சங்கீத் கூரேயின் சதத்தோடு வலுப்பெற்றுள்ள கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

104

இலங்கை கிரிக்கெட் சபை பிரிவு A கிரிக்கெட் கழகங்க இடையில் ஒழுங்கு செய்து நடாத்தி வரும் மேஜர் ப்ரிமியர் லீக் முதல்தரக் கிரிக்கெட் தொடரில் இன்று (14) முதற் சுற்றுக்கான ஐந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

இன்று ஆரம்பமான போட்டிகளில் சங்கீத் கூரே, சரித குமாரசிங்க மற்றும் ஹஷான் துமிந்த ஆகிய வீரர்கள் சதங்களுடன் பிரகாசிக்க தேசிய அணி வீரர் அஷான் பிரியஞ்சன், மினோத் பானுக்க, பத்தும் நிஷங்க, லஹிரு உதார மற்றும் சஞ்சிக்க ரித்ம ஆகியோர் அரைச்சதங்களுடன் திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20…

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC

NCC அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் எதிரணியினால் துடுப்பாடப் பணிக்கப்பட்டு முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய மைதானச் சொந்தக்காரர்களான NCC அணி ஆட்டத்தின் முதல் நாள் நிறைவில் 85.4 ஓவர்களுக்கு 321 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்படுகின்றது. NCC அணியினை பத்தும் நிஸ்ஸ்ங்க (77) மற்றும் லஹிரு உதார (66) ஆகியோர் அரைச்சதங்களோடு அணியை வலுப்படுத்தியிருந்தனர்.

Photos: NCC v Chilaw MCC | Major League Tier “A” Tournament 2018/2019

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 321/9 (85.4)- பத்தும் நிஸ்ஸங்க 77, லஹிரு உதார 66, சத்துரங்க டி சில்வா 48, சாகர் பரேஷ் 4/76


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாடிய கொழும்பு கிரிக்கெட் கழக அணி மினோத் பானுக்க பெற்றுக் கொண்ட 88 ஓட்டங்களுடனும், லஹிரு மதுஷங்க ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட அரைச்சதத்துடனும் முதல் நாள் நிறைவில் தமது முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 317 ஓட்டங்களுடன் நல்ல நிலையில் உள்ளது. கொழும்பு கிரிக்கெட் கழக அணிக்காக தேசிய அணி வீரர் அஷான் பிரியஞ்சனும் அரைச்சதம் (53) ஒன்றினை பெற்றிருந்தார்.

Photo Album :  Tamil Union C & AC Vs. Army SC | Major League Tier A Tournament 2018/2019

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 317/6 (82) – மினோத் பானுக்க 88, லஹிரு மதுஷங்க 55*, அஷான் பிரியன்ஞசன் 53, ரொன் சந்திரகுப்தா 45, ரொஷான் பெர்னாந்து 3/46


சோனகர் விளையாட்டு கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

சோனகர் விளையாட்டு கழகம் மற்றும் றாகம அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கொழும்பு சோனகர் மைதானத்தில் தொடங்கியிருந்தது. போட்டியில் றாகம அணியினால் துடுப்பாட பணிக்கப்பட்ட சோனகர் கழக அணி சரித்த குமாரசிங்க பெற்றுக் கொண்ட சதத்தின் (103) உதவியோடு முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்களை குவித்தது. றாகம அணியில் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்திய தேசிய அணியின் சுழல் வீரரான அமில அபொன்சோ 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

15ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில்

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 15ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை…

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த றாகம அணி, போட்டியின் முதல் நாள் நிறைவில் 4 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 337 (84.2) – சரித்த குமாரசிங்க 103, இரோஷ் சமரசூரிய 60, அமில அபொன்சோ 3/117

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 4/0 (4)


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC

SSC அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் SSC அணியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதல் நாள் ஆட்ட நிறைவில் முதல் இன்னிங்சுக்காக 273 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் வலுவான நிலையில் உள்ளது. கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக அணியினை சங்கீத் கூரே மற்றும் ஹஷான் துமிந்து ஆகியோர் தங்களது சதங்களின் மூலம் பலப்படுத்தியிருந்தனர். மறுமுனையில் SSC அணிக்காக சசித்ர சேனநாயக்க 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: SSC v Colts CC – Major League Tier “A” Tournament 2018/2019

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 273/6 (88) – சங்கீத் கூரே 119, ஹஷான் துமின்து 119, சசித்ர சேனநாயக்க 4/66


இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

தமிழ் யூனியன் கழகத்தின் சொந்த அரங்கான P. சரவணமுத்து மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாடியது. முதலில் துடுப்பாடிய இராணுவப்படை அணிக்கு சஞ்சிக்க ரித்ம, அஷான் ரந்திக்க, துஷான் விமுக்தி மற்றும் தில்ஷான் டி சொய்ஷா ஆகியோர் அரைச்சதங்களுடன் பெறுமதி சேர்த்தனர். இதனால், போட்டியின் முதல் நாள் நிறைவில் இராணுவப்படை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து தமது முதல் இன்னிங்ஸிற்காக 299 ஓட்டங்களை குவித்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 299/8 (89.4) – சஞ்சிக்க ரித்ம 64, அஷான் ரந்திக்க 53, துஷான் விமுக்தி 50, டில்சான் டி சொய்ஸா 51, சச்சித்ர சேரசிங்க 2/54

இன்று ஆரம்பமான அனைத்துப் போட்டிகளினும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க