கிறிஸ்டல் பெலஸ் இலகு வெற்றி; இறுதி நேரத்தில் நிகம்பு யூத்தை வீழ்த்திய பெலிகன்ஸ்

Champions League 2022

202

சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்து தொடரில் ஆறாவது வாரத்திற்காக ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற ஒரு போட்டியில் சுபர் சன் அணியை கிறிஸ்டல் பெலஸ் வீரர்களும், நிகம்பு யூத் அணியை பெலிகன்ஸ் வீரர்களும் வெற்றி கொண்டிருந்தனர்.

பெலிகன்ஸ் வி.க எதிர் நிகம்பு யூத் கா.க

குருணாகலை மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் பெலிகன்ஸ் அணிக்காக முதல் முறை களமிறங்கிய வெளிநாட்டு வீரர் சசா மூலம் அவ்வணி முதல் பாதியில் இரண்டு கோல்களைப் பெற்றது.

மறுமுனையில் நிகம்பு யூத் அணித் தலைவர் நிலூக ஜனித் அவ்வணிக்காக முதல் பாதியில் ஒரு கோலைப் பெற்றார்.

எனவே, பெலிகன்ஸ் அணியின் முன்னிலையுடன் ஆரம்பமான இரண்டாம் பாதியின் 25 நிமிடங்களுக்குள் பெலிகன்ஸ் வீரர் நப்ஷான் ஒரு கோலைப் பெற, நிகம்பு யூத் வெளிநாட்டு வீரர் அந்தோனி இரண்டு கோல்களை போட்டார். இதனால் ஆட்டம் சமநிலையடைந்தது.

தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்காக போராடிய நிலையில் போட்டியின் 89ஆவது நிமிடத்தில் சசா அடுத்த கோலையும் பெற்று தனது முதல் போட்டியிலேயே ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

எனவே, போட்டி நிறைவில் மேலதிக ஒரு கோலினால் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் 4-3 என வெற்றி பெற்றது.

முழு நேரம்: பெலிகன்ஸ் வி.க 4 – 3 நிகம்பு யூத் கா.க

சுபர் சன் வி.க எதிர் கிறிஸ்டல் பெலஸ் கா.க

சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் கிறிஸ்டல் பெலஸ் அணி 3 கோல்களைப் பெற்று முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதியிலும் அவ்வணி வீரர்கள் மேலும் இரண்டு கோல்களைப் பெற்று ஐந்து கோல்களால் முன்னிலை பெற்றனர்.

எனினும், இறுதி நிமிடங்களில் சுபர் சன் அணிக்காக கசுங்க இரண்டு கொல்களைப் பெற போட்டி நிறைவில் 5-2 என்ற கோல்கள் கணக்கில் கிறிஸ்டல் பெலஸ் வீரர்கள் இலகு வெற்றியைப் பதிவு செய்தனர்.

கிறிஸ்டல் பெலஸ் அணிக்காக அப்னாத் மற்றும் பஹ்மி ஆகியோர் தலா இரண்டு கோல்களையும் ஜிமோ இப்ராஹிம் ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: சுபர் சன் வி.க 2 – 5 கிறிஸ்டல் பெலஸ் கா.க

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<