கிரிக்கெட் அரங்கில் பந்தை சேதப்படுத்திய கிரிக்கெட் பிரபலங்கள்

1359

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் விளையாட்டு என்பது கௌரவமிக்க ஆசிரியராக கருதப்படுகின்றது. ஒழுக்கம், குழுப்பணி, தியாகம், சகிப்புத்தன்மை, உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் குணநலன்களை உற்சாகப்படுத்தும் வாய்ப்பை அது அனைவருக்கும் வழங்குகிறது. இந்த விளையாட்டு, விதிகள் மற்றும் சட்டங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. எனவே, அதில் தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக தண்டனைகளும் அவ்வப்போது வழங்கப்படுகின்றமை வழக்கமான விடயம்தான்.

எவ்வாறிருப்பினும், வெற்றி பெறவேண்டிய மனநிலையில் சிலர் சில நேரங்களில் வீரர்கள் என்பதை மறந்துவிடுகின்றனர். அவர்களின் எதிர்பாராத நடத்தை அல்லது செயல்கள் விளையாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்கு குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்படும்.  

கிரிக்கெட் நாடகமாக மாறியுள்ள ஆஸி வீரர்களின் சூழ்ச்சி

கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பதால் அதில் சில சம்பிரதாயங்களை …

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் பந்தை சேதப்படுத்தல் என்பது மிகப் பெரிய குற்றமாகும். பந்தை சேதப்படுத்துவதால் என்னதான் நிகழும்? அதனால் குறிப்பிட்ட அந்த அணி எந்த வகையில் ஆதாயம் பெறும்? என்பதற்கு விடை கண்டுபிடித்தால், அது வெற்றிக்காக குறுக்கு வழி பாதையில் பயணிப்பதையே காட்டுகிறது. வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எப்படியென்றால் ஏமாற்றி, மோசடி செய்யும் பாதையின் ஊடாக பயணித்து, விளையாட்டு உணர்வுகளை காற்றில் பறக்க விட்டு வெற்றி மட்டுமே எங்களது தாரக மந்திரம், அதை எவ்வழியேனும் அடைவோம், அதற்காக நீதியில் இல்லாத குறுக்கு வழிகளைக்கூட பிரயோகிப்போம் என்பதுதான்.

பந்து எதற்காக சேதப்படுத்தப்படுகிறது என்றால்ரிவர்ஸ் ஸ்விங்முறையில் விரைவாக விக்கெட்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே. ரிவர்ஸ் ஸ்விங் கிரிக்கெட்டில் அரிய கலையாகவே பிரயோகிக்கப்படுகிறது.

இந்த ரிவர்ஸ் ஸ்விங் கலையை அறிமுகப்படுத்தியது பாகிஸ்தான் அணிதான். 1970-களில் அந்த அணியின் சர்ப்ராஸ் நவாஸூம், சிக்கந்தர் பகத்தும் ரிவர்ஸ் ஸ்விங்கில் எதிரணியை திக்குமுக்காட செய்தனர். அவர்கள் இந்த கலையை இம்ரான் கான், வசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் என அடுத்த தலைமுறையினருக்கும் வியாபிக்கச் செய்தனர். வசிம் அக்ரமும், வக்கார் யூஸும்சுல்தான்ஸ் ஆப் தி ஸ்விங்என புகழப்பட்டனர். எனினும் இவர்கள் மீது பந்தை சேதப்படுத்தியதாக புகார்கள் எழாமலும் இல்லை. பந்தை சேதப்படுத்தியதாக தண்டனை பெற்ற முதல் பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ்தான்.

இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த 3ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தி சிக்கிய விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொழும்பு கால்பந்து கழகத்தில் இணைந்த அடுத்த பிரபலம் ரிப்னாஸ்

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மூன்று முறை சம்பியன் பட்டம் வென்ற …

அவுஸ்திரேலிய புதுமுக வீரர் கெமரூன் பேன்கிராப்ட், அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆலோசனைக்கமைய பந்தை சேதப்படுத்தினார். வீடியோவில் இது பதிவாகி இருந்ததால் அவர்கள் வசமாக சிக்கி கொண்டனர். இதையடுத்து பேட்டி அளித்த ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார். இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.  

