Home Tamil இந்தியாவை வீழ்த்தி அபாரம் காண்பித்த இலங்கை!

இந்தியாவை வீழ்த்தி அபாரம் காண்பித்த இலங்கை!

Asia Cup 2022

500

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசியக்கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றுப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது. இலங்கை அணி மாற்றங்களின்றி களமிறங்க, இந்திய அணி ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை இணைத்திருந்தது.

ரஷீட் கான் – குணத்திலக்க இடையே என்ன நடந்தது?

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் கே.எல்.ராஹுல் மற்றும் விராட் கோஹ்லி ஆகிய முன்னணி வீரர்கள் முதல் 3 ஓவர்களுக்குள் முறையே டில்ஷான் மதுசங்க மற்றும் மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தாலும், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவர்கள் இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்த்து சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடிய நிலையில், ரோஹித் சர்மா 41 பந்துகளுக்கு 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்போது இந்திய அணி 110 ஓட்டங்களுக்கு தங்களுடைய 3வது விக்கெட்டினை இழந்தது.

தொடர்ந்து தசுன் ஷானக வீசிய ஓவரில் 34 ஓட்டங்களுடன் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இலங்கை அணியை பொருத்தவரை கடைசி 5 ஓவர்களை சிறப்பாக வீசி 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

எனவே இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றாதமை அணிக்கு ஏமாற்றமாக இருந்தாலும், டில்ஷான் மதுசங்க 3 விக்கெட்டுகளையும், தசுன் ஷானக மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிசார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் அரைச்சதங்களை கடந்தது மாத்திரமின்றி முதல் விக்கெட்டுக்காக 97 ஓட்டங்களை பகிர்ந்தனர். இவர்களின் துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை சிறந்த நிலையை அடைந்திருந்தாலும், இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் இலங்கை அணி தடுமாறியது.

பெதும் நிஸ்ஸங்க 52 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, மத்தியவரிசையில் 10 தொடக்கம் 15 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், இறுதியாக பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் ஷானக ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. தசுன் ஷானக 18 பந்துகளில் 33 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 17 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது சுபர் 4 சுற்றில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட பெற்றிருக்கிறது. நாளைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால், இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Result


Sri Lanka
174/4 (19.5)

India
173/8 (20)

Batsmen R B 4s 6s SR
KL Rahul lbw b Maheesh Theekshana 6 7 1 0 85.71
Rohit Sharma c Pathum Nissanka b Chamika Karunaratne 72 41 5 4 175.61
Virat Kohli b Dilshan Madushanka 0 4 0 0 0.00
Suryakumar Yadav c Maheesh Theekshana b Dasun Shanaka 34 29 1 1 117.24
Hardik Pandya c Pathum Nissanka b Dasun Shanaka 17 13 0 1 130.77
Rishabh Pant c Dilshan Madushanka b Pathum Nissanka 17 13 3 0 130.77
Deepak Hooda  b Dilshan Madushanka 3 4 0 0 75.00
Ravichandran Ashwin not out 15 7 0 1 214.29
Bhuvneshwar Kumar b Chamika Karunaratne 0 2 0 0 0.00
Arshdeep Singh not out 1 1 0 0 100.00


Extras 8 (b 0 , lb 0 , nb 1, w 7, pen 0)
Total 173/8 (20 Overs, RR: 8.65)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 4 0 24 3 6.00
Maheesh Theekshana 4 0 29 1 7.25
Chamika Karunaratne 4 0 27 2 6.75
Asitha Fernando  2 0 28 0 14.00
Wanidu Hasaranga 4 0 39 0 9.75
Dasun Shanaka 2 0 26 2 13.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Rohit Sharma b Yuzvendra Chahal 52 37 4 2 140.54
Kusal Mendis lbw b Yuzvendra Chahal 57 37 4 3 154.05
Charith Asalanka c Suryakumar Yadav b Yuzvendra Chahal 0 3 0 0 0.00
Danushka Gunathilaka c KL Rahul b Ravichandran Ashwin 1 7 0 0 14.29
Bhanuka Rajapaksa not out 25 17 0 2 147.06
Dasun Shanaka not out 33 18 4 1 183.33


Extras 6 (b 2 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 174/4 (19.5 Overs, RR: 8.77)
Bowling O M R W Econ
Bhuvneshwar Kumar 4 0 30 0 7.50
Arshdeep Singh 3.5 0 40 0 11.43
Hardik Pandya 4 0 35 0 8.75
Yuzvendra Chahal 4 0 34 3 8.50
Ravichandran Ashwin 4 0 32 1 8.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<