு, அவர் பதவி விலக மாட்டார் என்று கடந்த புதன்கிழமை (28) அறிவித்தது. அவர் 2019 ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரை அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

”அவுஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அணியில் மாற்றங்களை கொண்டுவர முழுமையான பரிசீலனைக்கு இது (இராஜினாமா) உதவும். அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இதுதான் சரியானது.

>> கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டார் ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளித்தது ஒரு அழகான அனுபவம். இதில் இருந்து அணி கட்டியெழுப்பப்படும் என்று நான் நம்புவதோடு அவுஸ்திரேலிய மக்கள் இந்த இளைஞர்களுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.  

அவர்கள் கடுமையான தவறொன்றை செய்தார்கள், ஆனால் மோசமானவர்கள் அல்ல” என்று லீமன் வியாழக்கிழமை (29) குறிப்பிட்டார்.  

சர்ச்சை இடம்பெற்ற கடந்த சனிக்கிழமையில் இருந்து தனக்கு உறக்கம் இல்லை என்று லீமன் கூறியபோதும், இந்த சதிவேலையில் தமக்கு தொடர்பு இல்லை என்ற நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தார்.

2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட லீமன், தனது முதலாவது ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த போதும் சில மாதங்கள் கழித்து 5-0 என அந்த தொடரை வெல்ல அணியை வழிநடத்தினார்.  அவரது பயிற்சியின் கீழ் 2015 உலகக் கிண்ணத்தையும் அவுஸ்திரேலிய அணி வென்றது.

கிரிக்கெட் அரங்கில் பந்தை சேதப்படுத்திய கிரிக்கெட் பிரபலங்கள்

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் விளையாட்டு என்பது கௌரவமிக்க..

இந்த சர்ச்சை ஏற்கனவே அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டில் நடக்கும் டெஸ்ட் தொடர்களுக்கு அனுசரணை வழங்கும் மகெல்லன் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை வியாழக்கிழமை ரத்துச் செய்தது. அதேபோன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நீண்டகால ஒளிபரப்பு பங்குதாரராக செயற்பட்டு வரும் ‘செனல் நைன்’ (Channel 9) நிறுவனம் மாற்று வழியை தேர்வு செய்து அவுஸ்திரேலிய டென்னிஸ் சங்கத்துடன் ஐந்து ஆண்டு புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளது.  

இந்த விவகாரத்தால் முழு நாடும் கடுமையாக ஏமாற்றம் அடைந்திருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் குறிப்பிட்டிருந்தார்.