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மாத்திரமல்லாது அந்த நாட்டுக்கே இந்த சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. இதனையடுத்து அந்நாட்டு விளையாட்டு ஆணையகத்தின் உத்தரவின் படி ஸ்மித், வோர்னர் ஆகியோரின் தலைவர் மற்றும் உதவி தலைவர் பதவிகளை பறித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மறுபுறத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டதுடன், 100 சதவீத போட்டிச் சம்பள அபராதமும் விதிக்கப்பட்டது. அதேநேரம், கெமரூன் பேன்கிராப்ட்டுக்கு 75 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது.  

Photo by Peter Heeger/Gallo Images/Getty Images

பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் தென்னாபிரிக்கா சென்றார். ஸ்மித், வோர்னர், பேன்கிராப்ட் ஆகிய 3 வீரர்களையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டார்.

அதேநேரம், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு 12 மாதங்களும், பந்தை சேதப்படுத்திய கெமரூன் பேன்கிராப்ட்டுக்கு 9 மாதங்களும் போட்டித் தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

அவுஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டான கிரிக்கெட்டுக்கு நடந்த இந்த அசிங்கமான செயலை அந்த நாட்டு ஊடங்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆதங்கத்தை கொட்டி வருகின்றன. அதிலும் பந்தைச் சேதப்படுத்தி கிரிக்கெட்டையும், ரசிகர்களையும் ஏமாற்றி அவமானத்துக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் மீதான கோபம் அவுஸ்திரேலிய மக்களின் மனதில் இன்னும் வடுவாகவே உள்ளது. இது விரைவில் மறக்கப்படக்கூடும் என்று கூறுவதற்கு சாத்தியம் இல்லை

இவ்வாறான ஒரு நிலையில், கிரிக்கெட் அரங்கில உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் இந்த விவகாரத்தில் சிக்கிய ஒருசில சம்பவங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

கிறிஸ் பிரிங்கில் – (நியூசிலாந்து)

ESPN

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கிறிஸ் பிரிங்கில் 1990ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியொன்றில் 152 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான கராச்சி மைதானத்தில் 11 விக்கட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தமை கிரிக்கெட் விமர்சர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த காலப்பகுதியில் கிரிக்கெட்டில் தொழிநுட்பங்கள் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை.

ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 21

உள்ளூர் போட்டிகளில் அசத்திய தேசிய அணி வீரர்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆஸி …

இதனை பயன்படுத்திக்கொண்ட கிறிஸ் பிரிங்கில் குறித்த சம்பவத்தின்போது, போத்தலின் மூடியினால் பந்தை சேதப்படுத்தினார். போட்டியின் பின்னர் இதனை ஒப்புக்கொண்ட கிறிஸ் பிரிங்கில், பாகிஸ்தான் வீரர்களும் இவ்வாறு பந்தை சேதப்படுத்தியிருப்பார்கள் என்று நம்பியதாகவும், அதனால்தான் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

இறுதியில் குறித்த தவரை செய்த கிறிஸ் பிரிங்கில்லுக்கு எந்தவித போட்டித் தடையோ, தண்டப்பணமோ அறவிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

மைக்கெல் அத்தெர்டன் – (இங்கிலாந்து)

ESPN

இங்கிலாந்து அணியின் முதலாவது இளம் தலைவரான மைக்கெல் அத்தெர்டன், 1994ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆடுகளத்தில் உள்ள துகள்களை தனது காற்சட்டை பையில் இட்டுக்கொண்டு, பந்தை சேதப்படுத்தியிருந்தார்.

இவரது செயல் வீடியோவில் தெளிவாக கண்டுபிடிக்கப்பட்ட போதும், ஐசிசியின் போட்டி மத்தியஸ்தரான பீட்டர் பர்ஜ் அவருக்கு அபராதம் விதிக்கவில்லை. எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் சபை 3,700 அமெரிக்க டொலர்களை அவருக்கு அபராதமாக விதித்திருந்தது.  

வக்கார் யூனுஸ் – (பாகிஸ்தான்)

ESPN

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனுஸ், இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில், தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் பந்தை சேதப்படுத்தியமை கெமராவில் தெளிவாகப் பதிவாகியது.

