BPL தொடரில் சிறந்த ஆரம்பத்தை பெற்ற வியாஸ்காந்த்!

Bangladesh Premier League 2023

1169

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) மூலம் சர்வதேச அரங்கின் கவனத்தை ஈர்த்த யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடியுள்ளார்.

BPL தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட விஜயகாந்த் வியாஸ்காந்த், இன்றைய தினம் (09) நடைபெற்ற குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சர்வதேச லீக் போட்டிகளுக்கான அறிமுகத்தை பெற்றுக்கொண்டார்.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை??

ஜப்னா கிங்ஸ் அணியில் விளையாடிய அபிப் ஹொஷைன் தலைமையின் கீழ் விளையாடிய வியாஸ்காந்த் 3 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றி தன்னுடைய அறிமுகப்போட்டியை நிறைவுசெய்துக்கொண்டார். தன்னுடைய முதலாவது விக்கெட்டுக்காக பங்களாதேஷ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பாலின் விக்கெட்டினை இவர் கைப்பற்றியிருந்தார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று சாதகமான டாக்கா மைதான ஆடுகளத்தில், சராசரியான பந்துவீச்சு பிரதியியுடன் விஜயாந்த் வியாஸ்காந்த் தன்னுடைய BPL பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குல்னா டைகர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்துக்கொண்டது.

அதுமாத்திரமின்றி இரண்டாவது போட்டியில் விளையாடிய செட்டகிராம் அணி தொடரில் தங்களுடைய முதல் வெற்றியையும் பதிவுசெய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<