இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான SLC தலைவர் பதினொருவர் குழாமில் சிராஸ்

129

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடவுள்ள உத்தியோகபூர்வ 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டிக்கான 15 பேர்கொண்ட கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான …..

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமான 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நாளை (12) தொடக்கம் எதிர்வரும் 15ம் திகதிவரை கொழும்பு பி.சரா. ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டிக்கான கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாத்தின் தலைவராக, டெஸ்ட் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள லஹிரு திரிமான்னே நியமிக்கப்பட்டுள்ளதுடன், பல இளம் வீரர்களும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில், கடந்த ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த மொஹமட் சிராஸ், அசித பெர்னாண்டோ ஆகியோருடன், நிசால தாரகவும் வேகப் பந்துவீச்சாளராக அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதேநேரம், இலங்கை இளையோர் அணியில் விளையாடிய சுழல் பந்துவீச்சாளர் கவிந்து நதீஷன் இந்த போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன், ரமேஷ் மெண்டிஸ், செஹான் ஜயசூரிய ஆகியோர் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர்களாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் பெதும் நிசங்க, சதீர சமரவிக்ரம, அசேன் பண்டார, ரொஷேன் சில்வா, மினோத் பானுக மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை, குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த பானுக ராஜபக்ஷ உபாதை காரணமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும், 19ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் பதினொருவர் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சிப்போட்டி சமநிலையில் நிறைவு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்கும் இடையிலான 3 நாட்கள் கொண்ட முதலாவது பயிற்சிப் போட்டியானது ….

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம்

லஹிரு திரிமான்னே (தலைவர்), பெதும் நிசங்க, சதீர சமரவிக்ரம, பானுக ராஜபக்ஷ (உபாதை), அஞ்செலோ பெரேரா, செஹான் ஜயசூரிய, ரொஷேன் சில்வா, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ, மொஹமட் சிராஸ், நிசால தாரக, அசேன் பண்டார, கவிந்து நதீஷன்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<