இந்நிலையில் குறித்த போட்டியின் மத்தியஸ்தராக கடமையாற்றிய நியூசிலாந்தின் ஜோன் ரெயிட், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வக்கார் யூனுஸிற்கு போட்டித் தடை விதித்ததுடன், போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியிலும் வக்கார், இவ்வாறு பந்தை சேதப்படுத்தியிருந்ததாக கண்டறியப்பட்டாலும், எந்தவொரு அபராதமும் அவருக்கு விதிக்கப்படவில்லை.

வோர்னரின் தடையால் குசல் பெரேரா ஐ.பி.எல் இல்

இந்திய கிரிக்கெட் சபையினால் 11ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள …

அது மாத்திரமின்றி குறித்த போட்டியை தாமதப்படுத்திய குற்றச்சாட்டில் பாகிஸ்தான் அணியின் தலைவர் மொயின் கான் மற்றும் சகலதுறை வீரர் அஷார் மஹ்மூட் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கிரிக்கெட் வரலாற்றில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு போட்டித் தடைத் மற்றும் அபராதம் பெற்ற முதல் வீரர் வக்கார் யூனுஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் – (இந்தியா)

ESPN

2001ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பந்தின் தன்மையை மாற்றியதாக குற்றச்சாட்டப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பில் விசாரணை செய்த போட்டி மத்தியஸ்தர் மைக்கல் டென்னிஸ் சச்சினுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்ததுடன், அணித்தலைவராக செயற்பட்ட கங்குலிக்கு ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை விதித்தார்.

எனினும் குறித்த குற்றச்சாட்டு பொய்யானது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பின்னர் இருவருக்குமான தடைகள் நீக்கப்பட்டன.

சொயிப் அக்தார் – (பாகிஸ்தான்)

ESPN

உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சொயிப் அக்தார் 2003ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவாகரத்தில் சிக்கினார்.

பொதுநலவாய விளையாட்டில் தேசிய கொடியை ஏந்தும் பளுதூக்கல் வீரர்!

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்… அமெரிக்காவில் வசித்து வரும் …

குறித்த போட்டியின் போது அக்தார், பந்தை சேதப்படுத்தியுள்ளார் என்பது தொலைக்காட்சியில் தெளிவாகத் தெரிந்தது. இந்த காட்சிகளை அவதானித்த போட்டியின் 3ஆவது நடுவரான காமினி சில்வா போட்டி மத்தியஸ்தரிடம் இதுதொடர்பில் முறையிட்டார்.

இதனையடுத்து .சி.சியின் வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறைகளில் 42.3 சரத்தினை மீறிய குற்றச்சாட்டில் அக்தாருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. முன்னதாக 2002ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடனான போட்டித் தொடரில் பார்வையாளர்களை நோக்கி போத்தலினால் எறிந்தமைக்கு அக்தருக்கு எதிராக குறைமதிப்பு புள்ளியொன்று வழங்கப்பட்டிருந்தது.

ராகுல் டிராவிட் – (இந்தியா)

இந்திய அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட சுவர் என வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட். 2004ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியொன்றில் பந்தை சேதப்படுத்தியமை கண்டறியப்பட்டது.

இனிப்புவகையொன்றை பந்தில் தடவி டிராவிட் பந்தை சேதப்படுத்தினார். இதனால் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட க்ளைவ் லியோட் போட்டிக் கட்டணத்தில் இருந்து டிராவிட்டுக்கு 50 சதவீத்தை அபராதமாக விதிக்க நடவடிக்கை எடுத்தார்.

பாகிஸ்தான் அணி (2006)

ESPN

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 2006ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணித்தலைவர் இன்சமாம் உல் ஹக் பந்தை சேதப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து பந்தை பரிசோதனை செய்த கள நடுவர்கள் பந்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, இங்கிலாந்து அணிக்கு 5 மேலதிக ஓட்டங்களை உதிரிகளாக வழங்கினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தேநீர் இடைவேளை வழங்கப்பட்ட போது பாகிஸ்தான் வீரர்கள் உடைமாற்றும் அறைக்கு சென்று மைதானத்துக்கு மீண்டும் திரும்பவில்லை. 15 நிமிடங்கள் காத்திருந்த நடுவர்கள் போட்டியின் வெற்றியை இங்கிலாந்து அணிக்கு வழங்கினர்.

