ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் ஒத்திவைப்பு

90

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தென் கொரியாவில் நடைபெற இருந்த ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆட்கொல்லி நோய் விளையாட்டு உலகத்தையும் விட்டு வைக்கவில்லை

கொரோனா பிடியில் ஒலிம்பிக்: அதிரடி தீர்மானத்துக்கு தயாராகும் ஜப்பான்

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக….

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச கிரிக்கெட், கால்பந்து, ஹொக்கி, றக்பி, மோட்டார் பந்தயம், டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், தேசிய அளவிலான பல போட்டிகளும் இரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.

அடுத்த சில வாரங்களுக்கு விளையாட்டு போட்டிகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தென்கொரியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 12ஆவது ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி லக்ஷ்மி விக்டோரியா தெரிவித்தார்.

இதுதொடர்பாக லக்ஷ்மி விக்டோரியா கூறுகையில், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாங்கள் ஒரு திட்டமிடப்பட்ட திகதியுடன் பணிபுரிந்து வந்தோம். ஆனால், உலகெங்கிலும் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் நேரத்தை எடுத்துக்கொள்வோம்

குறிப்பாக, ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் இந்த ஆண்டின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டால் மற்றைய நாடுகளுக்கு அது நெருக்கடியாக இருக்கும். ஏனெனில், அந்தக் காலப்பகுதியில் தென்கொரியா மிகவும் குளிராக இருக்கும்

மேலும், பெரும்பாலான நாடுகளுக்கு நிலைமைகள் பொருத்தமாக இருக்காது. எனவே, குறித்த போட்டித் தொடரை பிறிதொரு நாட்டில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்த” என்று அவர் கூறினார்.

தற்போது கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, நாங்கள் ஆசிய வலைப்பந்தாட்டத் தொடருக்கான தேசிய அணியின் பயிற்சி முகாத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்

ஆனால், வீரர்கள் தங்கள் சொந்த பயிற்சியை வீட்டிலிருந்து செய்யும்படி கேட்டுள்ளோம். தேவைப்பட்டால் நாங்கள் அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கியுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி 2021 வரை ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இவ்வருடம்……

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய வலைப்பந்தாட்ட தொடரை முன்னிட்டு ஸ்தாபிக்கப்பட்டு வந்த பயிற்சி முகாம்கள் அனைத்தையும் எதிர்வரும் ஒரு மாதத்துக்கு இரத்து செய்வதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரை முன்னிட்டு கடந்த 2 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்து பயிற்சிகளை எடுத்து வந்த அனைத்து வீராங்கனைகளையும் உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இறுதியாக, கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி சம்பியனாகத் தெரிவாகியிருந்ததுடன் இதுவரை 5 தடவைகள் இலங்கை அணி இந்த சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<