லங்கா T10 சுப்பர் லீக் பிளே ஒப் சுற்றில் ஆடும் அனைத்து அணிகளும் உறுதி

Lanka T10 League 2024

73
Lanka T10 League 2024

லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஏழாம் நாள் (17) ஆட்டத்தில் குழுநிலை மோதல்கள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன.

>>இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்<<

கொழும்பு ஜக்குவார்ஸ் எதிர் ஜப்னா டைடன்ஸ்

குசல் மெண்டிஸ் மைதானத்தினை பௌண்டரிகளால் அலங்கரிக்க கொழும்பு ஜக்குவார்ஸ் அணியினை ஜப்னா டைடன்ஸ் 9 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தியது. மேலும் இந்த வெற்றியுடன் ஜப்னா தொடரில் தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. ஜப்னா அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த குசல் மெண்டிஸ் வெறும் 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டி சுருக்கம்

கொழும்பு – 99/8 (8) ரமேஷ் மெண்டிஸ் 28(16)*, துனித் வெல்லாலகே 3/5

 

ஜப்னா – 100/1 (5.1) குசல் மெண்டிஸ் 79(23)*

 

முடிவு – கொழும்பு 9 விக்கெட்டுக்களால் வெற்றி

கண்டி போல்ட்ஸ் எதிர் நுவரெலியா கிங்ஸ்

தொடரில் எந்த வெற்றிகளையும் பெறாத நுவரெலிய – கண்டி அணிகள் இடையிலான போட்டியில், கண்டி போல்ட்ஸ் அணியானது 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. கண்டி போல்ட்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய பெதும் நிஸ்ஸங்க வெறும் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளோடு 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

போட்டி சுருக்கம்

கண்டி போல்ட்ஸ் – 111/9 (10) பெதும் நிஸ்ஸங்க 41(14), கசுன் ராஜித 16/4(2)

 

நுவரெலியா கிங்ஸ் – 106/5 (10) அவிஷ்க பெர்னாண்டோ 50(26)*, திசர பெரேரா 11/2(2), அரினெஸ்டோ வெழா 29/2

கோல் மார்வல்ஸ் எதிர் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ்

இந்தப் போட்டியில் கோல் மார்வல்ஸ் வீரர்களினை ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியானது 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது. கோல் மார்வல்ஸ் அணி சார்பில் சகீப் அல்

ஹஸன் அசத்தல் துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களால் பெற்ற போதும் அது வீணாகியது.

போட்டி சுருக்கம்

கோல் மார்வல்ஸ் – 82/6 (10) சகீப் அல் ஹஸன் 43(19)*, தரிந்து ரத்நாயக்க 10/2(2), சஹான் ஆராச்சிகே 11/2(2)

 

ஹம்பாந்தோட்டை – 84/5 (9.2) மொசாதிக் ஹொசைன் 20(13)*, பினுர பெர்னாண்டோ 11/2(2)

 

முடிவு – ஹம்பாந்தோட்டை 5 விக்கெட்டுக்களால் வெற்றி

லங்கா T10 சுப்பர் லீக்கின் குழுநிலைப் போட்டிகள் யாவும் தற்போது நிறைவடைந்துள்ளதோடு, தொடரின் பிளே-ஒப் சுற்றுக்கு புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் முறையே காணப்படும் ஜப்னா டைடன்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ், கோல் மார்வல்ஸ் மற்றும் கண்டி போல்ட்ஸ் ஆகியவை தெரிவாகியிருக்கின்றன.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<