வாழ்நாள் தடைக்கு முகம்கொடுக்கும் நெருக்கடியில் ஸ்மித், வோர்னர்

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ICC) ஒரு போட்டித் …

எவ்வாறாயினும் 25 நிமிடங்களுக்குப் பிறகு மைதானத்துக்கு பாகிஸ்தான் வீரர்கள் திரும்பிய போதும், வெற்றி இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக பாகிஸ்தான் அணியால் மேன்முறையீடு செய்யப்பட்ட போதிலும், போட்டியின் மத்தியஸ்தராக செயற்பட்ட ரன்ஞன் மடுகல்லவினால் அந்த மணு தள்ளுபடி செய்துவைக்கப்பட்டது.

இதன்படி, 142 வருடகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அணியொன்றுக்கு வழங்கப்பட்ட முதல் வெற்றியாகவும் இது வரலாற்றில் இடம்பெற்றது.

ஸ்டுவர்ட் ப்ரோட் – (இங்கிலாந்து)

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட், 2010ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினார். இவர் பந்தை தனது காலணியால் தேய்த்து சேதப்படுத்தியமை கெமராவில் தெளிவாகப் பதிவானது. எனினும், அதிக வெப்பம் காரணமாக தன்னால் பந்தை கையால் எடுக்க முடியாது போனதாக அவர் போட்டியின் பிறகு இடம்பெற்ற விசாரணைகளில் தெரிவித்திருந்தார்.

தென்னாபிரிக்கா தரப்பிலிருந்து இதுதொடர்பில் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்புக்கு இங்கிலாந்தின் பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

சஹீட் அப்ரிடி – (பாகிஸ்தான்)

ESPN

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான சஹீட் அப்ரிடி, பேர்த் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியின் போது, பந்தை கடித்து சேதப்படுத்தியமை கெமராவில் பதிவானது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றிபெற 30 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்போது மொஹமட் ஆசிப் மற்றும் ரானா ரவீதுல் ஹசன் ஆகியோரின் ஓவர்களில் 2 தடவைகள் அப்ரிடி இவ்வாறு பந்தை கடித்திருந்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் திருவிழா புதுப்பொழிவுடன்

இலங்கை அணிக்கு திறமையான வீரர்களை உள்வாங்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் …

இதனையடுத்து மூன்றாவது நடுவர் கள நடுவருக்கு குறித்த விடயத்தை அறிவித்து, பந்து மாற்றப்பட்டது.

எனினும் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய ரஞ்சன் மடுகல்ல, அப்ரிடிக்கு இரண்டு T-20 போட்டிகளில் விளையாடத் தடை விதித்தார்.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டை சஹீட் அப்ரிடி ஒப்புக்கொண்டிருந்ததுடன், மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். எனினும், அப்ரிடியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த சம்பவம் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாப் டு ப்ளெசிஸ் – (தென்னாபிரிக்கா)

ESPN

தென்னாபிரிக்க அணியின் தற்போதைய தலைவராக செயற்பட்டு வரும் டு ப்ளெசிஸ் 2016ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஹோர்பாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தினார்.

இனிப்பு வகையொன்றை தடவி டு ப்ளெசிஸ் பந்தை சேதப்படுத்தியமை கெமராவின் மூலம் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து டு ப்ளெசிஸிக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், .சி.சியின் வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 3 குறைமதிப்புப் புள்ளிகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதேநேரம், 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக டுபாயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தனது காற்சட்டையில் பந்தை தேய்த்தாக டு ப்ளெசிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து பந்தை பரிசோதனை செய்த கள நடுவர்கள் பந்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, பாகிஸ்தான் அணிக்கு 5 மேலதிக ஓட்டங்களை உதிரிகளாக வழங்கினர்.

அத்துடன், டு பிளெசிக்கு போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அவருக்கு அபாரதமாக விதிக்கப்பட்டது.